

சங்கர் தான் செய்யாத செயலுக்காக தண்டணை வரும் நாளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். நாளும் நெருங்கிக் கொண்டே வந்தது. அவன் மிகவும் கவலையுடன் காணப்பட்டான்.
சங்கரைக் காண, அவன் நண்பன் சீனு ஆறுதல் கூற வீட்டிற்கு வந்திருந்தான். அவன் சங்கரிடம், "சத்தியம் ஜெயிக்கும்; நீ கண்டிப்பாக விடுதலை அடைவாய்" எனக் கூறி விடைபெற்று சென்றான்.
தீர்ப்பு சொல்லும் நாள் வந்தது. சாட்சிகள் அவனுக்கு எதிராக அமையவே தீர்ப்பு வந்தது. அவன் அதிர்ச்சி அடைந்தான். நீதிபதி "KILL HIM, NOT LEAVE HIM" என தீர்ப்பு எழுதி வழக்கை முடித்து வைத்தார். அந்த நகல் டைப் அடிக்கச் சென்றது.
டைப் அடிப்பவரோ வேலை அதிகம் காரணமாக சோர்வுடன் காணப்பட்டார். அந்த நகல் அவரிடம் டைப் அடிக்க வந்தது. அவரும் நகலை டைப் அடிக்க ஆரம்பித்தார். KILL HIM, NOT LEAVE HIM என்பதற்கு பதிலாக KILL HIM NOT, LEAVE HIM என கமாவை தள்ளிப் போட்டு டைப் அடித்து காப்பியை ஜெயிலருக்கு அனுப்பி வைத்தார்.
ஜெயிலரும் அந்த நகலைப் படித்து, நிரபராதி என கருதி வீட்டிற்கு அனுப்பி வைத்தார். சங்கரும் என்ன நடந்தது என்னவெனத் தெரியாமல் சந்தோஷமாக வீட்டிற்கு வந்தான். சத்தியம் ஜெயிக்கும் என நண்பன் கூறியது நினைவுக்கு வந்தது. அவனைக் கண்டு அவனது பெற்றோர்கள் கட்டிப்பிடித்து மகிழ்ச்சி அடைந்தனர்.
எனவே குட்டீஸ், கமா, ஃபுல் ஸ்டாப்புகளை சரியான இடத்தில் போட வேண்டும்.