சிறுவர் சிறுகதை: நரியின் கண்ணீர் கதை!

crow and fox
Tamil children story: crow and foxImg credit: AI Image
எம். ஆர். ஆனந்த்

I am a retired Bank officer. I have written articles in English for News Papers. I have written poems in English and Tamil 

Updated on

ஒரு பாட்டி இட்லி, தோசை, வடை விற்பதற்கு ஒரு தட்டுக் கடை வெச்சிருந்தா. அங்கு, தினம் ஒரு காகம் வந்து இலவசமா ஒரு வடையை வாங்கிட்டு போகும். பாட்டிக்கும் அதுக்கும் அத்தனை சிநேகம். ஒரு நாள் ஒரு வடையை எடுத்து போயி நல்ல அரசமர கிளையை பாத்து காக்கா அமர்ந்தது.

அந்த பக்கமா வந்த ஒரு கிழ நரி வடைய வாசம் பண்ணிச்சு. மரத்தடியில் போயி அது நின்னு, "எப்படி இருக்கே காக்கா கண்ணு? வெயிட் பண்ணுரே எதுக்கு? வடைய துண்ணு" என சொல்லிச்சு.

"இப்பதான் மலையாள ஆயா சுட்டு தந்தாங்க. நான் அதை கவ்விக்கிட்டு தூக்கியாந்துட்டேன். அரச மர காத்துல வடை ஆற காத்திருக்கேன்" என காகம் சொல்லுச்சு. நரி இத கேட்டதும், நாக்கில் ஜலம் ஊற, மனதில் ஒரு பிளான் போட்டது.

நரி தன் தேன் கலந்து குரலில், "உனக்கு சிரமம் வேண்டாம் சிங்காரி.. தாத்தன் நான் எதுக்கு இருக்கேன். அத நீ கீழே போடு. நான் ஊதி, ஊதி ஆத்தி தருவேன்" என சொல்லுச்சு.

நம்பி வடைய கீழே போட்டுது காக்கா. நரி அதை எடுத்துட்டு ஓடியது. கண்கள் கலங்கி இட்லி பாட்டியிடம் போயி காகம் கரைஞ்சு நரியிடம் ஏமாந்ததை பற்றி சொல்லுச்சு.

பாட்டிக்கு வந்தது கடுங்கோபம். "நாளைக்கு இருக்கு நரிக்கு. நல்ல பாடம் கட்டலாம்; முடிக்கிறேன் பார் அவன் கதைய" என சொல்லிக்கொண்டு, மறுநாள், மிளகாய் பொடிய மாவில் கலந்து ஸ்பெஷலா ஒரு வடய சுட்டாங்க. மறுநாளும் நரி அந்த வழியே வந்தது.

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: நிழலைத் தேடி...
crow and fox

"என் தாத்தா நரியே.. வாங்கிக்க. நானே தாரேன்" என சொல்லி வடைய போட்டது காகம். நரி முன்வந்து வடையை கடிச்சு தின்ன ஆரம்பிச்சதும், அவன் நாக்கு கரிஞ்சு போச்சு; பற்றி எரிஞ்சு காது மூக்கிலிருந்து புகை வந்துச்சு. வளைஞ்சு ஊஊவுன்னு ஊளையிட்டபடி சும்மா துடிச்சு, ஆள வுட்டாப்போதும்னு தெறிச்சு ஓடினான். காக்காவின் வயிறு சிரியோ சிரின்னு சிரிச்சு புண்ணாச்சு.

தேடி அலைஞ்சு ஒரு குளத்தில் குதிச்சு, நாலு லிட்டர் தண்ணி குடிச்சு கார தீயினை அணைத்தது நரி. நாக்கு நார்மலாக நரிக்கு நாலு வாரம் ஆச்சு.

வடை மேல் இருந்த அதன் மோகம் அடியோடு போச்சு. இனி யாரும் வடைய தங்க தட்டில் வெச்சு கொடுத்தாலும், "வடை வேண்டாம்; வாய் வெந்து போகும்" என நரி சொல்லும்.

logo
Kalki Online
kalkionline.com