சிறுவர் பாடல்: யானை பாட்டு!

Elephant
Elephants Img credit: AI Image
Updated on

யானை அம்மா யானை 

வயிறு மெகா பானை   

கால்கள் இல்லை அதன் கால்கள்  

திருமலை நாயக்கர் மஹால் தூண்கள் 

தந்தங்கள் வீர சிவாஜி வாள்கள்  

தோய்க்கிற கல்லாட்டம் தோள்கள் 

காதுகள் அரிசி புடைக்கும் முறங்கள்

அதுக்கு இல்லை இரண்டு கரங்கள் 

ஒன்று தான் உண்டு அதன் பெயர் துதிக்கை  

அதை வெச்சுதான் முடிக்குது பலர் கணக்கை  

அவன் வாலு இருக்கே வாலு அது முள்ளு சாட்டை 

செய்ய கூடாது அவன் பின்னாடி நின்னு சேட்டை 

விட்டு அதனால் ஒரு அடி சும்மா சுழட்டி 

கொடுத்துடுவான் கண்ணையும் மூக்கையும் கழட்டி 

அஞ்சமாட்டான் மாட்டான் வேங்கை புலிக்கு 

ஆனா பய பயந்து சாவான் சுண்டெலிக்கு    

உயரம் பத்தடி எடை கிலோ ஏழாயிரம்   

பல்லு குத்தும் குச்சி போலிருப்பான் பாகன் கண்ணாயிரம் 

கோபமாய் பார்த்தாலே போதும் அவன் ஆனை ஒண்ணுக்கு போயிரும் 

தான் எத்தனை பெரிய மிருகம் என்ற ஆனையின் ஆணவம்  

அந்த நோஞ்சான் கை அங்குசம் முன்னாடி கரைஞ்சு போயுடும் 

தான் படும் அடி உதை அவமானம் யாவையும் 

யானை மறக்காது வெச்சிருக்கும் சேத்து ஞாபகம் 

ஒரு நாள் எரி  மலையாய் கோபம் வெடிக்கும் 

குத்தி தந்தத்தால் பாகன் கதை முடிக்கும் 

பின்பு வருந்தி தன் செயலுக்கு கண்ணீரும் வடிக்கும். 

logo
Kalki Online
kalkionline.com