

யுவனுக்கு சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் மீது கொள்ளை ஆசை. இந்தியா ஆடும் மேச் என்றால் அவன் 4 அல்லது 5 வயதிலேயே பார்ப்பான். அவருக்கு சச்சின், கங்குலி மற்றும் ஹர்பஜன் சிங் என்றால் ரொம்ப பிடிக்கும்.
அப்பா அவனை ஊக்குவித்தார். ஒரு பிளாஸ்டிக் பேட் மற்றும் ஒரு பிளாஸ்டிக் பந்து வாங்கி தந்தார்.
யுவன் தூள் கிளப்பினான்.
பேட்ஸ் மேன் தான். ஆனால் பெளலிங்கும் வந்தது, ஸ்பின் பெளலிங்கும் போடுவார்.
அப்பா யுவனை கோச்சிங் கேம்ப்பில் சேர்த்து விட்டார்.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை கோச்சிங் நடக்கும். ஒவ்வொரு வாரமும் அப்பா யுவனை கோச்சிங் கேம்ப்பில் விட்டு விட்டு தான் தனது அலுவலகம் செல்வார்.
இரண்டு மணி நேரம் பயிற்சி நடக்கும். பிறகு அம்மா சென்று யுவனை கூட்டி வருவார்.