சிறுவர் சிறுகதை : 'ஆல்-இன்-ஆல்' வாட்ச்...!

Happy family
Happy familyImg credit: AI Image
Published on

2116 லீப் வருடம். விவி 13 வயது சிறுமி. சப்பூ 9 வயது சிறுவன். இருவரும் பயங்கர புத்திசாலிகள். அப்பா சத்தி இஸ்ரோவில் மென்பொருள் பொறியாளர். அம்மா பென். அவரும் இஸ்ரோவில் விஞ்ஞானி. விவி மற்றும் சப்பூ இஸ்ரோவில் ஜுனியர் விஞ்ஞானி பட்டம் பெற்றவர்கள்.

பிப்ரவரி 29. இன்று அவர்கள் திருமண நாள். எல்லோரும் கொண்டாட ஆர்வமாக இருந்தார்கள். மொட்டை மாடியில் ஷேமியானா போடப்பட்டது. சுமார் 150 நாற்காலிகள் போடப்பட்டன.

‘ஆல் விட்டா..’ இது ஒரு குளிர் பானம். எல்லா வைட்டமின்களும் உடைய குளிர் பானம். எனர்ஜி ட்ரிங்க்ஸ். சத்தி 150 சமோசாவும் மற்றும் 300 கொழுக்கட்டைகளுக்கும் ஆர்டர் செய்துவிட்டார்.

மணி 10. எல்லோரும் வர ஆரம்பித்துவிட்டார்கள். விவி மற்றும் சப்பூ எல்லோரையும் உட்கார வைத்தார்கள். ஏராளமான பரிசு பொருட்கள் கிடைத்தன. அதன் பொறுப்பை விவி ஏற்றுக்கொண்டாள்.

ஆடல் - பாடல் சிறப்பாக நடைபெற்றது. சப்பூ பெண் வேடத்தில் வந்து பரதநாட்டியம் ஆடி அசத்தினார்.

சத்தி - பென் திருமணம் காதல் திருமணம். ஒரு லீப் வருடத்தில் பிப்ரவரி 29 அன்று நடந்தது. இதனால், இவர்களது திருமண நாள் நான்கு வருடங்களுக்கு ஒரு முறைதான் வரும். எனவே, சிறப்பாகக் கொண்டாடுவார்கள். இரண்டு மணி நேரத்தில் எல்லாம் முடிந்தது.

மதியம் சத்தி-பென், விவி மற்றும் சப்பூவை காரில் ஒரு மாலுக்கு கூட்டிச் சென்றனர். அங்கு அப்பா, அம்மா இரண்டு வாட்ச் எடுத்துப் பார்த்தார்கள்.

இருவரும் ஒரே நேரத்தில் ஒரு முடிவுக்கு வந்தனர். ஆம் இரண்டு ஆல்-இன்-ஆல் வாட்ச் வாங்கினார்கள். பணம் இல்லை. வொர்க் கார்டு 5*. இதுதான் அதிகப்பட்ச சம்பளம்.

இதையும் படியுங்கள்:
வேற்றுக் கிரகவாசிகள் ஏன் நம்மிடம் பேசுவதில்லை... விஞ்ஞானிகள் உடைக்கும் மர்மம்!
Happy family

நால்வரும் காரில் வீடு வந்து சேர்ந்தார்கள். இருவரும் விவி மற்றும் சப்பூவிற்கு இரண்டு வாட்சையும் பரிசளித்தார்கள். கூடவே மேனுவல் (manuel) புத்தகம் கொடுத்தார்கள். இருவரும் முதலில் மேனுவல் புத்தகம் படித்துவிட்டு வாட்ச்சை உபயோகப்படுத்தச் சொன்னார்கள்.

மதிய உணவு முடித்து விவி மற்றும் சப்பூ வாட்ச்சைக் கட்டிக்கொண்டார்கள். பிறகு இருவரும் விவி அறைக்குள் சென்று மேனுவல் புத்தகம் படிக்க ஆரம்பித்தார்கள். 'அட.. இவ்வளவு விஷயங்களை இந்தச் சின்ன வாட்ச் செய்யுமா?' என அதிசயப்பட்டார்கள். இருவரும் 1 மணி நேரம் எடுத்துக்கொண்டார்கள்.

இனி என்ன… ?

வாட்ச்சில் பக்கமாக 4 பொத்தான்கள் இருந்தன. அதே மாதிரி அடுத்த பக்கம் 4 பொத்தான்கள் இருந்தன. நடுவில் ஒரு பெரிய பொத்தான்.

முதலில் இருவரும் ரெடியாகி நடுவில் உள்ள பொத்தானை அழுத்தினார்கள்.

நல்வரவு... எல்லாம் நார்மல்! என்று இருவருக்கும் ஒரே செய்திதான் வந்தது.

சப்பூ விவியிடம் அடுத்து நாம் இதயத்தை பார்ப்போம். 3-வது பொத்தானை அழுத்தினார்கள். ‘இதய துடிப்பு 74 நார்மல்.’

இது விவியின் வாட்ச்...! ‘இதய துடிப்பு 72... நார்மல்.’

இது சப்பூ வாட்ச். சப்பூ விவியிடம் சொல்லிவிட்டு 5 நிமிடங்கள் மேலே குதித்தான். விவிக்கு சப்பூவின் திட்டம் நன்கு புரிந்தது. ‘இதய துடிப்பு 90... அதிகம். உடனே ரிலாக்ஸ் செய்யுங்கள். டீப் ப்ரித்… பலமுறை.’

சப்பூ ‘வாவ்’ என்று குதித்தார்.

அடுத்து விவி 7வது பொத்தானை அழுத்தினார். ‘சர்க்கரை 120... நார்மல்.’

இதையும் படியுங்கள்:
கருந்துளைக்குள் விழுந்தால் என்னவாகும்?
Happy family

இப்படி இரண்டு மணி நேரம் இருவரும் ஆல்-இன்-ஆல் வாட்ச்சைப் பரிசோதனை செய்தார்கள். இரவு 9 மணி. இருவரும் நடு பொத்தானை அழுத்தினார்கள். ‘குட் நைட். சாப்பிட்டுவிட்டு ஆல்- விட்டா குடியுங்கள்.’ என்று இருவருக்கும் ஒரே செய்திதான்.

இருவரும் சாப்பிட்டு விட்டு வாட்ச்சிற்கு வந்தார்கள்.

‘உணவு போதும்... ஆல்-விட்டா போதும்... ஒரு தம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு தூங்குங்கள்.’

22-ம் நூற்றாண்டில் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு… ஆல்-இன்-ஆல் வாட்ச்..!

இனி வரும் நூற்றாண்டுகளில் ஆல்-இன்-ஆல் வாட்ச் இல்லையென்றால் வாழ்க்கையில் எதுவுமே இல்லை என்ற நிலைமை வரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com