தஞ்சை என்றாலே கலைகள் தான் நினைவுக்கு வரும். அந்த வகையில் தஞ்சையின் கலைப் புகழை பறை சாற்றுவதில் தஞ்சாவூர் தட்டு என்றழைக்கப்படும் கலைத்தட்டுக்கும் சிறப்பிடம் உண்டு.
கல்லூரி விழாக்கள், பாராட்டு நிகழ்ச்சிகள், பள்ளி விழாக்கள், அரசியல் விழாக்கள் போன்ற பல இடங்களில் இந்த கலைத் தட்டை நினைவு பரிசாக வழங்குவார்கள்.
இத்தட்டுகளை இரண்டாம் சரபோஜி மன்னர் (1777-1832) மராட்டிய ஆட்சி காலத்தில் அறிமுகம் செய்தார். பித்தளை தட்டு நடுவில் தூய வெள்ளியில் செய்யப்பட்ட வட்டமான ஒரு தெய்வ உருவம். சுற்றிலும் வெள்ளியும், செம்பும் கலந்த உலோகத்தில் வார்க்கப்பட்ட அலங்கார வளைவுகள் கொண்ட கலைத்தட்டு இது.
250 ஆண்டுகளாக இந்த கலைத் தட்டு பணி நடக்கிறது.
ஓவியத்தட்டின் அடித்தட்டில் அலங்கார வேலையினாலும், புடைப்பு வடிவில் பூக்கள் பிற வடிவங்கள் செதுக்கியும், இறுதியில் பளபளப்பு செய்து உற்பத்தி முடிவடையும்.
இந்த ஓவியத்தட்டுகள் உள்நாடு, வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகிறது.
முன்பு வட்டவடிவிலும், இப்போது சதுரம், முக்கோணம் வடியிலும் தயாரிக்கபடுகின்றன.
இது சுற்றுச்சூழல் எதுவும் பாதிக்காமல் தயாரிப்பதால் மாசு படுவது இல்லை.
இந்த கலைத்தட்டுக்கு உலக அங்கீகாரம் கிடைக்கும் வகையில் புவிசார் குறியீடும் பெற்றுள்ளது.