இரண்டாம் உலகப் போர் தந்த உலகை மாற்றிய கண்டுபிடிப்பு!

டிசம்பர் 2- உலக கணினி எழுத்தறிவு தினம்!

World Computer Literacy Day
Computer
Published on

லகப்போரின் காரணமாக உலகில் எல்லா நாடுகளும் முடங்கிப் போயின. ஏராளமான மக்கள் கடும் துன்பத்திற்குள்ளாயினர். எனினும் இந்த போர்கள் உலகிற்கு பல புதிய கண்டுபிடிப்புகளை வழங்கின. அவற்றின் மூலம் மக்களின் வாழ்வாதாரம் அன்று முதல் இன்று வரை உயர்ந்து வருகிறது. அந்த கண்டுபிடிப்புகளில் மிக முக்கியமான ஒன்றுதான் எலெக்ட்ரானிக் கம்பியூட்டர். 1943 ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் இது கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் உக்கிரமான காலகட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கம்ப்யூட்டரின் பெயர். "கொலாசஸ்" மிகப்பெரிய உருவத்தில் இருந்ததால் இவ்வாறு அழைக்கப்பட்டது.

போர் காலத்தில் இந்த கண்டுபிடிப்பு ரகசியமாக வைக்கப்பட்டது. பின்னர் 1945 ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர்தான். இந்த கண்டுபிடிப்பு பொது மக்கள் பார்வைக்கு வந்தது. உலகப்போர் சமயத்தில் ஜெர்மனி பயன்படுத்திய ரகசிய சங்கேத வார்த்தைகளை கண்டுபிடித்து  ஜெர்மனியை தோற்கடிக்க இங்கிலாந்து நாட்டிற்கு இந்த கம்பியூட்டர் உதவியது.

இந்த கம்பியூட்டர் கண்டுபிடிக்க மூளையாக செயல்பட்டவர். கணினியின் தந்தை என்று கருதப்படுபவர், சார்லஸ் பாபேஜ் ஒரு ஆங்கில கணிதவியலாளர் மற்றும் கண்டுபிடிப்பாளர் ஆவார், அவர் 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஒரு இயந்திர பொது-நோக்கு கணினியின் யோசனையை உருவாக்கினார். அவரது மிகவும் பிரபலமான படைப்பு, "பகுப்பாய்வு இயந்திரம்", பல்வேறு கணித கணக்கீடுகளை தானாகவே செய்ய வடிவமைக்கப்பட்டது. பாபேஜ் தனது வாழ்நாளில் பகுப்பாய்வு இயந்திரத்தை முடிக்கவில்லை என்றாலும், அவரது அற்புதமான வேலை நவீன கணினிக்கு அடித்தளம் அமைத்தது. உலகின் முதல் நவீன கம்பியூட்டர் பெயர் "புரோகிராமர்".

உலகின் முதல் எலெக்ட்ரானிக் கம்பியூட்டர் பெயர் "இனியாக்" (ENAC) இதை கண்டறிந்தவர்கள் ஜான் மாக்லேயும், பிரஸ்பர் எக்கர்டும். இதன் எடை அப்போது 30 டன்கள். ஞாபகத்தில் வைத்துக் கொள்ளும் கம்பியூட்டரின் பெயர் "எட்சாக் ".இதை உருவாக்கியவர் வான் நியூமன். இதுவெல்லாம் முதல் மற்றும் இரண்டாம் தலைமுறை கம்பியூட்டர்கள்.

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: நான் ஒரு சேவல்!

World Computer Literacy Day

முதல் முறையாக விற்பனைக்கு வந்த கம்பியூட்டர் பெயர் "யூனிலாக்". கம்பியூட்டர்கள் பல தொழில் நுட்ப வளர்ச்சி கண்டு உருவத்தில் சிறியதாகவும். அதிவேகத்திலும் செயல்படும்  நிலையை தொட்டது. 1971  முதல் தற்போது வரை உள்ள கணினிகள் அனைத்தும் நான்காம் தலைமுறையைச் (Fourth Generation) சேர்ந்ததாகும்.  இதில் நுண்செயலி (Microprocessor) எனப்படும் தொழினுற்பம் பயன்படுத்தப்படுகின்றது.  இன்டெல் (Intel) நிறுவனத்தில் பணி புரிந்த டேட் ஹோப்ப் (Ted Hoff) என்பவர்தான் இதனைக் கன்னுடுபிடித்தார். இது ஒருங்கிணைச் சுற்றை (Integrated Circuit) விட மிக அதீத திறன்கொண்டதாக  நுண்செயலி (Microprocessor) விளங்குகின்றது. தற்போது 5வது தலைமுறை யுகத்தில்   கம்பியூட்டர் உள்ளது.

கம்பியூட்டர்களில் காப்பி பேஸ்ட் வசதியை கணினிகளில் ஏற்படுத்தி கொடுத்து" ஈ"அடிச்சான் காப்பி வழக்கத்தை நவீனப்படுத்தி கொடுத்தவர். லாரன்ஸ் டெஸ்லர் என்பவர். கம்பியூட்டர் கீபோர்டில்" F" மற்றும் "J" யின் கீழே மட்டும் ஒரு கோடு இருக்கும். இது வேகமாக எழுத்துக்களை டைப செய்வதற்காக கொண்டு வரப்பட்டது. இந்த மாற்றத்தை ஜீன் ஈ பாட்டிச் என்பவர் கொண்டு வந்தார். 2002 ஆம் ஆண்டு வரை கம்ப்யூட்டர் கீபோர்டில் உள்ள F மற்றும் J கீயின் மீது எந்த ஒரு கோடும் இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com