மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

bamboo
Bamboo
Published on

மூங்கில் என்பது மிக வேகமாக வளரும், எளிதான ஒரு தாவரமாகும். இது கட்டுமானம், துணிகள், உணவு மற்றும் எரிபொருள் உள்ளிட்ட எண்ணற்றப் பயன்பாடுகளைக் கொண்ட மிகவும் பல்துறை திறன் கொண்ட பொருளாகும்.

மூங்கில் வெட்டப்படும்போது விரைவாக மீண்டும் வளரும். பெரும்பாலான இனங்கள் 3-5 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும். இது வெப்பம் மற்றும் மிதமான சூழல்களில் வளரும் தன்மை கொண்டது. மேலும், இந்த மரம் மிகவும் உறுதியாக வளரக்கூடியது. இது நன்கு வளர இயற்கை உரங்கள் அல்லது களைக்கொல்லிகள், பூச்சிக்கொல்லிகள் அல்லது வேதியியல் உரங்கள் தேவையில்லை.

இது மற்ற மரங்களைவிட அதிக ஆக்ஸிஜனை உருவாக்குகிறது. மற்றும் வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன், மற்றும் கார்பன் டை ஆக்சைடு சமநிலையில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதற்கு நீர்ப்பாசனம் தேவையில்லை. இது மண் அரிப்பைத் தடுக்க சிறந்தது. 

இன்று, உலகில் அதிகமான மக்கள் மூங்கில் வீடுகளில் வசிக்கின்றனர். மூங்கில்கள் 16 டன் எடையுள்ள லாரிகளைத் தாங்கும் திறன்கொண்டது.

சீனாவில், கருப்பு மூங்கில் தளிர்களிலிருந்து பெறப்படும் பொருட்கள் சிறுநீரக நோய்களுக்குச் சிகிச்சையளிக்க உதவுகின்றன. வேர்கள் மற்றும் இலைகள் புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தோனேசியாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் உள்ள அறிக்கைகளின்படி, மூங்கில் பக்க கிளைகளிலிருந்து பெறப்படும் நீர் எலும்பு நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயனுள்ளதாக உள்ளது.

மூங்கில் வலுவான மற்றும் நீடித்த துணியாகவும், அனைத்து வகையான ஆடைகளாகவும் தயாரிக்கப் பயன்படுகிறது. கூடுதலாக, மூங்கில் துணி சுவாசிக்கக்கூடியது, வெப்பத்தை ஒழுங்குபடுத்துகிறது, பாலியஸ்டர் செயல்திறன் துணிகளைவிட ஈரப்பதத்தை சிறப்பாக உறிஞ்சுகிறது. இது உங்களை பருத்தி அல்லது பாலியஸ்டர் துணிகளையும்விட காற்றோட்டமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்கும்.

இதையும் படியுங்கள்:
தென்னையின் சிறப்புகள் பற்றித் தெரியுமா குட்டீஸ்..!
bamboo

மூங்கில் கழுத்தணிகள், வளையல்கள், காதணிகள் மற்றும் பிற வகையான நகைகளை தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

மூங்கில் அதிக அளவு புரதம் மற்றும் மிகக் குறைந்த அளவு கார்போஹைட்ரேட்டுகளைக் கொண்டுள்ளது. இதனால் இந்தத் தாவரம் பல விலங்குகளுக்கு உணவாகவும் உள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com