சாதாரண கல்லும் சிலையாகும் ரகசியம்! மாணவர்களே! உங்களை நீங்களே செதுக்கிக்கொள்ள ஒர் அரிய வாய்ப்பு!

A stone become a statue and a stepping stones
School students life lesson
பெ. சிவக்குமார்

வணக்கம்!  என்னுடைய பெயர் பெ.சிவக்குமார். விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள குலசேகரநல்லூர் என்னும் குக்கிராமத்தில் இருந்து எழுதி வருகிறேன்.நான் பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே தமிழ் மொழியில் எனக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. கல்லூரிக்கு வந்த பிறகு தான் கவிதை, கட்டுரை, சிறுகதை போன்றவைகளை  எழுத சிறப்பாகக் கற்றுக் கொண்டேன்.  கவிதை, கட்டுரை, சிறுகதை போன்ற எல்லாப் போட்டிகளிலும் கலந்து கொண்டு மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் பல பரிசுகளைப் பெற்றுள்ளேன். என்னுடைய எழுத்துகள் எப்பொழுதும் வாசகர்களின் மனதில் “பசுமரத்தாணி போல” பதியுமாறுதான் எழுதுவேன்.  என்னுடைய படைப்புகள் அனைத்தும் கரிசல் மண் சார்ந்தவைகளாக இருக்கும். என்னுடைய படைப்புகளை வெளியிடும் கல்கி குழுமத்திற்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை உரித்தாக்கிக்கொள்கிறேன்.

Updated on

ரு நாள் இரண்டு கற்கள் பேசிக் கொண்டன.

ஒரு கல் கேட்டது: "நாம் இருவரும் ஒரே கல்லில் இருந்து தான் வந்தோம். ஆனால் நான் மட்டும் இப்படி படிக்கலாக இருக்கிறேனே? ஆனால் நீ கருவறையில் கற்சிலையாக இருக்கிறாய். இது எப்படி சாத்தியம்?"

அதற்கு மற்றொரு கல் சொன்னது: "என்னை சிற்பி செதுக்கும் போது அவருக்கு நான் வளைந்து, நெளிந்து ஈடு கொடுத்ததால் தான், இன்று என்னை ஒரு சிற்பமாக கருவறையில் வைத்து பலவகையான உணவுப் பொருள்களாலும், ஆடை அணிகலன்களாலும் அலங்கரிக்கவும், அபிஷேகமும் செய்கிறார்கள். நீ எதற்கும் வளைந்து, நெளிந்து கொடுக்காமல் இருந்ததால் தான், உடைபட்டு போய் இன்று படிக்கல்லாக இருக்கிறாய். உன்னை வைத்து எல்லா மக்களும் உன் மேல் ஏறி மிதித்து நடந்து போகிறார்கள்."

இதையும் படியுங்கள்:
Bullock lost ; Lesson learnt!
A stone become a statue and a stepping stones

வாழ்க்கைக்குப் பொருத்தம்:

பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களே! (Student life) இந்த கதையை நீங்கள் ஒரு அறிவுரையாக எடுத்துக் கொள்ளலாம். உங்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள் தான் சிற்பிகள் நீங்கள் ஒவ்வொருவரும் வைரக் கற்கள்.

உங்களை ஆசிரியர்கள் கல்வி என்னும் ஆயுதத்தால் செதுக்கும் போது நீங்கள் அவர்களுக்கு வளைந்து, நெளிந்து கொடுத்து அவர்கள் சொற்படி கேட்டு நடந்தால் மட்டுமே, நீங்களும் இந்தச் சமூகத்தில் ஒரு நல்ல ஆளுமையாக வர முடியும்.

அவ்வாறு இல்லாமல் ஆசிரியர்களுக்கு அடிபணியாமல் இருந்தால் நீங்கள் இந்த சமுதாயத்தில் ஏற்றுக் கொள்ளப்படாமல் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டிருப்பீர்கள்.

நீங்கள் எந்த கல்லாக இருக்க வேண்டும் என்பதே நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

logo
Kalki Online
kalkionline.com