காட்டுக்குள் சுற்றுலா... மயக்குதே மசாய் மாரா!

மசாய் மக்கள்
மசாய் மக்கள்

* கென்யாவில் உள்ள மசாய் மாரா கேம் ரிசர்வ் ஆப்பிரிக்காவின் மிகவும் பிரபலமான வனவிலங்கு சரணாலயங்களுள் ஒன்றாகும்.

* நைரோபியிலிருந்து 5 மணிநேர பயணத்தில் தென்மேற்கு கென்யாவில் ‘மசாய் மாரா’ கேம் ரிசர்வ் அமைந்துள்ளது. இது தான்சானியா மற்றும் கென்யாவில் சுமார் 25,000 கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.

* மசாய் மாரா 1961ஆம் ஆண்டு வனவிலங்கு சரணாலயமாக அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. மேலும், இந்த இடமானது  பல்லுயிர் நிறைந்த 1,510 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை உள்ளடக்கியது.

* பொதுவாகவே மாசாய் மக்கள் ‘மா’ என்ற பெயரால் அழைக்கப்பட்டு வருகின்றனர். மேலும், இப்பகுதியின் உள்ளூர்வாசிகள் வலுவான கலாச்சார பாரம்பரியத்தைப் பின்பற்றுவதாகவும் கூறப்படுகிறது. இதன்மூலம் இங்குவரும் பார்வையாளர்களுக்கு உண்மையான பாரம்பரியத்தின் அனுபவங்களை இவர்கள் வழங்குகிறார்கள்.

* மசாய் மாராவில் ஆண்டு முழுவதும் வானிலை மாற்றங்கள் அடிக்கடி நிலவுவது வழக்கமாக இருந்துவருகிறது. கணிசமான மழைப்பொழிவு மற்றும் வெப்பமான பருவநிலை என கணிக்கமுடியாத வகையிலான மாற்றங்களைக் கொண்டுள்ளது.

வனவிலங்குகள்
வனவிலங்குகள்

* மசாய் மாராவிற்கு ஜனவரி முதல் மார்ச் மற்றும் ஜூலை முதல் அக்டோபர் போன்ற மாதங்களில் சென்று சுற்றிப்பார்க்க சிறந்த நேரங்களாகும்.

* முன்பெல்லாம் இங்கு மிகவும் குறைந்த அளவிலான சுற்றுலாப் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு சிறந்த வனவிலங்குகளைக் கண்டறிவதற்கான அனுபவமானது  வழங்கப்பட்டது.

* மசாய் மாரா ஆப்பிரிக்காவில் உள்ள சஃபாரி இடமாகும்.  இது ஏராளமான வனவிலங்குகள் மற்றும் சஃபாரி அனுபவங்களுக்கு புகழ் பெற்றது.

* கென்யாவில் உள்ள மசாய் மாரா சஃபாரி, உலகின் எல்லா மூலைகளிலிருந்தும் பயணிகளை ஈர்க்கும்படியான அனுபவத்தை வழங்குகிறது.

மசாய் மக்கள்
மசாய் மக்கள்

* பெரிய பலூன் சஃபாரிகள், நடைபயிற்சி சஃபாரிகள் மற்றும் பல கலாச்சார நிகழ்வுகளும்கூட  இங்கு வரும் பார்வையாளர்களுக்கு பலவிதமான அனுபவங்களை வழங்குகிறது.

* வனவிலங்குகள் மற்றும் இயற்கைக்காட்சிகளை வான்வழி ரசிக்க  சூரிய உதயத்தின்போது சூடான காற்று பலூனில் சமவெளியில் பறந்துசெல்வது மாராவின் மிகச்சிறந்த அனுபவங்களில் ஒன்றாகும்.

* இந்த பலூன் சஃபாரிகள் விடியற்காலையில் தொடங்கி 1-15 மணி நேரம் நீடிக்கும்.

இதையும் படியுங்கள்:
மகிழ்ச்சியில் திளைக்கும் பின்லாந்து நாடு பற்றிய 10 சுவாரஸ்யமான தகவல்கள்...!
மசாய் மக்கள்

* சிங்கம், சிறுத்தை, யானை, எருமை, காண்டாமிருகம், வரிக்குதிரைகள்,  ஒட்டகச்சிவிங்கிகள், ஹைனாக்கள், சிறுத்தைகள், காட்டெருமைகள், எலாண்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் இந்த காப்பகத்தில் உள்ளன.

* கழுகுகள், நாரைகள், மற்றும் 50க்கும் மேற்பட்ட வேட்டையாடும் பறவைகள் உட்பட 470க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் மசாய் மாராவில் காணப்படுகின்றன.

* மசாய் மாராவில் ஆண்டுதோறும் ‘வைல்ட் பீஸ்ட்’ இடம்பெயர்வு உலகளவில் மிகப்பெரிய நிலப்பரப்பு இடம்பெயர்வுகளில் ஒன்றாகும்.  இது ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் நிகழ்கிறது.

வனவிலங்குகள்
வனவிலங்குகள்

* உள்ளூர் மசாய் மக்கள் தங்களைச் சுற்றியுள்ள வனவிலங்குகளுடன் ஒற்றுமையாகவும் அமைதியான முறையிலும் வாழ்ந்து வருகின்றனர். அதே நேரத்தில் காப்பகத்தை நிர்வகிப்பதிலும் பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர்.

* முட்களின் வேலியால் சூழப்பட்ட மண் குடிசைகளைக் கொண்ட அவர்களின் கிராமங்களில், சுற்றுலாப் பயணிகள்  மசாய் நடன ஆர்ப்பாட்டங்களைக் காணலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com