இந்தியாவின் பொம்மை கலாசாரம்!

Toy culture of India!
Toy culture of India!

குழந்தைகளுக்கு பிடித்த ஒரு விஷயம் என்றால் பொம்மைத்தான். பொம்மைகள் வைத்து விளையாடாமல் குழந்தைப் பருவத்தை யாருமே கடந்து வந்திருக்க மாட்டார்கள். ஒவ்வொரு முறையும் கொலு வைக்கும்போது எத்தனை எத்தனை பொம்மைகளை நாம் பார்க்கிறோம்... பலவிதங்கள், பல ரகங்கள், பல கதைகள்!

பொம்மை அதிகம் பயன்படுத்துவதும், அதனை அதிகமாக உற்பத்தி செய்வதும் இந்தியர்கள்தான். இன்று, நேற்று அல்ல கிட்டத்தட்ட 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது ஹராப்பா, மொகஞ்சதாரோ காலத்திலிருந்து பொம்மைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. நடனப்பெண்கள், தேர் போன்ற பொம்மைகளை அன்றே செய்வார்கள். இன்னும் சொல்லப்போனால், ராமாயணம், மகாபாரதம் போன்ற கதைகளையே பொம்மைகள்  மூலம் கூறுவார்கள். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நமது நாகரிகம் எப்படி இருந்தது என்பதை பொம்மைகள் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். பொம்மைகள் நம் நாட்டின் கலாசாரமாகவும் அடையாளமாகவும் இருந்து வருகின்றன. ஒவ்வொரு மாநிலங்களுக்கு ஏற்றவாரு பொம்மை கலாசாரம் மாறுகிறது. அந்த வகையில் இந்தியாவின் எந்தெந்த மாநிலங்களில் எந்த வகையான பொம்மைகள் செய்கின்றனர் என்பதை பார்ப்போம்.

ஜம்மு காஷ்மிர்:

ஜம்மு காஷ்மிர்
ஜம்மு காஷ்மிர்

ஜம்மு காஷ்மிரில் அதிகப்படியான வால்நட் மரங்கள் இருக்கும். அதனால் அந்த மரத்துண்டுகள் மூலம் பொம்மைகள் செய்வார்கள்.

அண்டர்கட் செதுக்குதல், பின்னல் முறை செதுக்குதல், ஆழமான செதுக்குமுறை மற்றும் ஆழமில்லாத செதுக்குமுறை என பல செய்முறைகள் உண்டு.

உத்தரகண்ட்:

உத்தரகண்ட்
உத்தரகண்ட்

இந்த மாநிலத்தில் உடுக்கை அழகாகவும், விதவிதமாகவும் செய்வது அவர்களின் தனித்துவம். மற்றும் மரப்பொம்மைகள் வெவ்வேறு நிறங்கள் மற்றும் வடிவமைப்புகளுடன் செய்வார்கள். இவர்களுடைய முன்னோர்கள் தந்தங்கள் மூலம் செய்த பொம்மைகள் முகலாய காலத்தில் மிகவும் புகழ்பெற்றவை.

பஞ்சாப்:

பஞ்சாப்
பஞ்சாப்

ஹேன்ட் வெய் (Handwei) என்பது சமையல் சாமான்கள் செய்யும் பொருட்கள். சன்கனா (Chankana) சிந்து சமவெளி நாகரிக காலத்திலிருந்து இசை சார்பான பொம்மை வகையாகும். லட்டு (Lattu) பந்துப் போன்ற பொம்மை வகை. பஞ்சாப்பில் விழா காலங்களில் இதுபோன்ற பல பாரம்பரிய பொருட்களை மக்கள் பார்வைக்கு வைத்து, பாரம்பரிய பொம்மைகளைப் பாதுகாத்து வருகின்றனர்.

ஹரியானா:

ஹரியானா
ஹரியானா

இந்த மாநிலத்தில் உலோக பொம்மை வகைகள், மரப்பொம்மை வகைகள் , தோல் பொம்மை வகைகள், துணியில் செய்யப்படும் பொம்மை வகைகள் போன்றவை கிடைக்கும்.

டெல்லி:

டெல்லி
டெல்லி

டெல்லியில் அதிகப்படியான பொம்மை நிறுவனங்கள் மற்றும் சந்தைகளும் உள்ளன. அங்கே பல வடிவமைப்புகளுடன் கைவினைப் பொருட்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள் ஆகியவையும் விற்கப்படும். இன்னும் சொல்லப் போனால் டெல்லியில் மிகவும் பொருளாதாரத்தில் பின்தள்ளப்பட்ட ஆட்கள் பலரும் இதுபோன்ற பொம்மைகள் செய்வதைதான் தொழிலாக வைத்து வாழ்ந்து வருகிறார்கள்.

ராஜஸ்தான்:

ராஜஸ்தான்
ராஜஸ்தான்

இங்கே உதைப்பூர் கிராமத்தில் மரத்தை உளி மூலம் செதுக்கி வடிவமைக்கும் Dhoodhia என்ற பொம்மை சிறப்பு. இந்த பொம்மைகளில் கற்றாலை இலைகள் பயன்படுத்துவதால் மென்மையாகவும், அதிக நாட்கள் இருக்கும் தன்மை உடையவையாகவும் விளங்குகின்றன.

உத்தரப்பிரதேஷ்:

உத்தரப்பிரதேஷ்
உத்தரப்பிரதேஷ்

இந்த மாநிலத்தில் சமையல் சாமான்கள், இசைக் கருவிகள், பறவைகள், விலங்குகள் மற்றும் நடனப்பெண்கள் வகை பொம்மைகள் உலோகம் மூலம் செய்யப்பட்டு இருக்கும். இன்னும் சில மரப்பொம்மைகள் மரத்தின் வேர்கள் பயன்படுத்தி செய்யப்படும்.

குஜராத்:

குஜராத்
குஜராத்

இங்கு டெரக்கோட்டா மற்றும் களிமண் பொம்மைகள் அதிகமாக செய்யப்படுகின்றன. குறிப்பாக குதிரை, மாடு, எருமை போன்ற விலங்கு வகைகளும் கடவுள் சிலைகளும் அதிகமாக இருக்கும்.

டைய்யு மற்றும் டாமன்:

இந்த இடங்கள் கடற்கரை ஓரமாக இருப்பதால், ஆமை ஓட்டின் மூலம் பொம்மைகள் செய்வது சிறப்பு.

மகாராஷ்டிரா:

மகாராஷ்டிரா
மகாராஷ்டிரா

இந்த மாநிலத்தில் சவன்ட்வாடி என்ற வகை பொம்மைகள் மிக மிக சிறப்புடையவை. சவன்ட்வாடி என்றால் மாங்காய் மரத்தின் மூலம் செய்யப்படும் பொம்மைகள் மற்றும் கஞ்சிபா விளையாட்டு பொருட்கள் ஆகும். மகாராஷ்டிராவில் இது அதிகமாகவ இருக்கும்.

தென்னிந்தியா:

தென்னிந்தியா:
தென்னிந்தியா:

ர்நாடகாவில் சித்ரகார்ஸ் என்ற சமூகத்தினர் தந்தம், சந்தனமரம், ரோஸ் மரம் போன்றவற்றைக் கொண்டு பொம்மைகளை செய்வதில் வல்லவர்கள்.

இதையும் படியுங்கள்:
முதுமைக்கு முட்டுக்கட்டை போடும் உணவுகள்!
Toy culture of India!

கேரளாவில் தென்னை பனை இலைகள், தேங்காய் நார், உலோகம் கொண்டு பொம்மைகள் செய்வார்கள்.தோல் மூலம் செய்யும் பொம்மைகளை தொல்பவகூத்து என்ற பொம்மலாட்ட நிகழ்ச்சிக்கு பயன்படுத்துவார்கள்.

மிழ்நாடு என்றாலே தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, சொப்பு சாமான், களிமண் பொம்மைகள் சிறப்பு. அதிலும் அந்த பொம்மைகளை இயற்கை பொருட்கள் மூலம் கிடைக்கும் நிறங்களைக் கொண்டு செய்வது தனித்துவமானது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com