இளைஞர்கள் மனம் கவர்ந்த அனிமே நாயகன் நரூட்டோவின் சிறப்புகள் என்ன?

நரூட்டோ...
நரூட்டோ...

ரூட்டோ இந்தப் பெயர் தற்போது பதின்பருவ சிறார்கள் மற்றும் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு பெயர். நரூட்டோ என்பது ஜப்பானிய அனிமேக்களில் வரும் ஒரு கதாநாயகன். யார் இந்த நரூட்டோ? இவர் ஏன் இளைஞர்களின் மனம் கவர்ந்த நாயகன் என்பது பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

மசாஷி கிஷிமோடோ என்பவர் உருவாக்கிய ஒரு கதாபாத்திரம் தான் நரூட்டோ.  முதலில் நருடோவை 1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத ஒரிதழுக்காக உருவாக்கினார். கார்ட்டூன் புத்தகத்தில் வெளிவந்த கதையை பின்னர் ஜப்பானிய மேங்கோ தொடராக உருவாக்கினார் மசாஷி கிஷிமோடோ. 

இந்தத் தொடர் ஜப்பான் டிவிகளில் ஒளிபரப்பானது. பின்பு அணிமேக்ஸ்  நெட்வொர்க்கில் ஒளிபரப்பாக ஆரம்பித்து அதன் பின்பு திரையரங்குகளிலும் வெளியாக ஆரம்பித்து விட்டது. இன்று வரை  தற்போது யூ ட்யூப் களிலும் நெட்ஃபிளிக்சர்களிலும்  ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இளைஞர்களின் மிகவும் மனம் கவர்ந்த தொடராக இது மாறிவிட்டது.

இந்த தொடரில் சாகசம் மற்றும் நகைச்சுவை காட்சிகளுக்காகவும் கதாபாத்திரங்களின் குண அமைப்பு போன்றவற்றுக்காகவும் இளைஞர்களுக்கும் பதின் பருவத்தினருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு தொடராகிவிட்டது. அதிலும் நரூட்டோ என்கிற அதனுடைய முக்கிய கதாபாத்திரம் அவர்களது மனம் கவர்ந்த நாயகன் ஆகிவிட்டார்.

நரூட்டோவின் வரலாறு;

நரூட்டோ ஒரு கிராமத் தலைவனின் மகனாக பிறக்கிறார்.  எதிரிகளின் சூழ்ச்சியால் அவருடைய அப்பா கொல்லப்படும்போது பிறந்த கைக்குழந்தையாக இருக்கும் நரூட்டோவின் உடலில் ஒன்பது வால் கொண்ட நரியை நரூட்டோவின் உடலில் சீல் செய்துவிட்டு அவருடைய தந்தை இறந்து போகிறார். அதனால் ஊர் மக்கள் அனைவரும் அவனை வெறுக்கிறார்கள். அவன் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறான். சில நல்ல இதயம் படைத்த மக்களால் அவனுக்கு சாப்பாட்டு கிடைக்கிறது. நிஞ்சாக்கள் எனப்படும் சக்தி வாய்ந்த மனிதர்களுடன் சேர்ந்து அவனுக்கு உடல் பலம், மன பலம் கிடைக்கிறது.  நிறைய நண்பர்கள் வட்டம் கூடுகிறது மிகுந்த கஷ்டங்களுக்கும் சிரமங்களுக்கும் இடையில் அவன் பலவிதமான சக்திகளை பெறுகிறான்.

நரூட்டோ நண்பர்கள்...
நரூட்டோ நண்பர்கள்...

நரூட்டோவின் சிறப்பம்சங்கள்;

1. நரூட்டோ வாழ்க்கையில் பலவிதமான சவால்களை எதிர்கொண்டு தனது இலக்குகளை அடைய கடுமையாக உழைக்கும் ஒரு மனிதன். நிஜ வாழ்க்கையில் பல இளைஞர்கள் நரூட்டோவின் போராட்டங்களுடன் தம்முடைய வாழ்வை தொடர்பு படுத்தி நரூட்டோவின் வேகத்தையும் உத்வேகமும் உறுதியும் பெற்று தங்கள் வாழ்வில் வரும் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள்.

2. நரூட்டோ தனது நண்பர்களை வெகுவாக ஆதரிப்பவர். அனிமேக்களில் நட்பின் வலிமையையும் குழுவாக வேலை செய்வதின் முக்கியத்துவத்தையும் பற்றி வலியுறுத்தப் படுகிறது. இதைப் பார்க்கும் இளைஞர்களும் நண்பர் களுடன் ஒற்றுமையாக இருப்பது பற்றியும் குழு மனப்பான்மையுடன் வேலை செய்வதால் உண்டாகும் நன்மைகளைப் பற்றியும் அறிந்து கொள்கிறார்கள்.

3. நரூட்டோ பங்குபெறும் அனிமேக்களில் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் மற்றும் அட்வென்ச்சர் சீக்வென்ஸுக்கு பெயர் பெற்றது. இது குறிப்பாக இளைஞர் களை ஈர்க்கும்.  இது உற்சாகமான மற்றும் நன்கு அனிமேஷன் செய்யப்பட்ட போர்களால் நிரம்பியுள்ளது. தீவிரமான மற்றும் பார்வைக்கு பிரமிக்க வைக்கும் சண்டைக் காட்சிகள் இளம் பார்வையாளர்களின் கவனத்தையும் கற்பனையையும் ஈர்க்கின்றன

4.  பலவிதமான  திருப்பங்கள், மர்மங்கள், பாத்திர  மேம்பாடுகள் மற்றும் சிக்கலான சதித் திட்டங்களை உள்ளடக்கி இருக்கும்.  இதன் நுணுக்கமான விவரிப்புகள் வித்தியாசமான காட்சி அமைப்புகள் போன்றவை பதின் பருவத்தினரை மிகவும் ஈர்க்கிறது. 

5. தனித்துவமான  திறன்களைக் கொண்டுள்ளன நிஞ்சாக்கள் என்பவர்கள் பலவிதமான சக்திகளையும் திறமைகளையும் உள்ளடக்கியவர்கள். இது பார்வையாளர்களை வெகுவாக ஈர்க்கிறது.  மேலும் இந்தத் தொடரில் பல வகையான தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த நிஞ்சாக்களின் படைப்பாற்றல் மற்றும் பல்வேறு அற்புதமான உலகங்களை ஆராய்வதில் இளைஞர்களுக்கு மிகவும் ஈர்ப்புடையதாகவும் மகிழ்ச்சி அடையவும் வைக்கிறது. இதைப் பார்க்கும் இளைஞர்கள் தங்களுக்கும் இந்த சக்திகள் இருப்பதாக கற்பனை செய்து பார்த்து மகிழ்கிறார்கள்.

ஆழமான உணர்ச்சிகளை...
ஆழமான உணர்ச்சிகளை...

6 . இந்த அனிமேக்கள் ஆழமான உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றன. நரூட்டோவின் வாழ்வில் அவர் எதிர்கொள்ளும் தனிப்பட்ட போராட்டங்கள் கஷ்டங்கள் போன்றவற்றிலிருந்து அவர் மன உறுதியோடு போராடி வெற்றி பெறுகிறார். அவர் கஷ்டப்படும் போது வெளிப்படும் ஆழமான உணர்ச்சிகள் இளைஞர்கள் மனதில் வெகுவாக தைக்கிறது. தங்களை நரூட்டோவுடன் ஒப்புமைப்படுத்தி பார்த்து அவர்கள் நரூட்டோவிற்காக பரிதாபப்படுகிறார்கள்.

அவருடைய சோகம் மகிழ்ச்சி மற்றும் வெற்றியை தாங்களும் அனுபவிப்பதாக கற்பனை செய்து கொள்கிறார்கள். மேலும் நரூட்டோ மக்களின் மேல் வேறுபாடு இல்லாத அன்பு செலுத்துகிறார். அவர்களை சரியாகப் புரிந்து கொள்கிறார் அதனால் அவர் மேல் ஒரு அனுதாபமும் அன்பும் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். 

இதையும் படியுங்கள்:
ஜம்மு-காஷ்மீர் போறீங்களா? இந்த 5 இடங்களை மிஸ் பண்ணிடாதீங்க!
நரூட்டோ...

7. அனிமேக்கள் பொதுவாக உலகளாவிய பாப் கலாச்சாரத்தின் குறிப்பிடத்தக்க பகுதியாக மாறி உள்ளது. நருட்டோ தொடர்கள் அவற்றை வெகுவாக எதிரொளிப்பதால் உலகெங்கிலும் உள்ள இளைஞர்கள் இடையே ஜப்பானிய அனிமேஷன்கள் வெகுவாக பாராட்டை பெற்றுள்ளன.

எனவே  நரூட்டோ கதாபாத்திரம் இளைஞர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டது இது அவர்களுக்கு மிகவும் பிடித்த பிரியமான நீடித்த தொடராக அமைந்து விட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com