- தா.சரவணா
பொதுவாக ரோட்டில் செல்லும்போது, சைரனைப் பறக்கவிட்டபடி ஆம்புலன்ஸ்சுகள் ஒரு உயிரைக் காப்பாற்ற அசுர வேகத்தில் சென்றுகொண்டிருக்கும். ஆம்புலன்சில் இருந்து வரும் சைரன் ஒலியைக் கேட்டால், ரோட்டில் சாலை விதிகளை மீறிச் செல்பவர்களும் ஆம்புலன்சுக்கு வழிவிட்டு நிற்பார்கள். சிலர் நின்ற இடத்தில் இருந்தபடி, பிரார்த்தனையும் செய்வார்கள். நாம் தினம்தோறும் பார்க்கும் ஆம்புலன்சில் எத்தனை வித சைரன்கள் பயன்படுத்தப்படுகின்றன? என்பது குறித்து நம்மில் பலருக்கும் தெரியாது.
ஆம்புலன்ஸ் எதற்காக செல்கிறது என்பதைக் குறிக்க பலவகை சைரன் ஒலிகள் எழுப்பப்படுகின்றன.
இதில் முதலாவது, வெய்ல் (wail) எனப்படும் புலம்பல் ஒலி. இது ஆம்புலன்ஸ், நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது ஒலிக்கப்படும்.
அடுத்தது ஹெல்ப் (Help). இது அலறல் ஒலி ஆகும். இது சாலைகளில் நெருக்கடி காணப்பட்டால் ஒலிக்கும்.
3வதாக ஐப்பர் ஹெல்ப் (Hyper help) எனப்படும் மிகக் கூச்சல் ஒலி. இது ஆம்புலன்சில் உள்ள நோயாளி மிகவும் சீரியசாக உள்ளார் என்பதைக் குறிக்கும்.
அடுத்தது ஹை லோ சைரன் (High-Low Siren) எனப்படும் உயர் தாழ்வு ஒலியானது, உடல் உறுப்புகளைச் சுமந்து செல்லும் ஆம்புலன்சுகளில் ஒலிக்கப்படும்.
இனிமேல் ஆம்புலன்சுகள் நம்மைக் கடந்து செல்லும்போது, அதில் ஒலிக்கப்படும் சைரன்களைக் கவனித்து, அதற்கு வழி விடுவோம்!