என் கேள்விக்கென்ன பதில்?

தாவரங்கள்...
தாவரங்கள்...

கேள்வி: இலைகள் ஏன் உதிர்கின்றன?

பதில்: சூரிய ஒளி, நீர், காற்றில் இருக்கும் கார்பன் - டை - ஆக்ஸைடு மற்றும் இலைகளில் உள்ள குளோரோஃபில் ஆகியவற்றைப் பயன் படுத்தி ‘ஸ்டார்ச்’ என்ற உணவைத் தாவரங்கள் தயாரிக்கும். உலகின் அனைத்து உயிரினங்களின் உணவு ஆதாரத்துக்கான செயல்முறை இது. இதற்கு ஒளிச்சேர்க்கை என்று பெயர். மரங் களுக்குப் போதிய வெளிச்சமும், காற்றில் உள்ள கார்பன் - டை - ஆக்ஸைடும், நீரும் கிடைக்காவிட்டால் ஒளிச்சேர்க்கை நடைபெறாமல் இலைகள் உதிரும்!

தாவரங்களில் அதிகமாக இருக்கும் நீர், இலைகளில் உள்ள இலைத் துளைகள் வழியாக வெளியேறும். இதை நீராவிப் போக்கு என்பார்கள். கோடை காலத்தில் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தியாக வேண்டிய கட்டாயம் உள்ள சில தாவரங்கள், ‘இலைகள் இருந்தால்தானே நீராவிப் போக்கு நடக்கும். இலைகளையே உதிர்த்து விடுகிறோம். இப்ப என்ன பண்ணுவீங்க?’ என்று இலைகளை உதிர்ப்பதும் உண்டு!

இதையும் படியுங்கள்:
2024ம் ஆண்டின் ஆண்களுக்கான ட்ரெண்டிங் ஹேர் கட்!
தாவரங்கள்...

வசந்த காலத்தில், போதிய அளவு ஸ்டார்ச் தயாரிக்கத் தேவையானவை கிடைக்கும்போது மரங்கள் வளம் பெறும்! மீண்டும் இலைகள் துளிர்க்கும்.

மரங்களில் இலைகள் உதிரலாம்; ஆனால் ஒருபோதும் மனதில் நம்பிக்கைகள் உதிரக் கூடாது!

-அ. நூர்ஜஹான், நாகூர்

கேள்வி: சோலார் மின் சக்தி என்றால் என்ன? அதை எப்படி உற்பத்தி செய்கிறார்கள்?

பதில்: ‘சோலாரிஸ்’ என்ற லத்தீன் வார்த்தைக்கு சூரியன் என்று அர்த்தம். அதிலிருந்து வந்ததுதான் ‘சோலார்’ என்ற ஆங்கில வார்த்தை. சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் தயாரிப்பதை ‘சோலார் மின்சக்தி’ என்கிறார்கள். இது மிகவும் நுட்பமான - சிக்கலான ஒரு முறை. இருந்தாலும் விளக்க முயற்சிக்கிறேன்.

சோலார் பேனல்
சோலார் பேனல்

சூரிய ஒளியை உள்வாங்கக் கூடிய சோலார் செல்கள் பலவற்றைச் சேர்த்து ‘சோலார் பேனல்’ என்ற அமைப்பை முதலில் உருவாக்குவார்கள். சோலார் செல்கள் ‘சிலிகான்’ என்ற பொருளால் ஆக்கப்பட்டுள்ளன. பிற மூலகங்களுடன் சேரும்போது அந்த செல்லின் ஒரு பகுதியில் அதிக அளவில் எலக்ட்ரான்களும் மற்ற பகுதியில் குறைந்த அளவில் எலக்ட்ரான்களும் இருக்கும். சூரிய ஒளி இந்தப் பேனல்களில் விழும்போது, ஒளியில் இருக்கும் ‘ஃபோட்டான்’ என்பது சிலிகானில் அதிக அதிக அளவு இருக்கும் எலக்ட்ரான்களைத் தூண்டி, எலக்ட்ரான்கள் குறைவாக உள்ள பகுதிக்குப் பாயச் செய்யும். இந்தப் பாய்ச்சலே ‘இன்வர்டர்’ என்ற கருவியில் மின்சாரமாக மாற்றப்படுகிறது.

எல்லா விளக்கும் விளக்கல்ல; சோலார் விளக்கே விளக்கு!

-க.மருதவாணன், சீர்காழி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com