உலகிலே மிக உயரமான மரம் எது? எங்கு உள்ளது? தெரிந்துகொள்வோமா?

Hyperion tree
Hyperion tree

Hyperion வானத்தை வருடும் ஒரு ராட்சத மரமாகும். இது கோஸ்ட்  ரெட்வுட் (coast redwood) மர இனத்தைச் சேர்ந்தது. இதன் உயரத்தை கேட்டால் நாம் வாய் பிளந்துவிடுவோம். கிட்டத்தட்ட 115.92 மீட்டர் (380.3 அடி).

ஆகஸ்ட் 25, 2006 ஆம் ஆண்டு இயற்கை ஆர்வலர்களான  கிறிஸ் அட்கின்ஸ் மற்றும் மைக்கேல் டெய்லர் இருவரும் ஒரு சாகசப் பயணத்தை மேற்கொண்டபோது இந்த அற்புதத்தைக் கண்டறிந்தனர். இந்த மரத்தின் உயரத்தை  ஸ்டீபன் சில்லெட்டால் சரியாக அளவிடப்பட்டு உயரத்தை உறுதிப்படுத்தினார். மேலும், இது சுமார்  600 முதல் 800 ஆண்டுகள் பழைமையானது இருக்கலாம் என மதிப்பிட்டுள்ளனர். கலிபோர்னியாவில் உள்ள ரெட்வுட் தேசிய பூங்காவில் ஒரு அடர்ந்தப் பகுதியில் இந்த  ஹைபரியன் (Hyperion)  உள்ளது.

ஹைபரியனின்(Hyperion) மறைக்கப்பட்ட மறைவிடம்

ஹைபரியனின் (Hyperion) சரியான இடம் இன்னும் பெயரளவிற்கு ரகசியமாகவே உள்ளது. ஆனால், டிஜிட்டல் யுகம் அதை தவிடு பொடியாக்கிவிட்டது. காரணம், இப்போதுள்ள விரைவான இணையத் தேடல் உங்களை அதன் அருகிலே கொண்டு சென்றுவிடும். அங்கு ஒளிரும் சூரியக் கதிர்கள் அடர்ந்த மரங்களால் வடிகட்டப்பட்டு காட்டின் தளத்தை ரம்மியமாக ஒளிரச் செய்வதை நீங்கள் அந்த இடத்தில் ரசிக்கலாம். இருப்பினும், அதில் ஒரு எச்சரிக்கையும் அடங்கியுள்ளது. அதாவது ஹைபரியன் (Hyperion) அருகே யார் அத்துமீறி நுழைந்தாலும்  பெரும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். கிட்டத்தட்ட ஆறு மாத சிறைத்தண்டனை மற்றும் அதில்  $5,000 அபராதமும் அதில் அடங்கும்.

Hyperion ஆவணப்படம் 

ஹைபரியன் (Hyperion) ஒரு மரம் மட்டுமல்ல; அது ஒரு பிரபல ஹீரோவும் கூட. 2012இல், பிபிசி "ஜேம்ஸ் அண்ட் தி ஜயன்ட் ரெட்வுட்ஸ்" (James and the Giant Redwoods) என்ற ஆவணப்படத்தை வெளியிட்டது. அதில் துணிச்சலான கதாசிரியர் என்ற பெயர் பெற்ற ஜேம்ஸ் ஆல்ட்ரெட், இந்தக் காடுகளின் புராதான கதைகளை விளக்கினார். சில கிசுகிசு ரகசியங்கள்கூட அதில் அடங்கும். பூமியின் மிக உயரமான மரத்திற்கானத் தேடலை இந்தப் படத்தைப் பார்க்கும் மூலம் அனைவருக்கும் ஊக்கப்படுத்தினார்.

சுற்றுச்சூழல் சேவைகள்:

* கார்பன் குறைப்பு: அனைத்து மரங்களைப் போலவே ஹைபரியனும் கார்பன் அளவைக் குறைக்க முக்கிய பங்கு வகிக்கிறது. இது ஒளிச்சேர்க்கையின்போது வளிமண்டலத்தில் இருந்து Carbondioxideஐ  உறிஞ்சி, காலநிலை மாற்றத்தைத் சமாளிக்க உதவுகிறது.

* வனவிலங்குகளுக்கான வாழ்விடம்: அதன் மகத்தான அளவு பறவைகள், பூச்சிகள் மற்றும் சிறிய பாலூட்டிகள் உட்பட பல்வேறு விலங்குகளுக்கு தங்குமிடம் மற்றும் கூடு கட்டும் தளங்களை வழங்குகிறது.

Hyperion
Hyperion

* ஆராய்ச்சி வாய்ப்புகள்: கோஸ்ட் (coast) ரெட்வுட்ஸின் வளர்ச்சி முறைகள், தழுவல்கள் மற்றும் சூழல்  தொடர்புகளைப் புரிந்துகொள்ள விஞ்ஞானிகள் ஹைபரியனைப் படிக்கின்றனர். இத்தகைய பழங்கால மரங்களைப் படிப்பதன் மூலம் பெறப்பட்ட நுண்ணறிவானது, வன சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பற்றிய நமது அறிவிற்குப் பங்களிக்கிறது.

இதையும் படியுங்கள்:
எண்ணம்போல் வாழ்க்கை என்பது எந்தளவு உண்மை!
Hyperion tree

* இயற்கை அதிசயம்: ஹைபரியன் பிரமிப்பையும் ஆச்சரியத்தையும் தூண்டுகிறது. இயற்கையின் அழகையும் நெகிழ்ச்சியையும் நமக்கு நினைவூட்டுகிறது. அதன் உயரமான இருப்பு, நமது கிரகத்தின் படைப்பை  பாராட்டவும் பாதுகாக்கவும் நம்மை ஊக்குவிக்கிறது.

* பாதுகாப்பு விழிப்புணர்வு: பண்டைய காடுகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை ஹைபரியன்(Hyperion) நமக்கு நினைவூட்டுகிறது. இத்தகைய மரங்களைப் பாதுகாப்பதற்கான முயற்சிகள் ஒட்டுமொத்த வன ஆரோக்கியத்திற்கும் பல்லுயிர் (Biodiversity) பெருக்கத்திற்கும் பங்களிக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com