மரங்கொத்தி பறவைகள் மரங்களை மட்டுமே கொத்தும் என்று நினைத்தீர்களா?

மரங்கொத்தி பறவைகள் எப்படி வாழ்கின்றன? அவற்றின் உணவு முறை மற்றும் சுவாரஸ்யமான தகவல்களை எளிதாக தெரிந்து கொள்ளுங்கள்.
மரங்கொத்தி பறவைகள் | Woodpecker
மரங்கொத்தி பறவைகள் | WoodpeckerImage credit: Chatgpt
Updated on

மரம் கொத்தும் பறவையைப் பார்த்ததுண்டா? மரங்களைக் கொத்துவதைத் தாண்டி, இந்த உலகத்தில் நம்மைக் வியக்க வைக்கும் பல ரகசியங்கள் மரங்கொத்தி பறவைகளுக்குள் மறைந்துள்ளன. சிரிக்கும் குரலில் கத்துவது, செங்குத்தாக மரங்களைப் பிடித்து நிற்பது, எறும்புகளை சாமர்த்தியமாகப் பிடிப்பது என இந்த பறவைகளின் ஒவ்வொரு செயலும் சுவாரஸ்யமானது. மனதுக்குப் புத்துணர்ச்சி தரக்கூடிய மரங்கொத்தி பறவைகள் எப்படி வாழ்கின்றன? அவற்றின் உணவு முறை மற்றும் சில வியக்க வைக்கும் தகவல்களை இத்தொகுப்பில் எளிதாக தெரிந்து கொள்வோம் வாருங்கள்!

மரங்கொத்தி பறவைகள் மரத்தினை கொத்திக் கொண்டே இருக்கும். இவற்றினுடைய உணவு சிறிய பூச்சிகள். இந்த பறவைகள் இந்த பூச்சிகளைப் பிடிக்கவே மரங்களை கொத்திக் கொண்டிருக்கின்றன.

மரத்தினை கொத்தக் கூடிய அளவிற்கு கூர்மையான அலகினை இந்த பறவைகள் பெற்று இருக்கின்றன. இவற்றுடைய இயல்பான குணமே மரங்களை கொத்திக் கொண்டிருப்பது தான் என்று நம்பலாம். ஆனால், தென்னாப்பிரிக்காவில் வாழ்கின்ற நூற்றி எண்பது வகையான மரங்கொத்தி குருவிகள் இதுபோன்று மரத்தினை கொத்துவதில்லை என்று கண்டறிந்து இருக்கிறார்கள்..

இந்த வகை குருவிகள் உளியைப் போன்ற தமது கூர்மையான அழகு கொண்டவை. இந்த அழகினை கொண்டு, காய்ந்த நிலப்பகுதியில் கொத்தி தம் உணவான சிறிய பூச்சிகளைப பிடித்து உண்ணுகின்றன. மரங்கொத்திப் பறவைகள் உறுதியாக பறக்கும். கடல் எல்லை போல் ஏறியும் இறங்கியும் பறந்து செல்லும். மரங்கொத்திப் பறவையின் இயல்பு இந்த பறவையின் விளையாட்டு புத்தியை காட்டும்.

இலையுதிர் காடுகளிலேயே மரங்கொத்தி பறவைகள் நடமாட்டத்தினை அதிகமாக பார்க்க முடியும். இவ்வகையான காடுகள் ஸ்காட்லாந்து நாட்டில் அதிகமாக உள்ளன.

மரங்கொத்தி பறவைகள் | Woodpecker
மரங்கொத்தி பறவைகள் | WoodpeckerImage credit: Gemini AI

மரங்கொத்திப் பறவையின் கத்தல் சப்தம் சிரிப்பது போன்று இருக்கும்.

பட்டுப் போன மரங்களில் உள்ள பொந்துகளையே தன் கூடுகளாக கொண்டு இந்த பறவைகள் வாழ்கின்றன. சில மரங்கொத்தி பறவைகள் தந்திக்கம்பம் மற்றும் தனித்து நிற்கும் மரக்கொம்புகளிலும் கூடுகளைக் கட்டிக் கொள்கின்றன. இவற்றின் கூடுகள் உட்பகுதியில் வழவழப்பாகவும் அழகாகவும் இருக்கும். வெளிப்புற அமைப்பு சரியாக இருக்காது. மரங்கத்தி பறவைகளின் முட்டைகள் வெண்மை நிறமானவை. இந்த பறவைகளின் முட்டைகள் பளபளப்புடன் இருக்கும்.

எறும்புகள்தான் மரங்கொத்தி பறவைக்கு பிடித்தமான இரை. எனவே, இந்த பறவைகள் எறும்புகள் வாழும் புற்றுகளை அலகினால் உடைத்து அவை சிதறி ஓடுகின்ற போது அலகினால் கொத்தி உண்ணுகின்றன.

மரங்கொத்திப் பறவையின் கூரிய நகங்களுடன் கூடிய நான்கு விரல்கள் உள்ளது. இந்த விரல்களின் உதவியால்தான் மரத்தினை பற்றிகொண்டு செங்குத்தாக நிற்கிறது.

இதையும் படியுங்கள்:
ரப்பர் அழிப்பான் பிறந்த கதை!
மரங்கொத்தி பறவைகள் | Woodpecker

என்ன குட்டீஸ்களா.. மரங்கொத்தி பறவையை இனிமேல் பார்க்கும் போது பறவையை பார்த்து ரசிப்பீர்களா.. பறவைகளை பார்த்து ரசிக்கும் போது எப்போதும் படிப்பு படிப்பு என்ற டென்ஷனிலிருந்து விடுபட்டு மன மகிழ்ச்சி அடையலாம்.

இயற்கையின் மடியில் இளைப்பாறுவதும், மரங்கொத்தி போன்ற விசித்திரப் பறவைகளின் உலகத்தை உற்றுநோக்குவதும் வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல; அது நம் மனதை ஆட்கொள்ளும் அத்தனை டென்ஷன்களையும் பறக்கச் செய்துவிடும் ஒரு அற்புத மருந்தாகும். படிப்பு, தேர்வு என்ற சுமைக்கு நடுவே, காடுகளின் சத்தத்தையும் பறவைகளின் சுதந்திரமான பறத்தலையும் ரசிக்கும்போது நம் மூளை புதிய ஆற்றலைப் பெறுகிறது.

இதையும் படியுங்கள்:
உலகை கலக்கிய சுட்டி எலி: மிக்கி மவுஸின் சுவாரஸ்ய வரலாறு!
மரங்கொத்தி பறவைகள் | Woodpecker

இந்தப் புத்துணர்ச்சி உங்களை மேலும் ஆக்கப்பூர்வமாகச் சிந்திக்க வைப்பதோடு, வாழ்க்கையை இன்னும் ரசித்து வாழவும், கல்வியில் புதிய உச்சங்களைத் தொடவும் தேவையான எல்லையற்ற மனமகிழ்ச்சியையும் பேரமைதியையும் பரிசாகத் தருகிறது.

logo
Kalki Online
kalkionline.com