ஜோக்ஸ்

படங்கள் : பிரபுராம்
படங்கள் : பிரபுராம்
Published on

"ந்த வருஷ தீபாவளிக்கு என்ன ஸ்பெஷல் பட்சணம் செய்யப்போறே?"

"இஞ்சி அல்வா, மிளகு லட்டு, சுக்கு பாயசம்!"
எஸ்.ராஜம், ஸ்ரீரங்கம்

————–

"து வக்கீலுக்கு சொந்தமான
ஆட்டோன்னு
எப்படிச் சொல்றே
?"

''கோர்ட்டுக்கு இலவசம்'னு
எழுதியிருக்கே
."
எஸ்.கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி

————–

"வாத்தியார் என்னோட ஆன்சர் பேப்பரை படிச்சுப் பார்க்காமலே மார்க் போட்டிருக்காருன்னு தோணுது?"

"எப்படி சொல்றே?"

''சிங்கள் டிக்' தானே இருக்குடிக் புளுவா மாறலையே!"
வி.ரேவதி, தஞ்சை

————–

"கேஸ் டிரபிள்னு
ரொம்ப நாளா
டாக்டர்கிட்ட போனீங்களே
,
இப்ப தேவலையா சார்?"

"கேஸ் டிரபிள் போய்,
கேஷ் டிரபிள் வந்துவிட்டது.
வி.ரேவதி, தஞ்சை

————–

"வர் டூ இன் ஒன் டாக்டர்னு
சொல்றியே

எப்படி?"

"ஆமாஆபரேஷன், போஸ்ட்மார்டம் ரெண்டையும்
அவரே பார்ப்பாரு
…"
நிலா, திருச்சி

————–

"குற்றப் பத்திரிகையில்கூட இப்படியா போடுவாங்க?"

"என்ன போட்டிருக்காங்க?"

"நம்பர்1
பத்திரிகையாம்!"
எஸ்.மோகன், கோவில்பட்டி

————–

"ட்ஜெட்டில் ஒரு வரி கூட போடலியே?"

"அதைப் பற்றி ஒரு வரி
உங்க பத்திரிகையில் போடுங்க
…"
எஸ்.மோகன், கோவில்பட்டி

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com