கடைசிப் பக்கம். சுஜாதா தேசிகன்.என் பள்ளி நண்பர்கள் சிலர் ஒரு வாட்ஸ்ஆப் குழுவில் இணைந்து தினமும் சினிமா, நகைச்சுவை என்று சிறுவயதில் பேசிக்கொள்வது போலப் பேசிக்கொண்டு இருப்போம்..சென்ற வாரம் ராக்கெட்டரி படமும், ராக்கெட் என்ஜின் குறித்து பேச்சு வந்த போது "கல்கி கடைசிப் பக்கத்தில் இந்த வாரம் எழுதியிருக்கிறேன். வெள்ளிக்கிழமை 10 மணிக்குப் பிரசுரம் ஆனதும் அனுப்புகிறேன்" என்றேன்..வெள்ளிக்கிழமை பத்து மணிக்குக் குழுவில் இருந்த என் நண்பன் ஒருவன் திடீர் மாரடைப்பால் காலமானான்" என்று செய்தி கிடைத்து அதிர்ந்து போனேன்..எந்த கெட்ட பழக்கமும் கவலையும் இல்லாத அவன் ஏன் இப்படிப் போனான் என்பது புரியாத புதிர். சிறுவர்கள் போலப் பேசிக்கொண்டாலும், நாற்பது வயதுக்குப் பிறகு தேவையான இடத்தில் முடி வளராமல் காது, மூக்கு என்று தேவையில்லாத இடங்களிலும் வளரும். அந்தப் பருவத்தை அடைந்தவுடன் நிச்சயம் வருடாந்திர மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டு,சோதனை முடிவுகளை அதிகம் செலவு வைக்காமல் உபதேசிக்கும் குடும்ப மருத்துவரிடம் காண்பித்து அறிவுரை கேட்பது உத்தமம்..இதைத் தவிர, பொழுது போகவில்லை என்றால் உங்கள் முதுகு, கழுத்து, 'டென்னிஸ் எல்போ', மணிக்கட்டு, கணுக்கால், முழங்கால் நரம்பு போன்ற அமைப்புகள் ஒழுங்காக வேலை செய்கிறதா என்று சில சுயப் பரிசோதனைகளைச் செய்து பார்க்கலாம். இவை என் நண்பர் ஸ்ரீராம் முன்பு எனக்குச் சொன்னவை. அவருக்கு நன்றியுடன் இந்த வாரம் கடைசிப் பக்கத்தில் அதைத் தருகிறேன்..'கீ' கொடுத்த கைக்கடிகாரம் போல நம் உடல் செயல்படுகிறது. இன்று உட்கார்ந்த இடத்திலேயே எல்லா வேலையும் பார்த்துக்கொள்ளலாம். ஆனால் இதுதான் பிரச்னை..கடைசிப் பக்கம் படித்தவுடன் இந்தப் பத்து விஷயங்களைச் செய்ய முடிகிறதா என்று பாருங்கள்..1. ஒத்த செருப்பைப் போட்டுக்கொண்டு கீழே பாருங்கள். தொப்பை மறைக்காமல் செருப்பு தெரிந்தால் முழங்காலை மடக்காமல் கால் விரல்களைத் தொட முயற்சி செய்யுங்கள்..2. இந்தியன் டாய்லெட்டில் உட்காருவது போல் உட்கார முயற்சி செய்யுங்கள். குதிகால் உயர்த்தாமல் குந்த முடிகிறதா ? முடியவில்லை என்றால் இந்தியன்-2 வரும் வரை முயற்சி செய்யுங்கள்..3. வாரத்தின் மூன்றாம் நாள் சப்பளாம் போட்டு உட்கார்ந்து முழுச் சாப்பாட்டையும் பொறுமையாக சாப்பிடவும்..4. இடது காலில் நின்றுகொண்டு வலது காலை தூக்குங்கள். (வலது சாரி என்றால் மாற்றி தூக்கவும்). எதைத் தூக்கினாலும் எந்தப் பக்கமும் சாயாமல் ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிக்கை போல உடல் நடுநிலையுடன் இருக்க வேண்டும்..5. தலையணை இல்லாமல் பாயில் படுத்துக்கொண்டு இரண்டு கால்களையும் மடக்காமல் கொஞ்சம் உயர்த்தி ஐந்து நிமிடம் தாக்கு பிடிக்க முடிகிறதா என்று பாருங்கள்..6. ஆறாவது நிமிடம் அதே பாயில் படுத்துக்கொண்டு காலை கீழே அழுத்தி இடுப்பை உயர்த்துங்கள்..7. குப்புறப் படுத்துக்கொண்டு வயிற்றுக்கு முன்-பின் பாகங்களை உயத்தி கவுத்துப் போட்ட ஏழு போல முயற்சி செய்யுங்கள்..8. எழுத்தை உச்சரிக்க முயலும் போது எட்டு உறுப்புகளின் முயற்சியும் ஒத்துழைப்பும் தேவைப்படுவது. அதில் ஓர் உறுப்பான கழுத்து நீங்கள் எழுந்து நின்று கொண்டு கையை தூக்கும் போது வலிக்க கூடாது..9. ஒரு நாற்காலி இருக்கிறது என்று நினைத்துக்கொண்டு உட்காருங்கள். பத்தில் ஒன்பது பேருக்கு நாற்காலி தேவையாக இருக்கும்..10. இப்போது நாற்காலியிலிருந்து எழுந்துகொண்டு முதுகெலும்பை மெதுவாக திருப்ப முடிகிறதா என்று பாருங்கள். முடிந்தால் முதுகெலும்பில் இருக்கும் T10 எலும்புக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை..இந்தப் பத்து விஷயங்களும் எளிதில் செய்ய முடியவில்லை என்றால் பிரச்னைகள் இருக்கிறது என்று புரிந்துகொண்டு …