"என்ன சர்வர், செஸ் ஒலிம்பியாட் மாடல் கேக் 'கட்'ஆக மாட்டேங்குது…"
"செஸ் விளையாடத் தெரிஞ்சவங்களுக்கு மட்டும்தான் கட் ஆகும் சார். வேணும்னா எதிர் கடைல செஸ் ஆடச் சொல்லித் தர்றாங்க, கத்துக்கிட்டு வாங்க."
"அங்கிள் இப்போதைக்கு எழுந்திருக்க மாட்டாருடா. ஒரு செஸ் கேம் ஆடி முடிச்சிடுவோம்."
"நம் மன்னர் முன் வைத்த காலை பின் வைப்பதில்லை யாமே?"
"போருக்குச் செல்லும்போதா?"
"இல்லை… புறமுதுகிட்டு ஓடி வரும்போது!"
– கு. வைரச்சந்திரன், திருச்சி
"என் பையனை நாலு நாளா காணலை."
"என் பொண்ணையும் நாலு நாளா காணலை."
"வாங்க சம்பந்தி ஒண்ணா சேர்ந்து தேடலாம்."