பெயரே இல்லாத விசித்திரமான இந்திய ரயில் நிலையம்! 18 ஆண்டுகளாக தொடரும் ஆச்சரியம்!

மேற்கு வங்காளத்தில் 18 ஆண்டுகளாக பெயர்ப் பலகை இல்லாமல் இயங்கும் விசித்திரமான ரயில் நிலையம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்.
ரயில் நிலையம் | Nameless Railway Station Rainagar Station
ரயில் நிலையம் | Nameless Railway Station Rainagar StationImage credit: Chatgpt
வைகறை கண்ணன்

வணக்கம். நான், அனைத்து ஊடக, பத்திரிக்கைகள், கலை நிகழ்ச்சிகள், ஆகியவற்றில் விளம்பரங்கள் வெளியிட்டு தரும் விளம்பர ஏஜென்ஸி தொழில் செய்து வருகிறேன். விளம்பரப்படம் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறேன். பல முன்னணி பத்திரிக்கைகள், வார, மாத, இணைய இதழ்களிலும் சிறுகதைகள், கவிதைகள் எழுதிவருகிறேன். கட்டுரைகள் எழுதுவதற்கு வாய்ப்பு வழங்கிய கல்கி ஆன்லைன் குழுமத்திற்கு என்றென்றும் நன்றி நவில கடமைப்பட்டுள்ளேன். முதல் காதல்! முதல் வாய்ப்பு! முதல் வெற்றி! முக்கியம் தானே..!

Updated on: 
Kalki Strip
Kalki Strip

இந்தியாவின் ரயில் நிலையங்கள் என்றாலே பளிச்சிடும் மஞ்சள் நிறப் பெயர்ப் பலகைகளும், ஊரின் பெயரும் தான் நமது நினைவிற்கு வரும். ஆனால், மேற்கு வங்காளத்தில் ஒரு ரயில் நிலையம் இருந்தும்கூட, அதில் கடந்த 18 ஆண்டுகளாக எந்தப் பெயரும் எழுதப்படாமல் வெறும் வெற்றுப் பலகையாகவே காட்சியளிக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? பெயர் இல்லாத இந்த நிலையத்தில் பயணிகள் எப்படி ரயிலை அடையாளம் கண்டு டிக்கெட் பெறுகின்றனர்? அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் அந்த விசித்திரமான ரயில் நிலையத்தின் சுவாரஸ்யமான கதையைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்!

இந்தியாவில் மஞ்சள் பலகை இருந்தும், அதில் எந்த விதமான ஒரு எழுத்தும் இல்லாமல், பெயரே எழுதப்படாமல் செயல்படும் விசித்திரமான ரயில் நிலையம் மேற்கு வங்காளம் மாநிலத்தில் அமைந்துள்ளது.

இந்த பெயரற்ற ரயில் நிலையம் மேற்கு வங்காளத்தின் புர்பா பர்தமான் (Purba Bardhaman) மாவட்டத்தில், பாங்குரா – மசாகிராம் (Bankura – Masagram) ரயில் வழித்தடத்தில் அமைந்துள்ளது.

இந்த நிலையத்தின் நடைமேடையின் இரு புறமும் இந்திய ரயில்வேயின் வழக்கமான மஞ்சள் நிறப் பெயர்ப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

ஆனால், ஆச்சரியப்படும் விதமாக அந்தப் பலகைகளில் எந்த மொழியிலும் நிலையத்தின் பெயர் எழுதப்படாமல் வெற்றுப்பலகையாகவே காட்சி தருகிறது.

இதையும் படியுங்கள்:
நாட்டின் வளர்ச்சிக்கு நாமே தடையா? சிந்திக்க வைக்கும் உண்மைகள்!
ரயில் நிலையம் | Nameless Railway Station Rainagar Station

இந்த விசித்திரத்திற்குப் பின்னால் இரண்டு கிராமங்களுக்கு இடையே ஏற்பட்ட ஒரு விசித்திரமான பெயர்ச் சண்டை (Naming Dispute) மறைந்துள்ளது.

ஆரம்பத்தில் இந்த நிலையம் குறுகிய (Narrow Gauge) ரயில் பாதையாக இருந்தபோது, ரெய்நாகர் (Rainagar) என்ற பெயருடன் சற்று தள்ளி இயங்கி வந்தது.

ரயில் நிலையம் | Nameless Railway Station
ரயில் நிலையம் | Nameless Railway StationImage credit: Gemini AI

2008-ம் ஆண்டில், இந்த ரயில் பாதை அகல ரயில் பாதையாக (Broad Gauge ) மாற்றப்பட்டு புதிய ரயில் நிலையம் கட்டப்பட்டது. இந்த புதிய கட்டிடம் ரெய்னா (Raina) என்ற கிராமத்தின் எல்லைக்குள் அமைந்தது.

கிராமவாசிகளின் சண்டை:

இதனால், ரெய்னா கிராம மக்கள் தங்கள் நிலத்தில் நிலையம் இருப்பதால், இதற்கு 'ரெய்னா நிலையம்' தங்கள் கிராமத்தின் பெயர் வைக்கவேண்டும் எனப் பிடிவாதம் செய்தனர். ஆனால், ரெய்நாகர் கிராம மக்கள் பழைய பெயரே நீடிக்க வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தனர்.

நீதிமன்றத்தில் வழக்கு:

இந்த தகராறு நீதிமன்றம் வரை சென்றது. கிராம மக்களிடையே ஒருமித்த கருத்து ஏற்படாததாலும், சட்ட சிக்கல் நீடிப்பதாலும் இந்திய ரயில்வே தற்காலிகமாகப் பலகைகளில் இருந்த பெயர்களை நீக்கிவிட்டு வெறும் மஞ்சள் நிறப் பலகையை மட்டும் வைத்தது. அதுவே, இன்று வரையும் தொடர்கிறது.

இதையும் படியுங்கள்:
வரலாற்றின் உண்மையான முகத்தை காட்டும் பழைய நாட்குறிப்புகள்!
ரயில் நிலையம் | Nameless Railway Station Rainagar Station

பயணிகள் எப்படி டிக்கெட் எடுக்கிறார்கள்?

பெயர் பலகை இல்லாவிட்டாலும், இந்த நிலையம் தற்போதும் முழுமையாகச் செயல்பட்டு வருகிறது. புதிய பயணிகள் இங்கு வரும்போது குழப்பம் அடைந்தாலும், அதிகாரப்பூர்வ ரயில்வே பதிவுகள் மற்றும் பயணச்சீட்டுகளில் இந்த நிலையம் இன்னும் அதன் பழைய பெயரான ரெய்நாகர் (Rainagar – Station – Code : RNGR ) என்ற பெயரிலேயே குறிப்பிடப்பட்டு டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன.

இந்திய ரயில்வே வரலாற்றில் மறைந்திருக்கும் இது போன்ற வியக்கத்தக்க வரலாற்றுத் தகவல்களை முழுமையாக அறிந்துகொள்வதன் மூலம், நாட்டின் சுவாரஸ்யமான இடங்களைப் பற்றிய உங்களது பொது அறிவு, தேடல் திறன் மற்றும் பயண ஆர்வம் புதிய பரிமாணத்தைப் பெறுகின்றன.

logo
Kalki Online
kalkionline.com