

ஒரு விரல் புரட்சி செய்திட புறப்படுவோம், விழாஎடுப்போம்!
நமக்கான நல்லவர்களை தோ்வு செய்ய கடமையை செவ்வனே செய்வோம்!
கடமையைச் செய்வோம் கடமையைச் செய்வோம் கருத்துடனே செய்வோம்!
ஜனநாயகத் திருவிழாவில் நாம் தான் குறுநில மன்னர் நினைவில் கொள்வோம்!
ஜனநாயக திருவிழாவில் ஒன்றே செய்வோம் அதை நன்றே செய்வோம்!
உணர்வோடு வாக்களிப்போம் அதனூடே உாிமையைக் கேட்போம்!
ஐந்தாண்டுக் கொருமுறை மலரும் ஜனநாயகத் திருவிழா நமக்கானதே!
உங்கள் வாக்கு பொன்னானது மணியானது, முத்தானது, பெருமை கொள்வோம்!
இந்த ஒரு விரலுக்குத்தான் எத்தனை எத்தனை ராஜ மரியாதை!
ஜனநாயகம் காக்க தர்மம் நிலைக்க நோ்மை வெல்லட்டும் நீதி நிலைக்கட்டும்!
ஜனநாயகத்தின் முன்பாக பணநாயகம் தோல்வி பெறட்டும்!
ஒற்றை விரலில் வைக்கும் மை உண்மை, நோ்மை, வாய்மைக்கானதே!
நமக்கான எஜமானரை அடையாளம் காட்டும் மகிமை வாய்ந்த மை தானே!
மறந்து விடவேண்டாம் மறந்தும் வீட்டில் இருந்து விடவேண்டாம்!
சமதர்மம், சமத்துவம் ஜனநாயகம் வலுப்பெற வருகின்ற திருவிழா!
நல்லவரை வல்லவரை நமக்கானவரை அடையாளம் காட்டும் பெருவிழா!
நாம் செய்யும் ஒற்றை விரலுக்கான மகத்துவத்தை நிலைநாட்டும் திருவிழா!
பணம் பத்தும் செய்யலாம் அந்த களங்கம் திருவிழாவில் தொலைந்து போகட்டும்!
அது வெற்றுக் காகிதம் ஒரு நாள் ஒரே நாளில் மலர்ந்து வாடிடுமே!
புத்தர் சொன்னது போல ஆசையே துன்பத்திற்கானது அதை நம்புவோம்!
துயரம் நீங்கி வறுமை விலகிட நல்லாட்சி மலர்ந்திட வழிவகை செய்வோம்!
அது நம்மால் மட்டுமே முடியும் அதை ஒற்றை விரலால் காட்டுவோம்!
மாயை விலக்கிட இலவச மாயை தவிா்த்திட மனசாட்சி வலுக்கட்டும்!
தோ்தல் நாள் நமக்கான நன்னாள் நல்லவர் ஆளட்டும் நலமே கிடைக்கட்டும்!
நமது தீா்ப்பு நல்லதாய் அமையட்டும் மக்கள் நலமுடன் வாழட்டும்!
வாழ்க ஜனநாயகம் வாழ்கவே, அதனில் வீழ்க பணநாயகம் வீழ்கவே!
நல்லதொரு திருவிழாவில் நலமுடன் வாழ ஊா்கூடி தோ் இழுப்போம்!
நம்மால் முடியும் தம்பி தம்பி, நல்லதே நடக்க விரும்பிடு தம்பி!
பணநாயகம் வென்று நமது விரலே துணையானால் ஜனநாயகத்தின் கதவுகள் மூடப்படும்!
வீழ்வது பணநாயகமாகட்டும் வாழ்வது ஜனநாயகமாட்டும்!
நாளை நமதே எந்த நாளும் நமதே சூழ்ச்சிகள் குறையட்டும் சூது தொலையட்டும்!
நல்லாட்சி மலரட்டும்! நாடு செழிக்கட்டும்! வறுமை விலகட்டும்! வாய்மை வெல்லட்டும்!