புதிய பாரதத்தை சமைப்போம்! வா இளைஞனே, வா!

Independence Day
Independence Day
Published on

காந்தி, வ. உ சி உள்ளிட்ட தலைவர்கள் போட்ட ஊசியால் சுதந்திரக்குழந்தை ஜனித்தது.

சுதந்திரம் மட்டுமல்ல 79 வது பிறந்தநாள் என்று கூட ஆனந்தம் அடைவோம்.

ஆடுவோம், பள்ளு பாடுவோம்.

பாடுவோம், பாடல் பாடுவோம்.

பரவசம் அதிகமாக, நோ்மை கொண்டு கொண்டு கூடுவோம்.

கூடிநின்று குடி உயர பாடுபடுவோம்.

மதுவின் பிடியில் மரணம் தேடும் இளைஞன் மனதை மாற்றுவோம்.

சுதந்திரக்காற்றை சுகமாய் சுவாசித்து சமதர்ம சமுதாயம் காண்போம்.

செக்கிழுத்த செம்மல் புகழ் பாடுவோம்.

சுப்ரமணிய சிவா வழியில் புதிய பாரதம் சமைப்போம்.

வாஞ்சிநாதன் வழியில் அடக்குமுறையை வேறோடு களைவோம் .

பாரதி கண்ட புரட்சி சமுதாயம் தொடர பாடுபடுவோம்.

ரத்தம் சிந்தி, உயிா் நீத்து, பட்டினி கிடந்து, குண்டுகள் துளைத்து, செக்கிழுத்து,

துயரம் பல சுமந்து, ஒத்துழையாமை இயக்கம் நடத்தி வரவழைத்த சுதந்திரம் .

எத்தனை உயிா்கள் பலி கொடுத்து, வாங்கிய சுதந்திரம்!

'வெள்ளையனே வெளியேறு' போராட்டம் நடத்தி பெற்றுத்தந்த சுதந்திரம்!

இதையெல்லாம் மறந்து சுயநலவாதிகளின் பிடியில் சிக்கிவிடாதே!

சிந்தனை செய்து காத்திட வேண்டும்.

கடமை மறவா இளைஞனே சாதியின் பிடியில் சிக்கிவிடாதே!

மதுவின் மடியில் மயங்கிவிடாதே!

பாலியல் தொல்லையில் பழகிவிடாதே!

இதையும் படியுங்கள்:
சிபில் ஸ்கோர் குறைவது எப்படி? குறைந்த ஸ்கோரை உயர்த்துவது எப்படி?
Independence Day

நம் பாரத தேசம் பரந்த தேசம்.

பாரதபூமி நமது புண்ணியபூமி .

நாட்டை நேசி. நலமே நாடு. நலம்பல தேடு.

என் இளைஞனே, விவேகானந்தர் கண்ட என் இளைஞனே!

அப்துல் கலாம் கண்ட காவிய நாயகனே!

காலம் உனக்காக காத்திருக்கிறது. கடமை தவறாதே!

கலக்கம்கொள்ளாதே!

சீாிய பாரதம், திறன் மிகு பாரதம், செழுத்து வளர சிந்தனை செய்தே சீக்கிரம் புறப்படு.

வாராய் நீ வாராய்.

வாழும் இந்திய திருநாட்டை வல்லரசாக்கிட வா இளைஞனே, வா!

வரும் காலம் வசந்தகாலமாய் மலர பாடுபடு !

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com