குளுகுளு குளியலும், வெதுவெது BATHம் ஒன்றல்ல!

குளுகுளு குளியல்...
குளுகுளு குளியல்...

மது உடலை நீரால் - நீராட்டுதலால் - குளிர்விக்கும் வினையே -  தமிழ் மொழியில் 'குளியல்' என்று பெயர் பெற்றது.

குளிர்வித்தல் > குளிர்த்தல் > குளித்தல் > குளியல்.
இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் ... நமது உடம்பில் உருவாகும் பெரும்பாலான நோய்களுக்கு - அதிகப்படியான உடல் வெப்பமே முதன்மையான - அடிப்படையான காரணம் ஆகும். இரவு நேரங்களில் உடலின் வெப்பநிலை அதிகரிப்பது என்பது இயற்கையானது என்பதால் அன்றாடம் தூங்கி எழுந்தவுடன் விடியற்காலையில் உடலை நீராடிக் குளிர்வித்தல் என்பது நம் உடல் நலம் காக்கும் மிகவும் அவசியமான பழக்கமாகும்.

குளிக்கும் வழக்கத்தின் அதிமுக்கிய காரணம் வெப்பத்தை தணித்து, உடலைக் குளிரச் செய்வதே ஆகும். இவ்வாறு குளிக்கும் போது புற உடலும் சுத்தமாக்கப்படுவது இரண்டாவது தேவை மட்டுமே!
இரவு தூங்கி எழும்போது நமது உடலில் பித்த அதிகரிப்பால் உண்டான வெப்பக் கழிவுகள் தேங்கியிருக்கும். காலை எழுந்ததும் இக்கழிவுகளை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிர்ந்தநீரில் குளிக்க வேண்டும் என்ற அறிவியலை நமது முன்னோர்கள் நன்கு அறிந்திருந்தனர்.

அதன் பொருட்டே தினமும் காலையில் குளிர்ந்த நீரில் குளிப்பதை வழக்கமாக்கி,  பின்பற்றவும் அறிவுறுத்தினர்.
அக்காலத்தில்... பெருமளவில் குளிக்கப் பயன்படுத்திய குளிர்ந்த நீர் நிலையை இதன் காரணமாகவே 'குளம்' என்று பெயரிட்டழைத்தனர்.

தமிழ் வழியில் 'குளித்தல்' குளிர்விக்கும் வினையைக் குறிப்பதைப்போல,  முரணாக குளிப்பதைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான பாத் (bath) என்பது உடலைச் சூடுபடுத்தும் பொருள் கொண்டே அமைந்தது,  ஆச்சர்யமான ஒன்று.

நமது நாட்டில் 'குளியல்' என்பது உடலைக் குளிரச் செய்வது!
குளிர் நாடுகளில் BATH என்பது உடலை வெப்பமூட்டுவது!

ஆங்கில அகராதிகளின் விளக்கப்படி... 'Bathing' (பேத்திங்) - என்பது வெதுவெதுப்பான நீர் தொடர்புடைய சொல் ஆகும்.  பழமையான ஆங்கிலோ சாக்ஸன் மொழி Bad என்ற சொல் திரிந்து Bath ஆனதாகச் சொல்கிறது. பிரிட்டிஷ் நாடுகளில் வெந்நீர் ஊற்றுகளை Bathans என்றும் அழைப்பர்.

இதையும் படியுங்கள்:
வேற லெவல் பானி பூரி ரெசிபி.. ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க! 
குளுகுளு குளியல்...

இதில் சுவாரஸ்யமான மேலும் ஒன்று உண்டென்றால் இவையெல்லாம் தமிழ் மொழியிலிருந்து ஆங்கிலம் சென்ற சொற்கள் என்பதுதான்!
வெது (வெதுவெதுப்பு) - என்ற தமிழ்ச்சொல்லே வகர > பகர மாற்றத்தால் BATH என உருமாற்றமடைந்தது.
வெது > வேது > பேத் (Bath).
வெள் > வெது > வெதுப்பு.
வெதுப்பம் =  இளஞ்சூடு (warmth, moderate heat)
வெதுவெதுப்பு = அதிகமாகவோ குறைவாகவோ இல்லாத மிதமான சூடு. (lukewarm).

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com