
நாம் எத்தனையோ கல்லறைகளை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம். பெரும்பாலும் மனிதர்களுக்கு தான் கல்லறை கட்டப்படும். எகிப்தில் இதை மம்மி என்று கூறுவார்கள். மற்றபடி உலக நாடுகள் அனைத்திலும் மனித கல்லறைகள் உள்ளன. ஆனால் விமானங்களுக்கு என்று கல்லறைகள் பல நாடுகளில் உள்ளன.
அது என்ன விமான கல்லறை? அதை பற்றி தான் இந்த கட்டுரையில் பார்க்க போகிறோம்.
உலகில் உள்ள பல நாடுகளிலும் பயன்படாத விமானங்கள், பழுதடைந்த விமானங்கள், கடலில் மூழ்கி விமானங்கள், நஷ்டத்தில் முடங்கி உள்ள விமானங்கள் என பலதரப்பட்ட சேவை செய்ய முடியாத விமானங்கள் இந்தப் பட்டியலில் அடங்கும்.
இதில் உருப்படியான பாகங்கள் பிரிக்கப்பட்டு மற்ற விமானங்கள் செய்ய பயன்படுகின்றன. சிலவற்றை மறுசுழற்சி செய்து மீண்டும் ஓட்டத் தொடங்குகின்றனர். சில விமானங்களை ஹோட்டல்களாகவும் வீடுகளாகவும் மாற்றம் செய்கின்றனர்.
ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் ராணுவ விமானங்களை மட்டும் எந்த நாடும் விற்பனை செய்யவோ வெளிப்படுத்தவோ விரும்பாது. உலகிலேயே பெரிய விமான கல்லறை அமெரிக்காவில் உள்ள அரிசோனா பாலைவன கல்லறை. இங்கு சுமார் 2600 ஏக்கர் பரப்பளவில் 4000 விமானங்களை நிறுத்தும் அளவுக்கு ஏற்படுத்தி உள்ளது.
எதற்காக இவர்கள் பாலைவனத்தை தேர்ந்தெடுத்தார்கள் என்றால் அங்கு ஈரப்பதம் குறைவாக இருக்கும். எனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விமானங்கள் எளிதில் துருப்பிடிக்காது.
இப்படி பயன்படுத்த முடியாத விமானங்களை நிறுத்தி வைக்கும் இடம்தான் விமான கல்லறை என அழைக்கப்படுகிறது.
போன் யார்டு விமான கல்லறையில் ராணுவ விமானங்கள் மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளன. இது மொஜாவே பாலைவனத்தில் அமைந்துள்ளது. ஐரோப்பாவில் ஓய்வு பெற்ற விமானங்களை நிறுத்தி இருக்கும் கல்லறைக்கு பெயர் தெருவேல். ஆஸ்திரேலியா விமான கல்லறைக்கு பெயர் ஆலிஸ் ஸ்பிரின்ஸ்.
இங்கிலாந்து நாட்டில் டெம்பிள் விமான நிலையம் இதற்கான கல்லறையாக உள்ளது. ரோஸ் வெல் விமான நிலையத்தில் பல்வேறு விமானங்கள் மறுசுழற்சி செய்யும் இடமாகும்.
பெங்களூருவில் இந்த இடத்துக்கு பெயர் குழி பந்தாட்ட குழி. இந்த இடத்தில் பழைய விமானங்கள் மறுசுழற்சி செய்யும் வசதி உள்ளது. உலகில் பெருகி வரும் கடன் சுமையால் திவால் நிலைக்கு சென்ற விமானங்கள் கல்லறைக்கு அனுப்பப்படுகிறது.
1990 இல் இருந்து பயன்படாத ஈஸ்ட் வெஸ்ட், பாரமவுண்ட் ஏர்வேஸ், கிங்பிஷர், ஏர்கோஸ்டா, ஏர் டெக்கான், சகாரா என பட்டியல் நீண்டு கொண்டு செல்கிறது. சில நாடுகளில் இந்த விமானங்களை பார்வையிட பொதுமக்களிடமிருந்து கட்டணம் வசூலித்து பார்வை இட செய்கிறார்கள்.