கிரெடிட் கார்டுகள் வரமா சாபமா?

 கிரெடிட் கார்டுகள் வரமா சாபமா?

ம்பாதிக்கும் 100 % அமெரிக்கர்கள்  90 நாள் கடனில் (credit) வாழ்கிறார்கள்  என்று சொல்லப்படுவதுண்டு.  இன்னும் சில ஆண்டுகளில் இந்த நிலை இந்தியாவிலும் வரப்போகிறது. இன்றைய நுகர்வு கலாசாரத்தில் கிரெடிட் கார்டு என்பது சம்பளதாரர்களின் தவிர்க்கமுடியாத ஒரு Financial Instrument எனலாம். உங்களில் பலருமேகூட ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை வாங்கி வைத்திருக்கலாம்.

2017-ம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி நம் நாட்டிலில் புழக்கத்திலிருந்த மொத்த கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை 2.9 கோடி. இதுவே 2021 மார்ச்சில் 6.2 கோடி. இந்த ஆண்டு மார்ச் நிலவரப்படி 7.4 கோடி. சுமார் 1 லட்சம் கோடிக்கும் மேலாக கிரெடிட் கார்டுகள் மூலமாக செலவு செய்யப்பட்டுள்ளது. இது டெபிட் கார்டுகளின் செலவைவிட அதிகம். கடந்த ஆண்டு 3 சதவிகிதமாக இருந்த கிரெடிட் கார்டு வைத்திருப்போரின் எண்ணிக்கை இந்த ஆண்டு 5.5% ஆக அதிகரித்துள்ளது. பல வங்கிகள் அக்கவுன்ட் ஓப்பன் செய்யும்போதே இலவசமாக கிரெடிட் கார்டுகளை வழங்கிவிடுகின்றன. சில வங்கிகள் விழாக்காலங்களில் சிறப்பு சலுகைகள் மூலம் கிரெடிட் கார்டுகளை விற்கின்றன. .

நமக்கு கிரெடிட்கார்டுகளை வழங்கும் இந்த கிரெடிட் கார்டு நிறுவனங்களுக்கு என்ன லாபம் ?  

அனைத்து கிரெடிட் கார்டு நிறுவனங்களும், கார்டு உரிமையாளர்கள் கிரெடிட் கார்டு கடனில் வாங்கும் பொருள்கள் மூலமாகத்தான் லாபம்  இந்த வங்கிகள் சம்பாதிக்கின்றன. நீங்கள் கிரெடிட் கார்டில் வாங்கும் பொருட்களுக்கு அந்த கார்டின் வங்கி விற்கும் நிறுவனத்துக்கு உடனே பணம் அனுப்பிவிடும். ஆனால் அதற்கு 1 முதல் 3 % வரை கட்டணமாக கழித்துக்கொள்ளும். அதனால்தான் கீர்ட் கார்ட் விற்பனைகளுக்கு சில நிறுவனங்கள் 2 % அதிகம் வசூலிக்கின்றன. அல்லது அதை தள்ளுபடி செய்து சலுகையாக அறிவிக்கின்றன (அந்த சதவீதம் பொருளின் விலையில் கூட்டப்பட்டிருகிறது என்று அர்த்தம்). 

மேலும் , கிரெடிட் கார்டு மூலம் பொருள் வாங்குபவர்கள் பெரும்பாலும் சரியான நேரத்தில் பில்லுக்கான பணத்தை செலுத்துவதில்லை(80%). சுமார் 45 நாள்களுக்கு வட்டியில்லா கடன் கிடைக்கிறது என்பதற்காகப் பொருள்களை வாங்கி விடுகிறார்கள். அந்த 45 நாள்களைத் தாண்டி பணத்தை திரும்பச் செலுத்துகையில் ஆண்டுக்கு சுமார் 35 முதல் 45% வரை வட்டிகட்ட நேரிடும். உதாரணமாக நண்பர் ஒருவர் கிரெடிட் கார்டு பில்லை செலுத்த தவறியபோது அவருக்கு தாமதக் கட்டணம் மற்றும் வட்டி 3% எனக் குறுஞ்செய்தி வந்தது. முதலில் இது ஆண்டுக்கு 3% என நினைத்தார். பின்புதான் அது மாதத்திற்கு 3% வட்டி என உணர்ந்தார். அதாவது, ஆண்டுக்கு சுமார் 36%. இதில்தான் வங்கிகளும், கிரெடிட் கார்டு நிறுவனங்கள் லாபமடைகின்றன. இப்படி கிரெடிட் கார்டின் தாமதக் கட்டணம் மற்றும் வட்டி விவரங்களை முழுமையாகத் தெரிந்துகொள்ளாமல் இருப்பதுதான் பலரும் செய்யும் முதல் தவறு.

 அடுத்தது கார்ட்களுக்கு நீங்கள் செலுத்தும் மறைமுக கட்டணங்கள்

 ஜீரோ கட்டணம், ஷாப்பிங் சலுகைகள், ரிவார்டு பாயின்ட்டுகள் எனப் பல்வேறு கவர்ச்சிகரமான அம்சங்களைப் பார்த்தபிறகே பலரும் கிரெடிட் கார்டு பெற ஓகே சொல்வார்கள். நம்முடைய தேவைக்கு எந்த மாதிரியான கார்டு தேவை என்பதைத் தேர்வு செய்ய இவற்றையெல்லாம் பார்ப்பது சரியான முறைதான். ஆனால், மேற்கண்ட விஷயங்களிலும் சிலவற்றை முழுமையாகப் பார்க்காமல் விட்டுவிடுவார்கள். உதாரணமாக, கிரெடிட் கார்டிற்கு முதல் ஆண்டு மட்டும் கட்டணம் (Annual Fee) இருக்காது. ஆனால், அடுத்த ஆண்டு புதுப்பிக்கும்போது அதற்கு கட்டணம் கேட்பார்கள்.

கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி பெட்ரோல் போடலாம் எனச் சொல்வதை கவனித்திருப்பீர்கள். ஆனால், அதற்கு 2.5% கட்டணம் என்பதை கவனித்திருக்க மாட்டீர்கள். இதனால் கார்ட் வைத்திருப்பவர்கள் இதை அறியாமல் தொடர்ந்து கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி வந்தால் ஆண்டுக்கு இதுவே பெரிய தொகையாக மாறியிருக்கும்.

இதேபோல கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி சிலர் ஏ.டி.எம்மில் பணம் எடுப்பார்கள். இதற்கு சுமார் ₹500 பரிவர்த்தனைக் கட்டணம் (Transaction Charges) செலுத்தவேண்டி வரும். இப்படி எடுக்கும் தொகைக்கும் சுமார் 2% கட்டணம் இருக்கும். இந்தக் கட்டணத்திற்கு வட்டியில்லா சலுகைக் காலம் எதுவும் கிடையாது. பணம் எடுத்த முதல் நாளிலிருந்தே ஆண்டுக்கு கிட்டத்தட்ட 35% வட்டி கட்ட வேண்டி வரும்.

எனவே கிரெடிட் கார்டைப் பொறுத்தவரை ஆண்டு புதுப்பித்தல் கட்டணம், காலதாமதக் கட்டணம், கடன் தவணைக்கான செயலாக்க கட்டணம், ஏ.டி.எம்மில் பணம் எடுக்கும் கட்டணம் என அனைத்துக் கட்டணங்களையும் தெரிந்துவைத்துக் கொண்டு அந்த சேவைகளைப் பயன்படுத்துங்கள்.

எல்லா கார்ட் கம்பெனிகளும் உங்கள் பில்லில் குறைந்தபட்ச தொகையை மட்டும் செலுத்தினால் போதும் என்று அறிவிக்கிறது.  சிலர் புத்திசாலித்தனமாக செயல்படுவதாக எண்ணி, தாமதக் கட்டணம் இல்லாததால் குறைந்தபட்ச தொகையை (Minimum Amount) மட்டும் செலுத்தி வருவார்கள். ஆனால், குறைந்தபட்ச தொகைபோக மீதித் தொகைக்கு ஆண்டு வட்டி சுமார் 36% கட்டவேண்டும் என்பதை மறந்துவிடக்கூடாது.

கிரெடிட் கார்ட்களில் கடன் வாங்கலாமா?

ஆசையைத் துண்டும் வகையில் பணக்கடன் அறிவிப்புகளை கார்ட் நிறுவனங்கள் வழங்குகின்றன.  கடன் அட்டையிலேயே அதற்கான வசதிகளும் உண்டு.  ஆனால், அவசியமானபோது மட்டுமே பயன் படுத்தவேண்டிய சலுகை இது. தேவையிருப்பின் நிச்சயம் பயன்படுத்தலாம். ஆனால், அநாவசியச் செலவுகள் எனில் கிரெடிட் கார்டுக்கான கடன் வரம்பில் 30% அளவைத் (Credit level / Credit Limit) தாண்டாதீர்கள்.

உதாரணமாக உங்கள் கடன்வழங்கும் தொகை அதிக  ₹1 லட்சம் எனில், கிரெடிட் கார்டுப்பணக் கடனை  ₹30,000-க்குள்ளேயே இதுவே சரியான லிமிட். ஒருவேளை கிரெடிட் கார்டு வரம்பைத் தாண்டினாலோ, சரியாக பில்லை திருப்பிச் செலுத்த முடியவில்லை என்றாலோ உங்கள் கிரெடிட் ஸ்கோர் அடிவாங்கும் அபாயம் இருக்கிறது. (இப்போது வங்கிகள் இந்த ஸ்கோர் சரியாக் இல்லை என்றால் க்டன்கள் வழங்காது.)  கூடவே அதிக கட்டணம் கட்டவேண்டிய நிலையும் ஏற்படும். கிரெடிட் கார்டில் வாங்கிய ஒரே ஒரு மோசமான கடனால், எதிர்காலத்தில் வீட்டுக்கடன், கல்விக்கடன் உள்ளிட்ட அத்தியாவசியக் கடன்களுக்கு கூட சிக்கல் வரலாம் என்பதை மறந்துவிடக்கூடாது.

சிலர் கிரெடிட் கார்டை பயன்படுத்தி பொருட்கள் வாங்கி சரியான தேதிகளில் அந்த பில்லை செலுத்தி கிரெடிட்கார்ட்களின் மூலம்  பெறும் 5./60 நாட்கள் இலவச கடன் வசதியை மட்டும் அனுபவிக்கிறார்கள் .  நீங்களும் அந்த புத்திசாலிகளைப் பின்பற்றுங்கள்,  

கிரெடிட் கார்டு உங்களுக்கு வரமா அல்லது சாபமா என்பது நீங்கள் தீர்மானிக்கும் அதன் பயன்பாட்டில் இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com