Diabetes is a sugar disease
Diabetes is a sugar disease

நமக்கு நோய் வர நாம்தான் காரணமா?

Diabetes is a sugar disease
Diabetes is a sugar disease

யாபெடிஸ் என்னும் சர்க்கரை வியாதி, புற்றுநோய், மூளை பாதிப்பினால் வரும் ஸ்ட்ரோக், நீண்டகால மூச்சுப் பிரச்சினைகள் (Chronic Respiratory Diseases), உடல் பருமனால் வருபவை, உயர் ரத்த அழுத்தம். கல்லீரல் சம்பந்தமான நோய்கள், CVD (Cardiovascular diseases) எனப்படும்  இருதய நோய்கள். இவற்றில் பெரும்பான்மையானவை நாமே வரவழைத்துக் கொள்வதுதான் என்பது தெரியுமா உங்களுக்கு?

நோய் வர நாம்தான் காரணமா?… திகைக்க வேண்டாம். உண்மைதான்.

‘லைஃப் ஸ்டைல்’ எனப்படும் தற்போதைய நம் வாழ்க்கை நெறியினால் அனேகமாக நாமாகவே வரவழைத்துக் கொள்ளும் நோய்கள் பற்றி இப்போது நிறைய எச்சரிக்கைகளைக் கேள்விப்படுகிறோம்.

உடல் நலம் பாதிக்கும் உணவு உட்கொள்வது அதுவும் நேரம் தவறி உண்பது,, உடற்பயிற்சியின்மை, மது அருந்துதல், புகை பிடித்தல் போன்ற பழக்கங்களால் இந்த நோய்கள் எளிதில் வருகின்றன.

நாம் என்ன சாப்பிடுகிறோம், எப்போது சாப்பிடுகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம், எவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறோம் என்பதுதான் நம் உடல் நலத்தின் அடிப்படை.

டாக்டர். ஜே. பாஸ்கர்
டாக்டர். ஜே. பாஸ்கர்
Q

இவற்றைப்பற்றி மேலும் அறிந்துகொள்ளவும், இந்த நோய்கள் வராமல், என்ன முன்னெச்செரிக்கைகள் எடுக்கவேண்டும் என்றும் மருத்துவர், எழுத்தாளர் டாக்டர். ஜே. பாஸ்கர் அவர்களிடம் கேட்டோம்…

A

பொதுவாக, பெண்களுக்கு வீட்டில் வேலைகள் அதிகம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு, அலுவலகப் பணிகளும் சேரும்போது அது மன உளைச்சலைத் தருகிறது. அவசியத்திற்காக வேலைக்குச் செல்லும் பல பெண்களுக்கு, குழந்தைகளைச் சரிவர கவனிக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்வும் ஏற்படுகிறது.

வீட்டிலும், அலுவலகத்திலும், உடல், மனச் சோர்வை வெளிக் காட்டிக்கொள்ளாமல் வேலை செய்ய வேண்டியுள்ளது. இதனால் தூக்கம் கெடுகிறது. இதுவே, மன அழுத்தம், கோபம், கவனக் குறைவு, திறமைக் குறைவு போன்ற பல சிக்கல்களுக்கு இடமளிக்கிறது.

அவர்களுக்கு முதலில் நல்ல, 7 மணி நேர உறக்கம் அவசியம். உடலுக்கு ஓய்வும் அவசியம்.  சரியான தூக்கம், ஓய்வு கிடைக்கும் வகையில் நேரத்தை திட்டமிடுதல் அவசியம். வாரம் ஒரு நாளாவது ரிலாக்ஸ்ட் ஆக இருங்கள். பிரச்னைகளை மறந்து மனசை லேசாக்கிக் கொள்ளுங்கள். இது ஆண்களுக்கும் பொருந்தும்.

Q

இப்போது உலகமே மின்னணு சாதனங்கள் (gadgets) மயமாகிவிட்டது. இதுவும் நம் வாழ்க்கை முறை மாற ஒரு காரணம்தானே டாக்டர்?

A

நிச்சயமாக செல்ஃபோன், கம்ப்யூட்டர் போன்ற சாதனங்கள் இல்லாமல் வாழவே முடியாது என்று ஆகிவிட்டது எனலாம். இந்தியாவில் 84 சதவீதத்தினர் காலை எழுந்த உடனேயே செல்ஃபோனில் மூழ்கி விடுவதாக ஒரு ஆராய்ச்சியில் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

நமது ரொட்டீன் வழக்கங்கள் மாறுகின்றன. செய்ய வேண்டிய வேலைகளிலிருந்து கவனம் சிதறுகிறது.

தவிர, உடல் வலி, தோள்பட்டை வலி, முதுகு வலி மூட்டு வலி எல்லாம் வருகின்றன. ஒரே இடத்தில் அமர்ந்து கம்யூட்டரில் வேலை பார்ப்பவர்களுக்கு , குறிப்பாக ஐ.டி யில் இருப்பவர்களில் பலர்,  25 வயதிலேயே பாதிக்கப் படுகிறார்கள் .

ஒரே நிலையில் (Posture) உட்கார்ந்து வேலை செய்யும்போது தசைகள் இறுகிவிடும். மொபைல், கம்ப்யூட்டர் திரை எதுவானாலும் தொடர்ந்து பார்க்காமல் குறைந்த பட்சம் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை எழுந்து, நடந்து, வேறு பாஸ்சரில் உடலுக்கும் கால்களுக்கும் பயிற்சி கொடுப்பது மிக அவசியம். குனிந்து பார்க்காமல், கண்களின் லெவலுக்கு ஏற்ப திரைகள் இருக்கவேண்டும். தொடர்ந்து திரையைப் பார்ப்பதால், கண்களிலும் ஈரப்பசை வற்றி, உலர்ந்து போய்விடும்… எனவே, கண்களுக்கும் இந்த ஓய்வு அவசியம். அதற்கான மாய்ஸ்ட்சர் ட்ராப்ஸ் பயன்படுத்தலாம்.

உணவுப் பழக்கங்கள்...
உணவுப் பழக்கங்கள்...
Q

உணவுப் பழக்கங்கள்தான் பாதி வியாதிகளுக்குக் காரணம் அல்லவா?

A

ஃபாஸ்ட் ஃபுட் எனப்படும் துரித உணவுகளை அதிகம் உட்கொள்வது ஆபத்தானது. அதில் இருக்கும் அதிக உப்பு, மசாலாப் பொருட்கள், எண்ணெய் போன்றவை உடலுக்கு அதிகம் கெடுதல் விளைவிக்கின்றன.

சரியான நேரத்துக்கு சாப்பிடுவது மிகவும் அவசியம், நேரம் தவறி உண்பதும் பல நோய்களுக்கு வழி வகுக்கும். சிலர், மாலை ஆறு மணிக்கு சாப்பிட்டுவிட்டு அப்புறம் காலை வரை எதுவும் சாப்பிடுவதில்லை என்பார்கள். அதுவும் தவறு. ஒவ்வொரு 3 மணி  நேரத்திற்கும் ஏதாவது சாப்பிடவில்லை யென்றால், வயிற்றில் அமிலம் உற்பத்தி ஆகி, அல்சர் வர வாய்ப்பு அதிகம்.

அரிசியை சிலர் தவிர்க்கிறார்கள். உடலுக்கு கார்போஹைடிரேட் அவசியம் அல்லவா? “டயட்டில்” இருக்கும்போது நம் உடல் இயங்கத் தேவையான சக்தியை, உடலில் இருக்கும் கொழுப்பிலிருந்து எடுத்துக் கொள்வதால் உடல் இளைக்கிறது.

நமது தென்னிந்திய உணவு முறை உடலுக்கேற்ற சரிவிகித உணவைத் தருகிறது. நார்ச்சத்து அதிகமாக உள்ள, கொழுப்பு குறைந்த உணவுகளை உட்கொள்வதால் ஆரோக்கியமாய் இருந்து, நோய்களை அண்டவிடாமல் தடுக்கலாம்.

இதையும் படியுங்கள்:
உங்களை இனிமே தலையாட்டி பொம்மைன்னு சொன்னா கோபப்படாதீங்க!
Diabetes is a sugar disease
Q

சில வகை உடைகள், அழகுசாதனங்கள் இவையும் நம் உடலுக்கு பாதிப்பு தரக்கூடியவைதானே டாக்டர்?

A

இங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு மேலை நாடுகளைப் போல் லெதர் ஜாக்கெட்  போன்றவை அணியக்கூடாது. கெமிகல், சாயத் தொழிலில் இருப்பவர்கள்(Professional Hazards) தக்க உடைகளைப் போடுவதன் மூலம் சில பாதிப்புக்களைத் தவிர்க்கலாம்.

Q

நடத்தலின்  அவசியம் குறித்துச் சொல்லுங்களேன்...

A

இப்போது பள்ளி செல்லும் குழந்தைகள் கூட நடப்பதில்லை. நடை சிறு வயதிலிருந்தே அவசியம். மாலை வெயிலில் விளையாடும்போது விட்டமின் டி கிடைக்கும். பிள்ளைகளை சைக்கிளில் செல்லப் பழக்குங்கள். சைக்கிளும் மிக நல்ல உடற்பயிற்சி.

சுறுசுறுப்பான நம் நடவடிக்கைகள் (Physical Activities), மது, சிகரெட் தவிர்த்தல், நார்ச்சத்து அதிகமான உணவுகள், எடை அதிகமாகாமல் இருத்தல், மன அழுத்தம் கொள்ளாமல் இருத்தல் இவையெல்லாமே ஆரோக்கிய வாழ்வின் அடிப்படைத் தேவைகள்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com