கவிதாஞ்சலி - நடிகர் பாக்கியராஜ் என்றைக்கும் எங்கள் மனங்களில்!

தனது திரைப்படங்களின் மூலம் சமூக முரண்பாடுகளை எளிய மக்களின் மொழியில் சொல்லிய பாக்யராஜ் அவருக்கு அஞ்சலி செலுத்தும் கவிதை..
bhagyaraj-tamil-cinema-director-actor-tribute
bhagyaraj-tamil-cinema-director-actor-tributeImage credit: AI Image
Updated on
Kalki Strip
Kalki Strip

1. என்றைக்கும் எங்கள் மனங்களில்! (bhagyaraj-tamil-cinema-director-actor-tribute)

என்ன சாரே! இப்படியா எங்களைநீ

ஏமாற்றிப் போவாய்? ஏன்உன்தலைவன்

சீக்ரட்டாய் உனக்குச் செய்தி அனுப்பினாரோ?

‘வந்துவிடு விரைந்து சொர்க்கத்தைக் கலக்க’வென்று?

எத்தனை படங்களில்நீ இயல்பாய் நடித்திருந்தாய்

அத்தனையும் கண்முன்னே ஆலவட்டம் போடுதய்யா!

அந்த ஏழுநாட்கள் பாலக்காட்டு மாதவனை

மறக்காதே எங்கள்மனம்! மரபை மீறாது

எடுத்த அப்படத்தை எப்படி மனம் மறக்கும்?

மௌனமாய் கீதங்களை மனத்தில் நிறைத்தவனே

முந்தானை முடிச்சவிழ்க்க முடியாதே யாராலும்!

மூக்குத்திப் பூதானும் முருங்கைக் காய்தானும்

அழுது புலம்புவதை அமரனே அறிவாயோ?

இவ்வுலகில் படங்களை இயக்கியது போதுமென்று

இயமனும் அழைத்தானோ! தன்னுலகில் படமெடுக்க!

எங்களனைவரையும் எப்பொழுதும் சிரிப்புடனே சிந்திக்கவும்

வைத்துவந்த நீயின்று சிரிப்புடனே பிரிந்தாயே!

அப்பாவியாய் நடிப்பதிலே அனைவரையும் மிஞ்சியவனே

ஒப்பாரிப் படங்களையும் உலகுக்கு அளித்தவனே!

சின்னவீடு நம்மஆளு சிகப்பு ரோஜாக்களென்றும்

தாவணிக் கனவென்றும் எத்தனையோ கதைகளை

எம்முளத்தில் பதித்துவிட்டாய்! என்றுமவை நினைவினிலே!

திரைக்கதை மன்னனாய் திகழ்ந்தநீ இன்றைக்கு

கண்ணாடிப் பெட்டியிலே காட்சி தருவதேனோ?!

நகைச்சுவை மாறாமல் நனவுலகை விட்டவனே

இறந்தாய் நீயென்று ஏற்கமனம் மறுக்குதையா!

உந்தன் படங்களால் உலகில் நீவாழ்வாய்!

எங்கள் மனங்களிலே என்றைக்கும் வீற்றிருப்பாய்!

- ரெ.ஆத்மநாதன், கூடுவாஞ்சேரி

2. கலையுலகின் பிரம்மன்!

கலைத்தாயின் அற்புதப் படைப்பு!

கதைவடிவின் கலைஞானம்!

கற்பனையின் ஊற்றுக்கண்!

கதை சொல்லுவதில் மன்னாதி மன்னன்!

நகைச்சுவை கலந்து நவரசம் தந்த நன்முத்து!.

பன்முகம் படைத்த பவித்ரமான படைப்பாளி!

ஆசான் இல்லா கலை உலகில்

அவர் பிாிந்த பதினேழாம் நாளில்

அவரோடு இணைந்த இளவல்!

ஐம்பதாண்டு காலம் திரையுலகில்

தனிமுத்திரை பதித்த தகைசால் விருது!

சுவர் இல்லா சித்திரம் தந்த சிந்தனைச் சிற்பி!

இதையும் படியுங்கள்:
பாரதிராஜாவுக்கு மரியாதை: எமனை அழவைத்த இமயம்!
bhagyaraj-tamil-cinema-director-actor-tribute

கலை உலகின் பிரம்மாவேடு இணைந்த தாவணிக்கனவுகள்!

முத்திரை பதித்த முந்தானை முடிச்சு!

நகைச்சுவை தந்த நேற்று இன்று நாளை!

எம் ஜி ஆாின் கலை உலக வாாிசு!

கதை திரைக்கதை வசனம் பாடல் இசை என கோலோச்சிய பஞ்சதந்திரம்!

சூப்பர் ஸ்டாரோடு கைகோா்த்து களம் கண்ட நான் சிகப்பு மனிதன்!

நகைச்சுவையோடு நல்ல கதை தந்த தனிப்பிறவி! 

எம் ஜி ஆர் விட்டுப்போன படத்திற்கு மறு உருவம் கொடுத்தவர்! 

கதைகளில் பல திருப்பங்கள் தந்த தத்துவ ஞானி!

பதினாறு வயதினில் படைபாற்றல் மிக்க மிகச்சரியான ஆளுமை

அனைவராலும் அறியப்பட்ட ஆளுமைமிக்க கலைத்தாயின் கவிநிலவு!

காலத்தால் அழியா கலைத்தாயின் காவியச் செல்வன் புகழ்  பரவட்டும்!   

- புவனாநாகராஜன், செம்பனாா்கோவில்

logo
Kalki Online
kalkionline.com