பாரதிராஜாவுக்கு மரியாதை: எமனை அழவைத்த இமயம்!

அரை நூற்றாண்டு திரை வாழ்க்கையில் அடிமட்ட மக்களின் உணர்ச்சிகளை திரையில் செதுக்கிய 'இயக்குனர் இமயம்' பாரதிராஜாவுக்கு மரியாதை மலர்த்தும் கவிதை
bharathiraja-tamil-cinema-director-tribute
bharathiraja-tamil-cinema-director-tributecredit AI image
ரெ. ஆத்மநாதன்

எழுத்தாளர் ரெ.ஆத்மநாதன் பொருளாதாரத்திலும், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியலிலும் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். கதை, கவிதை, நாடகம் என்று முத்தமிழுக்கும் பணி செய்பவர். கதை, கவிதைகளை மாத,வார, ஆன்லைன் இதழ்களில் எழுதி வருபவர். இவரின் 4 நாடகங்கள் சென்னை, திருச்சி வானொலி நிலையங்களால் ஒலி பரப்பப் பட்டன. இளங்கலை முதலாண்டு மதுரைத் தமிழ்ச்சங்கத் தேர்வில் (1972-73) மாநில முதன்மை பெற்றவர்.பட்டி மன்றம், கவியரங்கம் ஆகியவற்றில் பங்கேற்பவர். அமெச்சூர் நாடகங்களில் நடித்தவர். தமிழக அரசின் மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறையில் ஆராய்ச்சி முன்னவராகச் சேர்ந்து, அத்துறையின் பொறுப்பு இயக்குனராக ஓய்வு பெற்றவர். “தொடர்கதைகளும் முற்றும்” என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டவர்.

Updated on: 

எமனை அழவைத்த இமயம்! (bharathiraja-tamil-cinema-director-tribute)

பதினாறு வயது நாயகன்நீ!

பக்குவப் படங்கள் பலவற்றை

பாரினில் விதைத்த தூயவன்நீ!

தூல உடம்பே மரணிக்கும்உன் 

துயரம் போக்கி நிகழ்விக்கும்!

அடைபட்டுக் கிடந்த படப்பிடிப்பை

அண்டவெளிக்குக் கொணர்ந்தவன் நீ!

அடிமட்ட மக்களின் உணர்ச்சிகளை 

அழகாய்த் திரையில் கொடுத்தவன்நீ!

சப்பாணி என்றும் நிலைத்திருப்பான் 

சரித்திரம்தனையே கடந்து நிற்பான்!

புதியவேதம் படைத்தே நீயும் 

புதுமைக் கருத்துக்களைத் தூவிவிட்டாய்!

“பாலுத்தேவன் என்பது நீங்கள்

படித்து வாங்கிய பட்டமா”வென்று

பாலகன் கேட்பது மனதிலென்றும் 

பசுமரத் தாணியாய் நின்றவொன்று!

ஓயாத அலைகள் ஓலமிட்டு 

உந்தன்பெயரைக் கூவி நிற்கும்!

தாலியுமின்றி சிலுவையும் விடுத்து

தரணியில் நாங்கள் மனிதராகவே

வாழ்ந்தால் போதும் என்றகாதல் 

வரலாற்றில் என்றும் நிலைத்தவொன்று!

மரியாதை என்பது திறமைக்கு 

மகுடம் சூட்டும் பண்பாகும்!

முதல் மரியாதைக் குரியவனாக

முன்னேறினாய் நீயும் திரையுலகில்!

சாமி!எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணுமென்ற

சங்கேத வார்த்தைக்கு அழிவேயில்லை!

கடலோரம் அமர்ந்து எழுதும்கவிதை 

கற்பனைதன்னில் அலைகளை மிஞ்சும்!

அலைகளைப் பார்க்கையில் உந்தன்படங்களே

அலையலையாய் மனதில் தோன்ற

கற்பனை எண்ணம் நீரில் மூழ்க

முத்தாய் ஒருநாள் மேல்வந்திடுமோ?!

உறவுகள் பலவற்றை உன்னைப்போலே

உதிரஉதிரத் திரையில் கொட்டியோர் 

வேறுயாரும் இருப்பதாய் எனக்கும் 

விபரம் ஏதும் கிடைத்திடவில்லை!

இதையும் படியுங்கள்:
சிறுகதை: கல்லாய் போன மனிதர்கள்!
bharathiraja-tamil-cinema-director-tribute

அரைநூற்றாண்டுத் திரை வாழ்க்கையில் 

அணுகாத பட்டங்கள் ஏதுமில்லை!

அதனைச்சொல்ல இங்கு புகுந்தால் 

அனுமன் வாலாய் மிகவும்நீளும்!

உந்தன்மீது பாசக்கயிற்றை வீசியபோது

எமனே அழுது புலம்பிநின்றாராம்!

logo
Kalki Online
kalkionline.com