
112 ஆண்டுகள், 12 ஏக்கர் நிலம், 2,000 மாடுகள்...
56 ஷெட்களில் கூலிங் ஷெட்டு. சென்னையில் ஒரு பிரமாண்டமான பசுமடம்.
தி மெட்ராஸ் பிஞ்ச்ராபோல்' ட்ரஸ்ட்டைச் (The Madras Pinchrapole Trust) சேர்ந்தவர்களால் நடத்தப்படுகிறது இந்த பசுமடம்.
பிஞ்ச்ராபோல்' என்றால் தமிழில் ‘பசுமடம்' என்று அர்த்தம்.
சென்னை அயனாவரம் - கொன்னூர் பிரதான சாலையில் இருக்கிறது இந்தக் கோசாலை. ஜெயின் கோயிலின் தோற்றத்தில் உள்ளது இந்த வாயில்லா ஜீவன்களின் இந்தப் பசுமடம்.
வளாகத்துக்குள்ளேயே ஒரு கால்நடை மருத்துவமனை. பரமாரிப்பதற்காக 120 தன்னார்வலர்கள் இருக்கிறார்கள்.
மேலாளராகப் பணியாற்றி வரும் சுரேஷ் குமார், இந்தக் கோசாலை `1906-ம் வருஷம் ஆரம்பிக்கப்பட்டது. இதை உருவாக்கியவர் குஷால்தாஸ். விலங்கு நல வாரியத்தில் அனுமதி பெற்ற, அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கோசாலை இது.
காலையில் இரண்டு மணி நேரம் ஷெட்டுக்குள்ளேயே மாடுகளைத் திறந்து விடுவோம்.
பலர் தினமும் இங்கே வருவார்கள். குடும்பத்தினரின் பிறந்த நாள், திருமண நாள், இறந்து போன பெரியவர் களின் நினைவு நாள் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் மாடுகளுக்கு தீவனம் மற்றும் நன்கொடை தருவதுண்டு.
மாட்டுப் பொங்கல் அன்று இந்த இடமே திருவிழாபோல காட்சியளிக்கும். ஜெயின் மக்கள் மட்டுமல்ல... மற்ற பிரிவினரும் இங்கே வருவார்கள்.
ஆளுநா், உயர் நீதிமன்ற நீதீபதி ஆகியோர் ட்ரஸ்ட்டின் கௌரவத் தலைவர்களாக இருக்கிறார்கள். போர்டு மெம்பர்களாக ஜெயின் மக்கள் மற்றும் தமிழ் மக்கள் என அனைத்துப் பிரிவினரும் உள்ளனர்.
திருவள்ளூர், பெரியபாளையம், தென்காசி, செங்கோட்டை... என தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் இந்து அறநிலையத்துறையின் சார்பாகவும் பல மாடுகள் இங்கே கொண்டு வந்து விடப்பட்டிருக்கின்றன. நேர்ந்து விடப்படும் மாடுகளைக் கோயில்களில் சரியாகப் பராமரிக்க முடியாமல் இங்கே விடுவதும் உண்டு.
கோயில்களிலிருந்து ஆண்டுக்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகளைக் கொண்டு வந்து விடுகிறார்கள்.
இந்து, கிறிஸ்டியன், முஸ்லிம், சீக்கியர், சிந்தி... என அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் கோசாலைக்கு வருகிறார்கள். அவர்கள் விருப்பப்படி நன்கொடை தருவார்கள். இஸ்லாமியர்கள் நோன்புக் காலங்களில், நோன்பு திறந்து பின் இங்கே வந்து தானமளித்துவிட்டுச் செல்வார்கள்.
அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு, ஆண்டுக்கு ஒருமுறை மாடுகளை எப்படிப் பராமரிப்பது என்று கற்றுக்கொடுக்கும் பயிற்சி வகுப்புகள் இங்கே நடக்கும்.
எங்களுக்கு அரசாங்கத்திடமிருந்து உதவி கிடைத்தால், இன்னும் சிறப்பாக எங்களால் சேவை செய்ய முடியும். நன்கொடையாளர்களும் அதிகமாக வர வேண்டும். நமக்காக உழைத்த பசுவையும், காளையையும் கடைசிக் காலத்தில் நாம் பாதுகாக்க வேண்டியது நமது ஒவ்வொருவரின் கடமையாகும்’’.