மதுவிலக்கால் முன்னேறிய பீஹார்; தமிழ்நாட்டின் நிலை என்னவோ?

Alcohol prohibition
Alcohol prohibition

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர். இருப்பினும் எந்தப் பயனும் இல்லை. ஆனால், மதுவிலக்கை அமல்படுத்தி சத்தமில்லாமல் முன்னேறி வருகிறது பீஹார் மாநிலம். இது குறித்த கூடுதல் தகவல்களை இப்போது அறிந்து கொள்வோம்.

பீஹார் மாநிலத்தில் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ.க., கூட்டணி ஆட்சியை நடத்தி வருகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு இம்மாநிலத்தில் முழு மதுவிலக்கு அமலுக்கு வந்தது. இதனால் கடந்த எட்டு ஆண்டுகளில் மட்டும் குடும்ப வன்முறைகள் சம்பந்தப்பட்ட சுமார் 21 லட்சத்திற்கும் மேற்பட்ட குற்றங்கள் தவிர்க்கப்பட்டு உள்ளன என பிரபல லான்செட் மருத்துவ ஆய்வு இதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த இதழில், உலகளவில் மதுப் பழக்கத்தால் மனிதர்களுக்கு உண்டாகும் விளைவுகளைத் தடுக்கும் வகையில் உலக சுகாதார அமைப்பால் செயல்திட்டம் ஒன்று வகுக்கப்பட்டது. கடந்த 2016 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் மூலம், மதுவிற்கு எதிரான கொள்கைகள் சுமார் 80 நாடுகளில் வகுக்கப்பட்டது. தற்போது சவுதி அரேபியா, ஆப்கானிஸ்தான் மற்றும் லிபியா உள்ளிட்ட 13 நாடுகளில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அவ்வகையில் இந்தியாவில் குஜராத், பீஹார் மற்றும் நாகாலாந்து உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் முழு மதுவிலக்கு அமலில் உள்ளது. மதுவிலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலங்களில் மது குடிப்போர் 40 சதவீதமும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 25 சதவீதமும், குடும்ப வன்முறைச் சம்பவங்கள் 50 சதவீதமும் குறைந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீஹாரில் தொடர்ந்து மது குடிப்போரின் எண்ணிக்கை 7.8% ஆக குறைந்துள்ளது. அதாவது 24 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இப்பழக்கத்தில் இருந்து விடுபட்டுள்ளனர்.18 லட்சம் பேர் உடல் பருமன் குறைப்பாட்டில் இருந்து மீண்டுள்ளனர். மேலும் மனைவியின் மீதான தாக்குதல்கள் உள்பட குடும்ப வன்முறைகள் சம்பந்தப்பட்ட 21 லட்சம் குற்றங்கள் தவிர்க்கப்பட்டது மட்டுமின்றி, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 3.6% குறைந்துள்ளன. பீஹாரில் அமல்படுத்தப்பட்ட பூரண மதுவிலக்கு சட்டம், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்டால், மக்களின் உடல் நலம் சார்ந்த பிரச்சினைகளுக்கு மட்டுமின்றி, குடும்ப வன்முறைகளைத் தவிர்க்கவும் முடியும்.

இதையும் படியுங்கள்:
புகை, மது போன்று தீமை தரும் மேலும் நான்கு விஷயங்கள் எவை தெரியுமா?
Alcohol prohibition

தமிழ்நாட்டில் எப்போது?

தேர்தல் வரும் நேரத்தில் மட்டும் அனைத்து கட்சிகளும் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, தேர்தல் முடிந்த பின் அதனைக் கண்டு கொள்வதே இல்லை. இந்த அவல நிலை எப்போது முடிவுக்கு வரும் என தமிழ்நாட்டுப் பெண்கள் காத்துக் கிடக்கின்றனர். பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதற்கு மது மற்றும் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் தான் முக்கிய காரணமாக உள்ள நிலையில் தமிழ்நாட்டில் மதுவிலக்கு எப்போது வரும் என பலரும் எதிர்ப்பார்க்கின்றனர்.

மதுப்பிரியர்களின் எண்ணம்:

மதுவிலக்கை அமல்படுத்த கோரி ஒருபுறம் பலரும் குரல் கொடுக்க, மறுபுறம் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மதுக்கடைகள் குடிப்பவர்களின் வீட்டிற்கு அருகில் இருப்பதால் தான் இன்று நிறைய பேர் அடிக்கடி மது குடிக்கிறார்கள். ஒருவேளை தொலைவில் இருந்தால் குடிப்பவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com