உண்மையிலேயே கறுப்பு தங்கம்தான்!

ஒரு நிருபரின் நினைவலைகள்!
நடிகர் விஜய்காந்த்
நடிகர் விஜய்காந்த்
Published on

நான் அப்போது சாவி பத்திரிகையில்  நிருபர்  பணியில் இருந்தேன். (1988-95)

குறிப்பாக சினிமா  செய்திகளும்..திரைப்பட விமர்சனமும் என்னுடைய ஸ்பெஷல் பங்களிப்பாக இருந்தது.

அப்போது நடிகர் விஜய்காந்த் உடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது.

ஒருமுறை 'ஏழை ஜாதி'  படபிடிப்பின்போது. (ஜயப்பிரதா  கதாநாயகி என்பதால் கூடுதல் ஆர்வம்)

அவருடைய பேட்டி கேட்டு தொடர்பு கொண்ட போது, விஜய்காந்த் தோ… இதோ... தருகிறேன்" என்று சொல்லி தள்ளி போட்டுகொண்டு இருந்தார்.

எனக்கு  கொஞ்சம் எரிச்சல் ஆகி விட்டது..

"Sir... இஷ்டம் இல்லை என்றால் சொல்லி விடுங்கள்"என்று கடுப்பாக சொல்லிவிட்டேன்.

உடனே அவர் வீட்டுக்கு வரும்படி அழைத்தார்.

ஆனால் எனக்கு ஜயப்பிரதாவை ஃபோட்டோ எடுக்கவும் உள்  புராஜக்ட் இருந்ததால் கொஞ்சம் யோசித்தேன்..

"நான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வருகிறேன்" என்றேன்.

"சரி" என்றவர் மறுநாள் அலுவலகத்தில் பேட்டி அளித்தார்.

ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு  வந்து இருந்தால் ஸ்டுடியோ round up ஆக இன்னும் சிறப்பாக இருந்து இருக்குமே" என்று அபிப்ராயம் தெரிவித்தேன்.

அதற்கு அவர் சொன்ன  பதில்...

"அம்மா. ஒரு  மாசமா அசோக்நகர் குடிசைகள் உள்ள சாலை ஓரம் செட்டிங் போட்டு பட பிடிப்பு  நடக்கிறது. உங்களை அங்கே வர  சொன்னா கௌரவமாக இருக்காது. நான் உங்களுடன் உட்கார்ந்து பேசும்போது யாரேனும் நீங்கள் நிருபர் என்று தெரியாது என்பதால், தேவை இல்லாத அனுமானங்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அதனால்தான் உங்கள் நலன் கருதி தான் interview தேதிகளை தள்ளி போட்டு கொண்டே இருந்தேன். உங்களை யாரும் தவறாக நினைத்து விட இடம் தரக் கூடாது அல்லவா?!" நான் மிகவும்  நெகிழ்ந்து போனேன்.

து ஒரு பிரஸ் மீட். இடைவேளை உணவு.

நான் சைவம் என்பதை அறிந்தவர் என்பதால் தனிப்பட்ட முறையில் கவனித்தார்.

"கீரை சாப்பிடுங்க… பாயசம் நல்லா இருக்கு..."என்று பரிமாறவும் செய்தார்.

கொஞ்ச நேரம் கழித்து…பேச்சு  எதை பற்றியோ வந்தபோது"... care free விளம்பரம்" பற்றி பேச்சு வந்தது.

இதையும் படியுங்கள்:
முலாம் பழ விதைகளில் இருக்கு முத்தான சத்துக்கள்!
நடிகர் விஜய்காந்த்

அது அவரது காதில் சரியாக விழவில்லை போலும்..

"என்ன" என்று கேட்டார்.

உடனே ஒரு துடுக்கான நிருபர் "அதான் தலைவரே… என்று ஆரம்பித்து கொச்சையாக ஒரு வார்த்தையை சொன்னார். அப்போது பலரும் சட்டென்று  சிரித்துவிட, அங்கிருந்த ஒரே பெண்ணான எனக்கு தர்ம சங்கடம் ஆகிவிட்டது..

நான் என் அருகில் இருந்த விஜய்காந்த் முகத்தை பார்த்தேன்.

அவர் சிறிதும்  மாற்றம் இல்லாமல்  முகத்தை வைத்து கொண்ட தோடு பேச்சை லகுவாக  மாற்றி விட்டார். எப்படிபட்ட presence of mind. பெண்களை மதிக்கும் குணம். உண்மையிலேயே கறுப்பு தங்கம்தான்.

நல்ல மனம் வாழ்க. நாடு போற்ற வாழ்க!!!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com