முலாம் பழங்கள் அவற்றின் இயற்கையான இனிப்பு காரணமாக பலருக்கும் பிடித்த பழமாக இருக்கிறது. இந்தப் பழத்தின் கஸ்தூரி வாசனையே இதற்கு முலாம் பழம் என்ற பெயரைக் கொண்டு வந்தது. வெப்பமான மற்றும் சுட்டெரிக்கும் கோடை காலங்களில் இந்தப் பழங்கள் வழக்கமான நுகர்வுக்கு மிகவும் பிரபலமாக இருந்தாலும், அதன் விதைகளும் பல நன்மைகளைக் கொண்டு விளங்குகின்றன.
இந்தப் பழத்தின் விதைகளில் ஊட்டச்சத்து நிறைந்துள்ளது என்பது பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். இது உங்கள் ஆரோக்கியத்தை கணிசமாக அதிகரிக்க உதவுகிறது. இதன் விதைகளில் நுண்ணுயிர் எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு, நீரிழிவு எதிர்ப்பு, அல்சைமர் எதிர்ப்பு மற்றும் டையூரிடிக் பண்புகளும் உள்ளன.
முலாம் பழம் விதைகளை உலர்த்தி சிற்றுண்டியாக உண்ணலாம். இந்தப் பதிவில் முலாம் பழ விதைகளின் பலரும் அறியாத நன்மைகள் என்னென்னவென்று தெரிந்து கொள்ளலாம்.
எடை மேலாண்மை: முலாம் பழ விதைகள் புரதங்களின் சரியான ஆதாரங்கள். இது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்க உதவுவதோடு, எடையை நிர்வகிக்கவும் உதவுகிறது.
சருமம் மற்றும் முடியை பராமரிக்கிறது: முலாம் பழ விதைகளில் லினோலிக் அமிலம் போன்ற பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பின் அளவு அதிகம் உள்ளது. இது முடி வளர்ச்சி மற்றும் சிறந்த சரும பராமரிப்பை ஊக்குவிக்க உதவுகிறது. மேலும் இது, இனப்பெருக்க அமைப்பை நிர்வகிக்கவும் உதவுகிறது.
இதய ஆரோக்கியம்: முலாம் பழ விதைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இது இதயத்தின் சிறந்த செயல்பாட்டிற்கு உதவுகிறது. மேலும், இந்த விதைகளில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து உள்ளன. இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
நீரிழப்பைத் தடுக்கிறது: முலாம் பழங்களில் அதிக நீர்ச்சத்து இருப்பதால், உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. இது உடலில் குறைந்த ஆற்றலை அதிகரிப்பதோடு, நாள் முழுவதும் உங்களை புத்துணர்ச்சியோடு வைத்திருக்க உதவுகிறது.
கண் பார்வையை மேம்படுத்துகிறது: முலாம் பழத்தில் உள்ள பீட்டா கரோட்டின், ஜீயாக்சாண்டின் மற்றும் லுடீன் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உங்கள் பார்வையை சீராக வைத்திருப்பதோடு, கண்களை ஆரோக்கியமாகவும் பாதுகாக்கிறது.
எவ்வளவு நாட்கள் சாப்பிடலாம்?: முலாம் பழத்தின் விதைகளை சுத்தம் செய்து சேமித்து வைத்தால், அவை கெட்டுப்போவதற்கு சில நாட்களுக்குள் சாப்பிட வேண்டும். விதைகள் வறுக்கப்பட்டால், அவற்றை 2 முதல் 3 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.