
உலகத்துல மாஸ் தலைவர்கள் அதிபர், பிரதமர், யாரா இருந்தாலும் அவங்கள நெருங்குறது ரொம்ப கஷ்டம், இல்லையா? 'நோ என்ட்ரி' போர்டு, கண்ணுக்கு தெரியாத செக்யூரிட்டி, ப்ரோட்டோகால் எல்லாம் இருக்கும். அதே மாதிரி, நம்ம உடம்புல ஒரு மெகா தலைவர் இருக்காரு... அவரு யாரு? என்ன பேரு?
இவரு நம்மோட எண்ணங்கள், கனவுகள், முடிவுகளோட சூப்பர் பாஸ். ஆமாங்க, நம்ம Mr. மூளை தானுங்க!
Mr. மூளைய பாதுக்காக்குறதுக்கு, காப்பாத்துறதுக்குன்னே ஒரு ஸ்டிரிக்டான ஆளு இருக்காரு, அவரு பெயர் இரத்த-மூளை அரண் (Blood-Brain Barrier-BBB). இது வெறும் செல் அடுக்கு இல்லப்பா, இது மூளைய எந்த ஆபத்தும் தொடவிடாம காக்குற உயிரியல் செக்யூரிட்டி டீம், "யாருப்பா நீ? ஐடி காட்டு!", “என்ட்ரி உண்டா? ”னு செக் பண்ணுற மாஸ் மேனேஜர்!
உடம்புல இரத்தம் எல்லா உறுப்புகளுக்கும் “நான் வந்துட்டேன்!”னு ஜாலியா போகுது. ஆனா மூளைக்கு வர்றப்போ? “ஏய் நில்லு, உன்னை செக் பண்ணனும்!”னு ஒரு பயங்கர ஸ்டிரிக்டான செக்போஸ்ட் நிக்குது. மூளையோட இரத்த நாளங்களில் இருக்குற எண்டோதீலியல் செல்களால் உருவாக்கப்பட்டது தான் இந்த இரத்த-மூளை அரண். இந்த செல்கள் நம்ம சரும செல்கள் மாதிரி இல்ல. இறுக்கமான இணைப்புகள் (Tight Junctions)னு சொல்லப்படுற கிளாடின், ஆக்ளூடின் புரோட்டீன்களால பண்ணப்பட்ட, டைட்டான கதவு மாதிரி. ஒரு நானோமீட்டர் கேப் கூட இல்ல! இதனால 98% சின்ன மூலக்கூறுகளும், 100% பெரிய மூலக்கூறுகளும் “சாரி, நமக்கு அனுமதி இல்ல”னு திரும்புது. பாக்டீரியா, வைரஸ், நச்சு கெமிக்கல்ஸ் எல்லாம் இந்த செக்யூரிட்டியப் பார்த்து "அய்யோ இவனா ஆள விடு!”னு ஓடுது.
இந்த அரணோட அடுத்த ஸ்பெஷல் ட்ரிக்? P-கிளைகோபுரோட்டீன்னு ஒரு புரோட்டீன், இது ஒரு 'பவுன்சர்' மாதிரி. தேவையில்லாத பொருட்களையோ, மருந்துகளையோ எடுத்துக்காட்டு, ஃபெக்ஸோஃபெனாடின் மாதிரி ஒவ்வாமை மருந்துகளையோ, "மூளைக்கு நீ வேணாம், வெளியே போ!”னு தூக்கி எறியுது. இதனால மூளைக்கு மயக்கம் வராம இருக்கு.
இதே காரணத்தால மூளைக் கட்டிகளைக் கரைக்கிற மருந்துகளை உள்ள விடுறதும் செம சவாலா போகுது. இந்த அரண் ஒரு பக்கம் மூளையை காப்பாத்துது, மறுபக்கம் மருத்துவர்களுக்கு “நீ என்ன பண்ணுவ?”னு சிரிக்குது!
இந்த செக்யூரிட்டி டீம் தனியா வேலை பார்க்கல. ஆஸ்ட்ரோசைட்டுகள், மூளையோட அசிஸ்டண்ட் டீம் மாதிரி, இரத்த நாளங்களை சுத்தி இந்த பாதுகாப்பை இன்னும் டைட்டா ஆக்குது. பெரிசைட்டுகள் இரத்த நாளங்களுக்கு “எல்லாம் சரி”னு செக் பண்ணுது. இவை எல்லாம் ஒரு உயிரியல் மாஸ் க்ரூ, மூளையை ஒரு தனி VIP ZONE, நியூரோகிளியல் சூழல்னு சொல்லப்படுற ஒரு சூப்பர் சேஃப் ஸ்பேஸா மாத்துது. இங்க எந்த வெளி குப்பையும் “நோ வே”னு சொல்லி "வெளியில போ" ன்னு திருப்பி அனுப்புது.
ஆனா இந்த அரண் எப்பவும் டாப் ஃபார்ம்ல இருக்குமா? இல்ல! அழற்சி, மன அழுத்தம், அல்லது சில நோய்கள் எடுத்துக்காட்டு, அல்சைமர், மல்டிபிள் ஸ்கிளிரோசிஸ் இவை இந்த செக்யூரிட்டி சிஸ்டத்தை ஸ்லோ பண்ணி, மூளைய ஆபத்துல தள்ளிடும். இதனால ஆராய்ச்சியாளர்கள் இப்போ நானோ டெக் வச்சு மூளைக்கு உள்ளேயும் மருந்து வேலை செய்யுற மாதிரி மருந்துகளை டிசைன் பண்றாங்க.
இரத்த-மூளை அரண் நம்ம மூளையோட சூப்பர் செக்யூரிட்டி பாஸ்! ஒவ்வொரு நொடியும் உன் எண்ணங்கள், கனவுகளை காப்பாத்துற மாஸ் ஹீரோ! இந்த அரணைப் பத்தி படிக்கும்போது, நம்ம மூளைக்கு இருக்குற இந்த ப்ரோட்டோகால் செமயா ஃபீல் பண்ணுது இல்ல? இது உடலோட தலைவனுக்கு இருக்குற மரியாதை, ஒரு உயிரியல் மேஜிக் ஷோ!