

வேதம் என்றால் அறிவு அல்லது ஞானம். ஞானம் என்பதே மிகச் சிறப்பாக இருக்கும்.
உபநிஷத் என்றால் வேதாந்தம்.
வேதத்தின் இறுதி என்று பொருள்.
நீங்கள் இப்போது தான் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தவர் என்றால் நீங்கள் வேதம் மற்றும் வேதாந்தம் படிக்க அவசியம் இல்லை.
எதற்காக படிக்க வேண்டும்..?
உலகின் உண்மைகளை அறிந்து கொள்ளவே… ! உலக அறிஞர்கள் சாக்ரடீஸ், சாணக்கியன், ஆர்யபட்டா என்று பலர் அருமையான புத்தகங்கள் எழுதி உள்ளனர்.
இவை அனைத்தும் இப்போது படிக்க வேண்டிய அவசியம் இல்லை.
பின் எந்த புத்தகங்களை வாசிப்பது… ?
உங்களுக்கு பிடித்த பொருள் அதிகம் இருக்கும். சிலருக்கு சினிமா, சிலருக்கு விளையாட்டு, சிலருக்கு விஞ்ஞானம், சிலருக்கு தத்துவம். இப்படி சொல்லி கொண்டே போகலாம்.
நீங்கள் செய்ய வேண்டியது ஒன்று தான். உங்களுக்கு பிடித்த தலைப்பில் உள்ள புத்தகங்களை முதலில் வாசியுங்கள். உங்கள் நேரம் பயனுள்ளதாக அமையும்.
படிக்கும் போது உங்களுக்கு பிடித்த விஷயங்களை எழுதி வைத்து கொள்ளுங்கள். சந்தேகம் இருந்தால் அதையும் குறித்து வையுங்கள்.
படிப்பது சுமையாக இருக்க கூடாது. ஆர்வம் பொங்க வேண்டும். உங்களுக்கு இப்போது பல புத்தகங்களை படிக்க ஆர்வம் பிறக்கும். புத்தகத்திற்கு செலவு செய்யும் பணம் மூலதனமே… !
எந்த புத்தகமாக இருந்தாலும் ஆசிரியர் சொல்ல வருவதை கிரகித்து கொண்டு படியுங்கள்.
உங்களுக்கு ஆன்மீகம், கம்யூனிசம் பிடித்தால், முதலில் எளிமையான புத்தகங்களை தேர்வு செய்யுங்கள். நீங்கள் படித்ததை மற்றவருடன் பகிர்ந்து கொள்வது சிறப்பு.
தவறாமல் இதை செய்யுங்கள்.
நீங்கள் நீங்களாகவே சில கருத்துக்களை ஏற்று கொள்வீர்கள். அந்த மாதிரி உங்களுக்கு பிடித்த புத்தகங்களை வாங்கி வாசித்து பாருங்கள்.
வீட்டில் ஒரு சிறு நூலகம் இருப்பது மிகவும் சிறந்தது.
நமக்கு புத்தகம் ஒரு சிறந்த நண்பன் என்பதை உணருவீர்கள். இது தான் முக்கியம். இதற்கு பிறகு நீங்கள் எந்த புத்தகங்களையும் படிக்கலாம். மறக்காதீர்கள் குறிப்புகள் எடுக்க.
நமக்கு பிடித்த புத்தகங்களை மட்டும் அல்ல. நமது கருத்துக்கு நேர் எதிர்மறையான புத்தகங்களையும் வாசியுங்கள்.
அப்போது தான் இரண்டு முரண்பாட்டையும் அறிய முடியும்.
ஒரே கருத்து தான் உண்மையாக இருக்க முடியும்.
அதை கண்டு பிடியுங்கள்.
உங்கள் சிந்தனை சக்தி அதிகரித்து இருக்கும்.
எனவே இப்போது சொல்லுங்கள். நமக்கு சிறந்த நண்பன், வழிகாட்டியாக புத்தகங்கள் இருப்பதை உணர்வீர்கள்.
நீங்கள் படித்து தெரிந்து கொண்டது வாழ்கையில் உண்மையாக உள்ளதா என்று ஆராய்ச்சி செய்து பாருங்கள். விடை உங்களுக்கு தானாகவே தெரிய வரும்.
நேரு
காந்தி
அம்பேத்கர்
விவேகானந்தர்
காரல் மார்க்ஸ்
ஃபிரெட்ரிக் ஏங்கெல்ஸ்
ஆர்யபட்டா
சாணக்கியர்
எழுதிய புத்தகங்களை அவசியம் படியுங்கள். நமது அறிவு விசாலமாக மாறும். உங்களால் சரியான தத்துவம் மற்றும் சித்தாந்தம் தெரிய வரும்.
ஆன்மீகத்தில் விருப்பம் இருந்தால் பைபிள், குரான் படியுங்கள். பகவத் கீதையை தாய் மொழியில் அவசியம் படியுங்கள். அதில் இல்லாத விஷயமே இல்லை.
யார் சிறந்த நண்பன்… ?
நமக்கு எப்போதும் ஆதரவாக இருந்து… பாதை மாறும் போது எச்சரித்து… நமக்கு அன்புடன், நேயத்துடன் வழிகாட்டியாக இருப்பவன். இந்த வேலைகளை புத்தகங்கள் மிகச் சரியாக செய்யும்.
முடிக்கிறேன்.
சரி, லெனின் சொன்ன வாக்கியத்துடன் முடிக்க விரும்புகிறேன். ஒரு சிறந்த தலைவரால் தான் இந்த 3 விஷயங்களை சொல்ல முடியும். அவர் உலகை அறிந்துக் கொள்ள… 3 வார்த்தைகள் மட்டுமே போதுமானது. அவர் சொன்னது…
ஆம்.
படி… !
படி… !!
படி… !!!