அடிபட்ட பின் திடீர் கணித திறமை - மூளையின் மறுமலர்ச்சி ரகசியம்!

Brain power
Brain power
Published on
Kalki Strip
Kalki Strip

நம் மூளைக்கு அதிசயமான பல வினோத சக்திகள் (Brain power) இருக்கின்றது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? சிலருக்கு தலையில் காயம், பக்கவாதம் அல்லது மூளையில் ஏதேனும் நோய் ஏற்பட்ட பிறகு நம்ப முடியாத சிறப்புத் திறமை ஏற்படுவதுண்டு அல்லது ஒரு புலன் தூண்டப்படும்போது, தானாகவே மற்றொரு புலனும் தூண்டப்படுவதுண்டு. உதாரணமாக, எழுத்துக்களைப் பார்க்கும்போது வண்ணங்களைப் பார்ப்பது அல்லது இசையைக் கேட்கும்போது சுவையை உணர்வது போன்றவையாகும்.

Jason Padgett என்பவர் வாஷிங்டனை சேர்ந்த ஒரு பர்னிச்சர் சேல்ஸ்மேன். ஒருநாள் அவர் கரோக்கி பார் (Karaoke bar) இருக்கும் வழியாக நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று நான்கு, ஐந்து பேர் அவரை அடித்துவிட்டு சென்று விட்டார்கள். இதனால் அவருக்கு தலைக்கு பின்னாடி நன்றாக அடிப்பட்டு விடுகிறது. அவரும் மயக்கம் போட்டு விழுந்துவிடுகிறார்.

மருத்துவமனையில் அவருக்கு Minor head injury என்று சொல்லி காயத்திற்கு மருந்து போட்டு அன்று இரவே வீட்டிற்கும் அனுப்பி விடுகிறார்கள். ஆனால், வீட்டிற்கு வந்த பிறகு Jason Padgett இந்த உலகை பார்க்கும் பார்வையே மாறியிருக்கிறது. எங்கே பார்த்தாமல் அவருக்கு Geometric pattern ஆக தெரிய ஆரம்பித்திருக்கிறது. இந்த உலகத்தையே அவர் Maths ஆக பார்க்க தொடங்கியுள்ளார். இத்தனைக்கும் அவர் ஸ்கூலில் நன்றாக படிக்கும் மாணவனும் கிடையாது.

கம்யூனிட்டி காலேஜ் டிராப் அவுட், கணிதம் என்றால் பிடிக்காத நபராகவே இருந்திருக்கிறார். ஆனால், இவருக்கு தலையில் அடிப்பட்ட பிறகு அவர் மூளை மிகவும் Hyperactive ஆக மாறியுள்ளது. எங்கு பார்த்தாலும் கணிதமாகவே தெரிந்துள்ளது. அவர் பார்க்கக்கூடிய விஷயங்களை வரைய ஆரம்பித்துள்ளார். அதை ஒரு Mathematician பார்த்துவிட்டு, "இது மிகவும் கடினமான கணித சம்பந்தப்பட்ட விஷயங்கள். இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்?" என்று கேட்டிருக்கிறார்.

இதன் பிறகே Jason மருத்துவரிடம் சென்றிருக்கிறார். அவருக்கு Acquired Savant Syndrome உள்ளது என்று மருத்துவர்கள் கண்டுப்பிடித்துள்ளனர். தலையில் அடிப்பட்டதால் அவர் மூளையில் (Brain) இருக்கக்கூடிய ஒரு பவரை Unlock செய்துள்ளார். இது நம்முடைய மூளையில் நாம் உபயோகப்படுத்தாத பாகத்தை உபயோகப்படுத்த வைக்குமாம். உலகத்தில் இந்த சிண்ட்ரோம் 40 பேருக்கு மட்டுமேயிருக்கிறது.

இதையும் படியுங்கள்:
தேசிய கைத்தறி கண்காட்சி: 50% தள்ளுபடியில் கைத்தறி ஆடைகள்..!
Brain power

சிலர் Maths expert ஆகவும் இன்னும் சிலர் Arts and musicல் பெரிய ஆளாகவும் இருக்கிறார்கள். இதை அறிந்த உடன் Jason கணிதப் பாடத்தை நன்றாக படித்து தெரிந்துக் கொள்கிறார். தன்னுடைய வாழ்க்கையை பற்றி Struck by genius என்ற ஒரு புத்தகம் கூட எழுதியிருக்கிறார். இவருடைய கதையை கேட்கும் போது, 'நம்முடைய மூளையில் நமக்கே தெரியாமல் நிறைய சூப்பர் பவர்ஸ் ஒளிந்துக் கொண்டிருக்குமோ?' என்று தோன்றுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com