நம்பிக்கையும்... மன்னிப்பும்: ஒரு பள்ளிப் பருவ நினைவு!

school-friends-adventure
school-friends-adventure
Updated on
Kalki Strip
Kalki Strip

தைக்கலாம் கலக்கலாம் வாங்க… கல்கி ஆன்லைன் வழங்கும் எழுத்து மேடையில் ‘’நண்பர்களுடன் ஊர் சுற்ற பொய் சொல்லி மாட்டிய அனுபவம்’’! பற்றி கேட்டிருந்தோம். அதில் தேர்வான ஐந்து சுவாரஸ்யமான கட்டுரைகளில் நான்காவது கட்டுரை இதோ…

ஏழாம் வகுப்பு படித்த பொழுது எங்கள் பள்ளியில் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. அப்பொழுது போட்டி நடைபெற்ற மைதானத்திலிருந்து எங்கள் தோழியின் வீடு 3 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது.

அந்த வீடு புதிதாக கட்டி அப்பொழுதுதான் கிரகப்பிரவேசம் முடிந்து இருந்தது. அதைப் பார்த்தவர்கள் எல்லோரும் வியப்பாக அந்த வீட்டின் அழகை வர்ணித்ததைக் கேட்டதும் எங்களுக்கும் அந்த வீட்டை ஒருமுறை சென்று பார்த்து விட்டு வர வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. ஆதலால் நாங்கள் ஆறு மாணவிகள் ஒன்றாக சேர்ந்து விளையாட்டு விழா நடந்து கொண்டிருக்கும்பொழுது அவர்கள் வீட்டை சென்று பார்த்து விட்டு வருவதற்காக திட்டம் போட்டு ஓட்டமும் நடையுமாக அவர்கள் வீட்டிற்குச் சென்று சேர்ந்தோம்.

எங்களைப் பார்த்தவுடன் தோழியின் அம்மாவும் அக்காவும் ஒரு சொம்பு நிறைய மோரும், இளநீர், அவித்த வேர்க்கடலை, எள்ளுருண்டை என எல்லாவற்றையும் கொண்டு வந்து கொடுத்தார்கள். நாங்கள் சாப்பிட்டதும், தோழியின் தாத்தா வீட்டைச் சுற்றிக் காண்பித்தார். அந்தப் பெரிய வீட்டை கண்டு வியந்த நாங்கள் நாமும் நன்றாக படித்து சம்பாதித்து இதுபோல் வீடு கட்டவேண்டும் என்று பேசிக்கொண்டே ஓட்டமும் நடையுமா மைதானத்தை வந்து அடைந்தோம்.

சரியாக பரிசு கொடுக்கும் நேரத்தில் பரிசு பொருட்களை வாங்கிக் கொண்டு ஹாஸ்டலுக்குள் நுழைந்தோம். இரண்டு நாட்கள் கழித்து தோழின் அப்பா ஹாஸ்டலுக்கு வந்து வார்டனிடம் கூறி அந்த ஆறு மாணவிகளையும் சற்று அழையுங்கள். எங்கள் வீட்டில் வைத்திருந்த கடிகாரம் காணாமல் போய்விட்டது. அதை அவர்கள் பார்த்தார்களா? என்று கேட்க வேண்டும் என்று கூற, நாங்கள் ஆறு பேரும் வந்து அதைப் பார்க்கவே இல்லை என்று கூறினோம்.

பிறகு அவரு சென்றுவிட்டார். இதிலிருந்து பிரச்னை ஆரம்பமாகிவிட்டது. ஹாஸ்டல் வார்டனான என்னைக் கேட்காமல், லீடரிடம் அனுமதி பெறாமல் நீங்கள் எப்படி செல்லலாம்?. உங்கள் பெற்றோர் வந்து கேட்டால் இதற்கு நான் என்ன பதில் கூற முடியும்? என்று கேட்க எங்களுக்கு பதில் ஏதும் சொல்ல முடியாமல் தலை குனிந்து நின்றோம்.

அடுத்ததாக இதைக் கேள்விப்பட்டவுடன் எங்களின் பெற்றோர்கள் ஹாஸ்டலுக்கு வந்து, உங்களை யார் எங்களுடைய அனுமதியும், ஹாஸ்டல் மேடத்தின் அனுமதியும் இல்லாமல் அங்கே எல்லாம் போகச் சொன்னது. வேலை எல்லாம் நன்றாக முடிந்து இருக்கிறதா என்று பார்ப்பதற்காக சென்றீர்களா? என்று ஒரே சத்தம் போட எங்களுக்கு ஏன் போனோம் என்று ஆகிவிட்டது.

இதையும் படியுங்கள்:
"மூளை சூடாயிடுச்சுப்பா..." - பாபநாசத்தில் அம்பலமான 'கம்பைன்ட் ஸ்டடி' ரகசியம்!
school-friends-adventure

அதில் ஒரு தோழியின் அப்பா மட்டும் இதில் என்ன தவறு இருக்கிறது. தோழியின் வீட்டை போய் பார்த்துவிட்டு வர சென்றிருக்கிறார்கள். அது ஒரு தவறா? அதெல்லாம் ஒன்னும் தவறு இல்லை. இந்த பருவத்தில் இதுபோல் எல்லா குழந்தைகளும் ஆசைப்படுவது நியாயமானதுதான். அதற்காக நாம் திட்டவேண்டாம். இனிமேல் நீங்கள் இதுபோல் தவறை செய்யாதீர்கள். இனி யாரு வீட்டுக்காவது போவதாக இருந்தால் இப்பொழுதே பெட்டியை எடுத்துக்கொண்டு எங்களுடன் வீட்டுக்கு வந்து விடுங்கள்.

ஹாஸ்டலில் உள்ள மற்ற மாணவிகளை கெடுக்காதீர்கள் என்று கோபமாக பேச எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொண்டோம். பிறகு அந்த வீட்டில் தங்கியிருந்த ஒருவர், அதை நாங்கள் சென்ற நேரம் பார்த்து எடுத்து விட்டதாக தெரியவர, எங்களிடம் தோழியின் அப்பா வந்து மன்னிப்புக்கேட்டார். இப்படி நாங்கள் ஊர் சுற்றியது கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக ஆகிவிட்டது.

logo
Kalki Online
kalkionline.com