கிறிஸ்துமஸ் - சுவாரஸ்யமான தகவல்கள்!

கிறிஸ்துமஸ்
கிறிஸ்துமஸ்pixabay.com

கிரிகேரியன் காலண்டர்படி 1743-ம் ஆண்டிலிருந்து தான் டிசம்பர் 25  கிறிஸ்துமஸ் தினமாக அனுசரிக்கப் படுகிறது.அதற்கு முன் ஜனவரி 6 கிறிஸ்துமஸ் திளமாக இருந்தது. டிசம்பர் 25 யை கிறிஸ்துமஸ் தினமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தவர் முதல் போப்  ஜூலியஸ்.

லகில் இன்றும் சில நாடுகளில் ஜனவரி 6 ல்  கிறிஸ்துமஸ் கொண்டாடுகிறார்கள்.செர்பியா நாட்டில் கிறிஸ்துமஸ் ஜூலியன் காலண்டர் முறைப்படி ஜளவரி 7 ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் செர்பியா தலைநகர் பெல்கிரேட்டில் சாண்டாகிளாஸ் கிறிஸ்துமஸ் தாத்தா மற்றும் பாட்டி வேடமணிந்து நகர் முழுவதும் ஓடி வருவார்கள்.

சாண்டா கிளாஸ் தாத்தா
சாண்டா கிளாஸ் தாத்தாpixabay.com

கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது ஒருவருக்கெருவர் பரிசுப்பொருட்களை வழங்கிக்கொள்வது வழக்கம்.1800 -ம் ஆண்டிற்கு பிறகே சாண்டாகிளாஸ் மூலம் இப்பழக்கம் அறிமுகமாகி தொடர்கிறது. வீட்டுக்கு வரும் முதல் கிறிஸ்துமஸ் பரிசை யார் திறப்பார்கள் தெரியுமா? வீட்டில் உள்ள இளையவர்கள்தான் இது மரபு.

1836-ம் ஆண்டுவரை கிறிஸ்துமஸ் கொண்டாட அமெரிக்காவில் தடை இருந்தது. கிறிஸ்து அன்று பிறக்க வில்லை. அது ரோமானிய சூரியக்கடவுள் ஹோரஸ் பிறந்தநாள் அதனை வழிபடக்கூடாது என்ற தடை இருந்தது.

லகில் பிரிண்டிங் செப்யப்பட்ட கிறிஸ்துமஸ் கார்டுகள் முதன் முதலாக வெளியானது 1943-ம் ஆண்டுதான். அப்போது 1000 கார்டுகள்தான் பிரிண்டிங் செய்யப்பட்டன. அதில் தற்போது இருப்பது இரண்டு மட்டுமே. அதில் ஒன்று லண்டன் சார்லஸ் டிக்கன்ஸ் மியூசியத்தில் உள்ளது.

கிறிஸ்துமஸ் கார்டு அனுப்புகிறவர்கள், அவர்கள் தேர்வு செய்யும் படங்களையோ, டிசைன்களையோ வைத்து அவர்களின் குணாதிசயங்களைக் கண்டு கொள்ளலாம் என்கிறார்கள் இது பற்றி ஆய்வு மேற்கொண்டுவர்கள்.

கிறிஸ்துமஸ் விழா
கிறிஸ்துமஸ் விழாpixabay.com

கிறிஸ்துமஸ் அன்று வழக்கத்தை விட பனிப்பொழிவு அதிகம் இருந்தால் அதை வெள்ளை கிறிஸ்துமஸ் என்கிறார்கள். 2014 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் "வெள்ளை கிறிஸ்துமஸ்'கொண்டாடப்பட்டது. 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முழுவதும் மொத்தம் 6 நிமிடங்கள் மட்டுமே ரஷ்யாவின் பல பகுதிகளில் சூரியனை  பார்க்க முடிந்ததாம்.

த்தியோப்பியா நாட்டிற்கும் மற்ற நாடுகளுக்கும் ஏறக்குறைய 7முதல் 8 ஆண்டுகள் வித்தியாசம் இருக்கும் அதாவது பின் தங்கி இருக்கும். காரணம் அந்நாடு இன்னும் கிறிஸ்டியன் காலண்டர் முறையை கடைபிடிப்பதுதான். அங்கு வருடத்தில் இரண்டு முறை கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது. ஆனால் ஜனவரி 7 தான் அங்கு அதிகாரப்பூர்வ கிறிஸ்துமஸ் அன்றுதான் அங்கு தேசிய விடுமுறை நாள்.

தைவான் நாட்டில் கிறிஸ்துமஸ் அன்று தேசிய விடுமுறை தான். ஆனால் அதை அவர்கள் அந்நாட்டின் அரசியல் அமைப்பு தின விடுமுறை என்கிறார்கள்.

நார்வே நாட்டின் "பெர் ஜென்' நகரில் ஒவ்வொரு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கும் முன் ஒரு நகரத்தையே உருவாக்கி அங்குதான் கிறிஸ்துமஸ் கொண்டாடுகிறார்கள் .அந்நகரத்தின் பெயர்"ஜின்சர் பிரட்' நகரம்.

வ்வொரு கிறிஸ்துமஸ் அன்றும்  ஆக்ராவில் புறாப்பந்தயம் நடக்கும். இதில் ஆயிரக்கணக்கான பயிற்சி பெற்ற பந்தயப்புறாக்கள் கலந்து கொள்ளும்.

கிறிஸ்துமஸ் விழா
கிறிஸ்துமஸ் விழாpixabay.com

யேசு பிரான் பெளர்ணமி தினம் அவதரித்தார் என்பதால், பெளர்ணமி தினத்தில் வரும் கிறிஸ்துமஸ்யை விசேஷமாக கொண்டாடுவது வழக்கம். இயேசு பிறந்த பிறகு இதுவரைக்கும் 72 கிறிஸ்துமஸ்கள் பெளர்ணமி அன்று வந்ததுள்ளது. கடந்த நூற்றாண்டு 5 முறை கிறிஸ்துமஸ் பெளர்ணமியில்  வந்தது. அதனை அடுத்து 2015-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பெளர்ணமி தினத்தில் வந்தது. அடுத்து 2034-ம் ஆண்டில் தான் பெளர்ணமியில் கிறிஸ்துமஸ் வரும் என்கிறது நாசா.

கிறிஸ்துமஸ் விழாவில் மெழுகுவர்த்திகள் ஏற்றி வைப்பது ஒரு முக்கிய நிகழ்ச்சி .விருந்தினர்களை அழைக்கும் ஒரு சின்னமாக  மெழுகுவர்த்தி கருதப்படுகிறது. வீட்டின் ஜன்னலில் மெழுகுவர்த்தி இருப்பதை பார்த்ததும் அந்த வீட்டில் கிறிஸ்துமஸ் கோண்டாடுவதை அறிந்து கொள்வர்.

இதையும் படியுங்கள்:
சர்க்கரை நோய்க்கும் கழுத்து கறுப்புக்கும் என்ன தொடர்பு?
கிறிஸ்துமஸ்

ரம்ப காலங்களில் மெழுகுவர்த்தி தேன் மெழுகிலிருந்து தான் தயாரிக்கப்பட்டன. தற்போது வரும் மெழுகுவர்த்திகள் பெட்ரோல் பொருளான பாராபினிலிருந்து செய்யப்படுகிறது. இதை 19-ம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தயவர் பிரெஞ்சு வேதியியல் அறிஞர் மைக்கேல் யூஜின் செவரில்.

கிறிஸ்தவ தேவாலயங்களை சில இடங்களில் கதீட்ரல் என அழைப்பார்கள். லத்தீன் மொழியில் "பாதிரியாரின் இருக்கை'என்பதற்கு கதீட்ரல் என்று பொருள் அதிலிருந்து வந்ததுதான் சில இடங்களில் சர்ச்களை "கதீட்ரல்'என்று அழைக்கப்படும் பழக்கம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com