சர்க்கரை நோய்க்கும் கழுத்து கறுப்புக்கும் என்ன தொடர்பு?

நவம்பர் 14, உலக நீரிழிவு தினம்
diabetes and black neck?
diabetes and black neck?
Published on

சிலருக்கு பின்கழுத்து பட்டையாக அதிகமான கறுப்பு நிறத்தில் இருக்கும். ஆங்கிலத்தில் இதை, ‘அகந்தோசிஸ் நைக்ரிகன்ஸ்’  என்று சொல்வார்கள். இது ஒரு தீங்கு விளைவுக்கும் நோயோ, தொற்று நோயோ அல்ல. ஆனால், இது சர்க்கரை நோய் வருவதற்கான ஒரு அறிகுறி. கழுத்து மட்டுமின்றி அக்குள் மற்றும் தொடைகளின் உள்பகுதி கறுப்பாகக் காணப்படும்.

கழுத்து கறுமைக்கான காரணங்கள்: கழுத்து கறுப்பாவதற்குக்  காரணம், நமது கழுத்தில் உள்ள சருமம் மெல்லியதாகவும், முகத்தை விட குறைவான எண்ணெய்ச் சுரப்பிகளைக்  கொண்டதாகவும் இருக்கிறது. கொலஸ்ட்ரால் மருந்துகள், வாய்வழி கருத்தடை மருந்துகள் எடுத்துக்கொள்வது,  ஹார்மோன் சமநிலையில் இல்லாமல்போவது மற்றும் ஹைப்போ தைராய்டிசம் ஆகியவை கழுத்து கருமைக்கான வேறு சில காரணங்கள் என்றாலும், அதிக இன்சுலின் அல்லது இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதே கழுத்து கறுப்பின்  முதன்மைக் காரணியாகும்.

கழுத்தை சுரண்டினாலோ தேய்த்தாலோ கறுமை மறையாது.  மாறாக, சருமத்துக்கு பாதிப்பை உண்டுபண்ணும். அதனால் அந்த இடத்தில் சோப்பு போட்டு மென்மையாக கழுவ வேண்டும். இதை இயற்கையான முறையில் அகற்ற வேண்டும் என்றால் உடல்  எடையைக் குறைப்பது மிக மிக அவசியம். எடை கட்டுக்குள் இருந்தால்  கழுத்துக் கறுப்பு தன்னால் மறைந்து விடும்.

சர்க்கரை நோய் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?: மைதா, வெள்ளை சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட, சுத்திகரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள், அதிக அளவு அரிசி சாதம்,  டால்டா (வனஸ்பதி), அடுமனை உணவுகள், பாட்டில் குளிர்பானங்களை அறவே தவிர்க்க வேண்டும். ஒரு நாளில் ஒரு வேளையாவது அரிசி, கோதுமையைத் தவிர்த்து விட்டு காய்கறி, தானிய வகைகளை உண்ண வேண்டும். தினமும் மூன்று நேரமும் சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும்.

இதையும் படியுங்கள்:
குளிர் காலத்தில் அருந்தவேண்டிய ஆரோக்கிய பானங்கள்!
diabetes and black neck?

ஆடை, கொழுப்பு நீக்கப்பட்ட பாலை மட்டுமே உபயோகிக்க வேண்டும்.  வறுத்த, பொரித்த உணவுகள், பிரெஞ்சு ப்ரைஸ், சிப்ஸ், சிக்கன் போன்றவற்றை குழந்தைகளுக்கு கூட கொடுக்கக் கூடாது. நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகள் எடுத்துக்கொள்ள வேண்டும். உணவில்  நிறைய வைட்டமின்கள், மினரல்கள் இருக்க வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

டிவி, மொபைல் ஃபோனில் நிறைய நேரம் செலவழிப்பதை தவிர்த்து விட்டு, நாள் முழுதும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும். தினமும் 7 கிலோ மீட்டர் தொலைவு நடக்க வேண்டும். ஒரு நாளில் தேவையான அளவு கலோரிகளை எரிப்பதன் மூலமே உடலில் உள்ள இன்சுலின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. ஆரோக்கியமான எடையை பராமரிக்க தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும். சரியான தூங்கும் பழக்கங்களைப் பின்பற்ற வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com