

இந்தியாவில் தேர்தல் நேரங்களில் சொல்லப்படும் வாக்குறுதிகள் அரசியல் பிரசாரங்களில் ஒரு முக்கிய அம்சமாக உள்ளன. ஆனாலும் இந்த வாக்குறுதிகள் உண்மையில் நிறைவேற்றப்பட்டுள்ளதா? அல்லது நடக்குமா? என்பதை ஒரு தரப்பு குடிமக்கள் பெரும்பாலும் காலம்காலமாக அறியாமல் இருப்பார்கள். இதை எப்படி அனைவரும் புத்திசாலித்தனமாக மதிப்பிட செய்யலாம் என்பதைப் பார்ப்போம்.
இருக்கும் வழிகள்:
முதல் வழி: வேட்பாளர் அல்லது கட்சியின் கடந்த காலச் செயல்பாடுகளை ஆராய்வதாகும். ஒரு கட்சி இதற்கு முன்பு இதேபோன்ற சீர்திருத்தங்களை வாக்குறுதியளித்திருந்தால்; அவை செயல்பட்டிருக்கிறதா? என்பதை குடிமக்கள் சரிபார்க்கலாம்.
உதாரணமாக உள்கட்டமைப்பு, நலத்திட்டங்கள் அல்லது மானியங்கள் போன்ற முன்பு கூறப்பட்ட வாக்குறுதிகளை மக்களால் சரிபார்க்க முடியும். தேவைப்பட்டால் அதிகாரப்பூர்வ அரசாங்க அறிக்கைகள் (government reports) மற்றும் சுயாதீன தணிக்கைகள் (independent audits) மூலம் சரிபார்க்க முடியும். இப்படிக் கடந்த கால வாக்குறுதிகளுக்கும், அதன் உண்மையான செயல்பாட்டிற்கும் இடையிலான இந்த ஒப்பீடு; அந்தந்த ஊரின் கட்சி வேட்பாளர்களின் நம்பகத்தன்மையை மதிப்பிட உதவுகிறது.
மற்றொரு அணுகுமுறை: இனிமேல் சொல்லப்படும் வாக்குறுதிகளின் சாத்தியக்கூறுகளை மதிப்பிடுவதாகும் (feasibility of promises). இலவச மின்சாரம் அல்லது வேலைவாய்ப்பு உத்தரவாதங்கள் போன்ற பெரிய அளவிலான வாக்குறுதிகளுக்குக் கணிசமான நிதி ஆதாரங்கள் தேவைப்படுகின்றன. அத்தகைய வாக்குறுதிகள் யதார்த்தமானவையா என்பதைப் பார்க்க குடிமக்கள் வரவு செலவுத் திட்ட ஆவணங்கள் (budget documents), பொருளாதார ஆய்வுகள் (economic surveys) மற்றும் நிபுணர் பகுப்பாய்வுகளைப் (expert analyses) பார்க்கலாம்.
இறுதியில்: ஒரு வாக்குறுதி பொருளாதார ரீதியாக நிலை தன்மையற்றதாகத் (unsustainable) தோன்றினால்; அது நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்பு குறைவு.
குடிமைச் சமூக அமைப்புகள் (Civil society organizations), ஊடக உண்மைச் சரிபார்ப்பாளர்கள் (media fact-checkers) மற்றும் தேர்தல் கண்காணிப்புக் குழுக்களும் வாக்குறுதிகளைக் கண்காணிப்பதில் ஒரு பங்கு வகிக்கின்றன. குடிமக்களும் அந்தந்தக் கட்சி வேட்பாளர் அல்லது கட்சிகளால் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வத் தேர்தல் அறிக்கைகளைத் தேவைப்பட்டால் கோப்புகளாக (PDF or physical file) ஆவணப்படுத்திக் கொள்ளலாம். இதனால் தேர்தலுக்குப்பிறகு அதன் முன்னேற்றத்தைக் கண்காணிக்க மக்களால் மீண்டும் பார்க்க முடியும்.
வாக்குறுதிகளை ஆவணப்படுத்துவதன் (documenting) மூலமும், தகவல்களைப் பகிர்ந்துகொள்வதன் (share) மூலமும். அந்தந்த ஊர்களின் பொதுமன்றங்கள் (public forums), சமூக ஊடகத் தொடர்புகள் மற்றும் உள்ளூர் நிர்வாக அமைப்புகள் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியின் (கடந்த கால அல்லது நிகழ்கால) செயல்பாடுகளைக் குடிமக்கள் தெரிந்துகொள்ளலாம்;
குடிமக்களிடம் இருக்கும் சக்தி வாய்ந்த நினைவு மற்றும் விழிப்புணர்வால் பிரதிநிதியின் செயல்பாடுகள் நிறைவேற்றப்படாமல் இருந்தால் எதிர்ப்புக் குரலையும் எழுப்பலாம்.
எனவே, தகவலறிந்த ஆய்வு (informed scrutiny) மற்றும் மக்களிடம் வெளிப்படும் ஜனநாயக அழுத்தம் (democratic pressure) ஆகியவை நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளுக்கு எதிரான வலிமையான பாதுகாப்புகளாகும்.