பிரெஞ்சு நாட்டிற்கும் இந்த 5 விஷயங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்பது தெரியுமா…?

பிரெஞ்சு ஃப்ரைஸ்
பிரெஞ்சு ஃப்ரைஸ்pixabay.com

லகில் அதிகளவு மக்களால் விரும்பி உண்ணப்படும் நொறுக்குத் தீனிகளில் எப்போதும் முக்கியமான இடத்தில் இருப்பது பிரெஞ்சு ஃப்ரைஸ். குறிப்பாக குழந்தைகளுக்கு இது மிகவும் பிடித்த ஒரு உணவாக இருக்கிறது.

1. பிரெஞ்சு டோஸ்ட்

பிரெஞ்சு டோஸ்ட்
பிரெஞ்சு டோஸ்ட்pixabay.com

டுப்பை தோசைக் கல்லில் வைத்து சூடானதும் பிரட் துண்டுகள் முட்டை கலவையில் நன்கு பிரட்டி தோசை கல்லில் போட்டு இருபுறமும் நன்கு வேகவைத்து எடுத்தால் .அது தான் பிரெஞ்சு டோஸ்ட் எளிய முறையில் செய்யும் சுவையான உணவு பிரெஞ்சுக்காரர்களுக்கும் பிரஞ்சு டோஸ்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

பால் மற்றும் முட்டையுடன் ரொட்டியை வறுக்கும் வழக்கம் பழங்காலத்திலிருந்தே உள்ளது. ரோமன் சமையல் குறிப்புகளின் தொகுப்பான அபிசியஸில் இது முதலில் குறிப்பிடப்பட்டுள்ளது .பிரெஞ்சு டோஸ்ட் பண்டைய ரோமில் தோன்றியதாக ஒப்புக் கொள்கிறார்கள். கிமு ஐந்தாம் நூற்றாண்டில், அபிசியஸ்  செய்முறையுடன் கூடிய ஒரு சமையல் புத்தகத்தை எழுதினார்.அதில் இது பற்றிய குறிப்புகள் உள்ளன. ரோம் சக்கரவர்த்திகள் விரும்பி சாப்பிட்ட உணவு என்று டோஸ்ட்யை குறிப்பிட்டு உள்ளார்.

ரொட்டி துண்டுகளை வறுக்கும் முன் அவற்றை பாலில் அல்லது முட்டைகளில் பிரட்டி எடுப்பது ரோமானியர் களின் வழக்கம். இதை சிறிதளவு மாற்றம் செய்த ஜோசப் பிரெஞ்சு எனும் சமையல் கலைஞர் 1724 ம் ஆண்டில் பிரெஞ்சு நாட்டில் அறிமுகப்படுத்திய பெயர் தான் "பிரெஞ்சு டோஸ்ட்" என்பது.

2. பிரெஞ்சு பிரஸ்

பிரெஞ்சு பிரஸ்
பிரெஞ்சு பிரஸ்pixabay.com

பிரெஞ்ச் பிரஸ் என்பது காபி போடுவதற்கு உலோக கண்ணி வடிகட்டியுடன் கூடிய காய்ச்சும் சாதனமாகும். இதற்கும் பிரெஞ்சு நாட்டிற்கும் சம்பந்தமில்லை. இத்தாலிய  வடிவமைப்பாளர்களான   கியுலியோ மொனெட்டா மற்றும் அட்டிலியோ கலிமானி ஆகியோரால் ஒரு காபி காய்ச்சும் மெஷின்  உருவாக்கப்பட்டது,  மேலும் 1929 இல் காப்புரிமை பெறப்பட்டது அப்போது அவர்கள் தங்களின் காபி மெஷினுக்கு  வைத்த பெயர் தான் "பிரெஞ்சு பிரஸ்".

3. பிரெஞ்சு முத்தம்

பிரெஞ்சு முத்தம்
பிரெஞ்சு முத்தம்pixabay.com

பிரெஞ்சு முத்தம் என்பது இணையின் உதட்டோடு உதடு பதித்து, முத்தமிடுவதாகும். ஆனால் இதற்கு "பிரெஞ்சு கிஸ் "என்று பெயர் வைத்தவர்கள் பிரெஞ்சு மக்கள் அல்ல. பிரெஞ்சு முத்தம்" -ஒரு காலத்தில் "புளோரண்டைன் முத்தம்" என்றும் அழைக்கப்பட்டது - முதலாம் உலகப் போரின் போது பிரெஞ்சு பகுதியில் இருந்த பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க வீரர்கள் அப்பகுதியில் பொது இடங்களில் காதலர்கள் வித்தியாசமான முறையில் முத்தம் கொடுத்துக் கொள்வதைக் கண்டார்கள். முதலாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவிலிருந்து திரும்பிய வீரர்களால் ஆங்கிலம் பேசும் பகுதிகளில் அவர் கண்ட முத்தத்தை அறிமுகம் செய்து அதற்கு அவர்கள் வைத்த பெயர் தான் பிரெஞ்சு கிஸ்.

இதையும் படியுங்கள்:
புரதங்களை சாப்பிடுவதன் ஆரோக்கிய நன்மைகள்!
பிரெஞ்சு ஃப்ரைஸ்

4. பிரெஞ்ச் மெனிக்யூர்

பிரெஞ்ச் மெனிக்யூர்
பிரெஞ்ச் மெனிக்யூர்pixabay.com

பிரெஞ்ச் மெனிக்யூர் என்பது நகங்களில் வெள்ளை நிறத்தை  முனைகளில் சதுர வடிவில் பூசி மற்ற பகுதிகளை இளம் சிகப்பு நிறத்தில் கண்ணாடி மாதிரி ட்ராண்ஸ்பரண்டாகவும் அழகுபடுத்தி காட்டும் முறையாகும். பல ஆண்டுகளாக  இருக்கும் ஒரு பாரம்பரிய நெயில் ஆர்ட் பாணி பிரெஞ்சு  மெனிக்யூர் ஆகும்.     உண்மையில் பிரெஞ்சு நாட்டிற்கும் இதற்கும்  சம்பந்தமில்லை இந்த கலையை முதன்முதலாக  ஜெஃப் பிங்க்  எனும் அமெரிக்க மேக் அப் கலைஞர் அறிமுகப்படுத்தினார். இவரின் பிரெஞ்சு வாடிக்கையாளர்கள் இந்த கலையை அதிகம் விரும்பியதால் அதற்கு "பிரெஞ்சு மெனிக்யூர்" என்று பெயரிட்டார்.

5. பிரெஞ்சு ஃப்ரைஸ்

பிரெஞ்சு ஃப்ரைஸ்
பிரெஞ்சு ஃப்ரைஸ்pixabay.com

பெயரில் பிரெஞ்சு ப்ரைஸ் என்று இருந்தாலும் உண்மையில் இது பிரெஞ்சு நாட்டில் கண்டறியப் பட்டதல்ல. உண்மையில் வரலாற்று ஆசிரியர்களின் ஆய்வு படி, பெல்ஜியத்தில்தான் பிரெஞ்சு ஃப்ரைஸ் முதன் முதலாக தயாரிக்கப்பட்டது. அவர்களின் கூற்றுப்படி, 1600 களின் பிற்பகுதியில் பெல்ஜியத்தில் உருளைக்கிழங்கு முதன் முதலாக வறுக்கப்பட்டது. பெல்ஜிய கிராமவாசிகள் தங்கள் மீனை மிகவும் மெல்லியதாக நறுக்கி, வறுத்து, சிற்றுண்டியாக சாப்பிடுவார்கள். ஆனால் குளிர்கால மாதங்களில் ஆற்றில் உறைபனி ஏற்படும் போது, கிராம மக்கள் மீன்பிடிக்க சிரமப்பட்டார்கள்.

மீனுக்கு மாற்றாக உருளைக்கிழங்கில் பொரியல்களை உருவாக்க வழி வகுத்தது. மியூஸ் நதிக்கு அருகில் உள்ள கிராமவாசிகள் உருளைக்கிழங்கின் பக்கம் திரும்பி, அவர்கள் மீன்களை வறுத்ததைப் போலவே அதை வெட்டி வறுத்தனர், இப்படித்தான் முதன் முதலாக பிரஞ்சு ஃப்ரைஸ் உருவானது.  பின்னர் முதல் உலகப் போரின் போது அமெரிக்க வீரர்கள் இந்த வறுத்த சுவையான உணவை உண்டு அதன் சுவையில் மெய்மறந்தனர். தெற்கு பெல்ஜியத்தின் மேலாதிக்க மொழி பிரெஞ்சு என்பதால், அவர்கள் அவற்றை "பிரெஞ்சு" ப்ரைஸ் என்று அழைத்தனர் பிறகு அந்த பெயர் உலகெங்கும் நிலைத்துவிட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com