புரதங்களை சாப்பிடுவதன் ஆரோக்கிய நன்மைகள்!

Health benefits of eating proteins!
Health benefits of eating proteins!https://www.herzindagi.com
Published on

மது உணவில் கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள் மற்றும் புரதங்கள் என மூன்று முக்கிய மைக்ரோ நியூட்ரியண்ட்கள் உள்ளன. நம் உடலுக்கு கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புகள் தேவை என்றாலும் புரதங்கள் முக்கியமானவை. அசைவம் மற்றும் சைவ உணவுகளில் புரதம் உள்ளன. இது உடலின்  வளர்ச்சி மற்றும் பராமரிப்பிற்கு உதவுகிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

புரதங்களை சாப்பிடுவதன் முக்கிய ஆரோக்கிய நன்மைகள்:

1. தசை வலிமையை அதிகரிக்கிறது: புரதங்கள் தசை வளர்ச்சிக்கும் உடலின் பராமரிப்பிற்கும் உதவுகின்றன. தசைகள் வலுவாக ஆரோக்கியமாக இருக்க உதவும். விளையாட்டு வீரர்கள், சிறுவர் சிறுமியர் மற்றும்  பெரியவர்களுக்கும் தசைகள் உறுதியாக இருக்க புரதச்சத்து உதவுகிறது. ஒருவர் எடை இழக்கும்போது தசையின் தன்மையை பாதுகாக்கவும் இது உதவுகிறது.

2. நீண்ட நேரம் பசியின்றி வைத்திருக்கும்: கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் கொழுப்புச் சத்து குறைவாக உள்ள புரோட்டின் பசியை நன்றாக அடக்குகிறது. நீண்ட நேரம் பசிக்காமல் இருக்கிறது உடல் எடை கூடாமல் வைத்திருக்கும், கலோரியும் அதிகரிக்காமல் இருக்கும்.  இது உடலில் உள்ள பசி ஹார்மோன்களை ஒழுங்குபடுத்தவும் உதவுகிறது. இதனால் தேவையற்ற நேரத்தில் உண்பதைத் தடுக்கிறது.

3. சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்: அதிக கார்போஹைட்ரேட் உணவுகள் இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்து விடும். ஆனால், புரதச்சத்துள்ள உணவுகள் சர்க்கரை அளவை உயர்த்துவது இல்லை.

4. மெட்டபாலிசத்தை ஊக்குவிக்கிறது: உடலின் மெட்டபாலிசத்தை ஊக்குவிக்கிறது. இதனால் உடல் உறுப்புகள் நன்றாக வேலை செய்யவும், செரிமான பிரச்னை இல்லாமலும் வைக்கிறது.

3. எடை இழப்புக்கு உதவுகிறது: செரிமானம் என்பது நமது உடலுக்கு மிகவும் கடினமான மற்றும் ஆற்றலைச் செலவழிக்கும் பணிகளில் ஒன்று. புரதங்கள் உடலில் கொழுப்பு எரியும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது. சரியான வொர்க்அவுட்டுடன் புரோட்டீன்களை உட்கொள்வது எடை இலக்கை அடைய பெரிதும் உதவும்.

4. எலும்புகளுக்கு நல்லது: எலும்பு ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. புரதச் சத்துள்ள தின்பண்டங்கள் எலும்புகளுக்கு தேவையான கால்சியம் மெக்னீசியம் பாஸ்பரஸ் போன்றவற்றை  உள்ளடக்கி இருப்பதால் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கின்றன. எலும்பு முறிவுகளிலிருந்து பாதுகாக்கிறது. புரதங்கள் தசை வளர்ச்சிக்கு உதவுவதோடு, எலும்புகள் தேய்மானம் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

5. குறைந்த இரத்த அழுத்தம்: உயர் புரத உணவு ஆரோக்கியமான இரத்த அழுத்த அளவை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. உணவில் புரோட்டீன்களை சேர்த்துக்கொள்வது உங்களை முழுதாக வைத்திருக்கும் மற்றும் ஆரோக்கியமற்ற தின்பண்டங்களை உட்கொள்வதைத் தடுக்கிறது. புரதங்கள் நம் உடலை நல்ல கொழுப்புகளால் நிரப்புகின்றன. உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது, எனவே, பக்கவாதம் மற்றும் மாரடைப்புகளைத் தடுக்கிறது.

இதையும் படியுங்கள்:
வைட்டமின் டி உடலுக்கு ஏன் அவசியமாகிறது?
Health benefits of eating proteins!

6. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: புரோட்டீன்கள் நம் உடல் நோய்வாய்ப்பட்டால் விரைவில் குணப்படுத்த உதவுகின்றன, மேலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படவும்,  நோய்த்தொற்றுகளுக்கு எதிராக போராடும் பல்வேறு ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்யவும் உதவுகின்றன.

காலையில் 11 மணிக்கு அல்லது மாலை நேரங்களிலோ லேசாக பசிக்கும். அப்போது வறுத்துப் பொரித்த உணவுகளை உண்டால் நாவுக்கு வேண்டுமானால் சுவையாக இருக்கும். அதனால் உடல் பருமன் முதற்கொண்டு சர்க்கரை இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் என பலவிதமான பிரச்னைகளை கொண்டு வந்து விடும். எனவே அதிக புரோட்டின் உள்ள தின்பண்டங்களை உண்பது ஆரோக்கியமானது. வேக வைத்த சுண்டல், பாசிபயிறு, உலர் பழங்கள், ஆளி விதைகள், பூசணி விதைகள், சியா விதைகள் போன்றவற்றில் புரதம் நிறைந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com