முதுமை நம்முடைய உடலில் தோன்ற ஆரம்பிப்பது எப்போது தெரியுமா?

முதுமை நம்முடைய உடலில் தோன்ற ஆரம்பிப்பது எப்போது  தெரியுமா?

ம் தினசரி வாழ்வில்  வயதிற்கும், தோற்றத்திற்கும் சம்பந்தமில்லாத நிலையில் நிறைய மனிதர்களை பார்க்கிறோம். இளம் வயதிலேயே தலைமுடி நரைப்பது, தோல் சுருக்கம் ஏற்படுவது, முதுமை தோற்றம் எட்டிப்பார்ப்பது என இந்த காலத்து இளைஞர்கள், பல பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். இவை அனைத்திற்கும், அவர்களது தவறான உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை காரனம் என்கிறார்கள்.ஆனால் இயற்கையாக நமது உடலில் முதுமை எட்டிப்பார்ப்பது எப்போது தெரியுமா?

முதுமைக்கான அறிகுறிகள் தற்போது 27 வயது முதலே தொடங்குவதாக வெர்ஜினியா பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். 18 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட 2000 ஆண், பெண்களை கொண்டு 7 ஆண்டுகளாக நடந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது இந்த உண்மை. 27 வயதில் உடலில் பாதிக்கப்படும் செல்களின் எண்ணிக்கை இறக்கும் செல்களை விட குறைவாக இருப்பதே இதற்கு காரணம் என்கிறார்கள்.

நமது உடற் பாகங்கள் ஒவ்வொன்றும் எப்போது முதுமை அடையத் துவங்குகிறது. என்பதை ஆய்வுகளில் கண்டறிந்துள்ளனர். அவைகளில் சில...

தயம் மற்றும் இரத்தக்குழாய்கள் 40 வயது முதலே முப்படைய துவங்குகிறது. மூளை 20 வயதிலேயே முப்படைய துவங்குகிறது. நுரையீரல்-20 வயதிலேயே முப்படைய துவங்குகிறது.

பொதுவாக நமது சிறுநீரகங்கள் 50 வயதை யொட்டி முப்படைய துவங்குகிறது, நமது கல்லீரல் 70 வயதில் முப்படைய துவங்குகிறது.

ஆண்களுக்கு ஆண்மைத் தன்மையை வழங்கும் வால்நட் பருப்பை போன்ற வடிவிலுள்ள சுரப்பியான  புரோஸ்டேட் சுரப்பி 50 வயதில் முப்படைய துவங்குகிறது.

நமது உடலிலுள்ள எலும்புகள் 35 வயதிலிருந்தே தங்களது பலத்தை இழக்கத் தொடங்குகிறது. நமது சதைகளும், எலும்பு இணைப்புகளும் 30 வயதில் மூப்படைய தொடங்குகிறது.

நமது ஆரோக்கியமான கால்கள் தங்களது பலத்தை இழக்கத் துவங்குவது நமது 40 தாவது வயதிலிருந்து.

மனிதனின் ஆரோக்கியமான செரிமான சக்தி அதன் பலத்தை இழக்கத் துவங்குவது நமது 50 வயதில்.

தோல் தன்னுடைய 20 வயதின் தொடக்கத்திலேயே முப்படைய துவங்குகிறது. ஒரு மனிதனுக்கு முதுமை எப்போது ஆரம்பிக்கிறது? முதுமை 27 வயதில் தொடங்குவதாக கூறுகிறார்கள் வல்லுநர்கள்.

உடல் பாகங்களிலுள்ள் செல்களின் வேகமான அழிவு அதனால் உடலினுள் ஏற்படும் வீக்கம் மற்றும் வலிகளும் தான் வயோதிகத்தின் அறிகுறிகள் ,இதனை குடலில் தோன்றும் ஆரோக்கியமான நுண்ணுயிரிகளால் தடுக்க முடியும். அதற்கு பழங்களும், காய்கறிகளும் நிறைந்த உணவுகளால் மட்டுமே முடியும். அதனால் முதுமை பற்றி கவலைப்படாமல் ஆரோக்கியமாக வாழலாம் என்கிறார்கள் அயர்லாந்து கார்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

இளம் வயதிலேயே முதுமையான தோற்றத்தை உண்டாக்கும் சில உணவுகளைப் பற்றி தெரிந்து கொண்டுஅவற்றை  தவிர்ப்பதன் மூலம், செயற்கையாக உருவாகும் முதுமை தோற்றத்தை தவிர்க்கலாம்.

குளிர்பானங்களை தொடர்ந்து குடித்தால் உடலில் உள்ள நீர் வற்றி, சருமம் பாதிக்கப்படும். இதனால் விரைவில் வயதான தோற்றம் ஏற்படும்.  பாஸ்ட் புட், பீட்சா, பர்க்கர் போன்ற துரித உணவுகளை சாப்பிட்டால், கொழுப்பு அதிகமாகி, ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். இதனாலும் வயதான தோற்றம், வெகுவிரைவிலேயே ஏற்படும்.

இறைச்சி உணவுகளை அதிக அளவில் உட்கொள்வதால் உடலில் நச்சுகள் அதிகரித்து  கொழுப்பு அதிகரிக்கிறது. இதனால் வைட்டமின் டி சத்து குறைந்து முதுமை நிலையை, இளமையிலேயே அடைய காரணமாகிறது. உப்பு அதிகமாக சேர்த்துக்கொண்டாலும் அது ஆபத்து தான். உப்பு அதிக ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். இதன்காரணமாக, தோலின் இறுக்கமான தன்மை சுருங்கி வயதானவர்கள் போன்ற தோற்றம் விரைவில் ஏற்படும்.

மது அருந்துபவர்களுக்கு அதிகமாக தண்ணீர் இழப்பு ஏற்படும். இதனால், விரைவிலேயே தோல் பாதிக்கப்பட்டு, வயதானவர்கள் போன்ற தோற்றத்தை பெறுவார்கள். அதனையும் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com