தேர்தல் - சில சுவாரஸ்யமான தகவல்கள்… உண்மைகள்!

தேர்தல்...
தேர்தல்...

VOTE -என்ற ஆங்கில சொல்லின் விரிவாக்கம் என்ன தெரியுமா? "Voice of tax payers every where" என்பதுதான். அதாவது அரசாங்க வரி செலுத்துவோர்க்கு மட்டுமே வாக்குரிமை. அதை மாற்றி "வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை" என போராடி வாக்குரிமை வாங்கி தந்தவர் யார் தெரியுமா? இந்திய அரசியலமைப்பு மூலம் இந்தியாவை கட்டமைத்த பாபா சாஹேப் டாக்டர் அம்பேத்கர். இதில் வேடிக்கையான விஷயம் இந்தியாவில் நடந்த முதல் பொதுத்தேர்தலில் அவர்  எம். பி. பதவிக்கு போட்டியிட்டு தோற்றுப்போனதுதான்.

இந்தியாவில் தங்குவதற்கு வீடு இல்லாதவர்கள் கூட வாக்களிக்கலாம். இரவில் பிளாட்பாரத்தில் படுப்பவர்கள் கூட வாக்களிக்கலாம். ஆனால் அந்த வாக்காளர் இரவில் எந்த இடத்தில் தூங்குகிறார் என்பதை தெளிவாக குறிப்பிட  வேண்டும்.

வாக்குரிமை...
வாக்குரிமை...

வாக்காளர் குறிப்பிடும் விலாசத்தில் அவர் இருக்கிறாரா என்பதை அந்த பகுதி தேர்தல் பூத் அலுவலகர் ஒருவர் இரவு  இரண்டு முறை வந்து சோதனையிட்டு உறுதியாக இருந்தால் அவர் தாராளமாக வாக்களிக்கலாம்.

நீங்கள் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு சென்று அங்கு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் விடுபட்டு இருப்பது தெரியவந்தால், உங்கள் ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை இரண்டில் ஏதேனும் ஒன்றைக் காட்டி வாக்குரிமை சட்டப்பிரிவு 49A யின் கீழ் "சேலன்ஞ்  ஓட்டு" கேட்டு உங்கள் வாக்கினை பதிவு செய்யலாம். உங்கள் வாக்கினை உங்களுக்கு முன்பாக வேறொருவர் பதிவு செய்திருந்தால் "டெண்டர் ஓட்டு" கேட்டு உங்கள் வாக்கினை பதிவு செய்யலாம். ஒரு வாக்குச்சாவடியில் 14 சதவீதத்திற்கும் மேல் டெண்டர் ஓட்டு பதிவாகியிருந்தால். அங்கு மறு வாக்குப்பதிவு நடத்தப்படும்.

1951 ல் இந்தியாவில் முதல் முறையாக லோக்சபா தேர்தல் நடந்தது. எத்தனை நாட்கள் தெரியுமா? 119 நாட்கள் இந்தியாவில் நீண்ட நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற தேர்தல் இதுதான். இந்திய தேர்தல்களில் சுயோச்சைகளாக போட்டியிடுவது எப்போதும் கஷ்டமான ஒன்றுதான். ஆனால் 1957 ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் 48 பேர் சுயோச்சைகளாக போட்டியிட்டனர், அதில் 42 பேர் வெற்றி பெற்றார்கள். இந்த சாதனை இது வரை முறியடிக்கப்படவில்லை. 1996 ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் 10,635 பேர் சுயோச்சைகளாக போட்டியிட்டனர் அதில் பெரும்பாலானோர் டெபாசிட் இழந்தனர்.

அடையாள மை...
அடையாள மை...

தேர்தலில் ஓட்டு போட்டு விட்டு வந்ததின் அடையாளமாக கை விரலில் வைக்கப்படும் "அழியா மை" முறை 1962 ம் ஆண்டு இந்தியாவின் மூன்றாவது லோக்சபா தேர்தலின்போது அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு அடையாள மை பாட்டிலில் இருந்து எடுக்கப்படும் மையை 350 பேருக்கு வைக்கலாம். இந்த அடையாள மை வாக்களிக்கும் வாக்காளரின் இடது ஆள்காட்டி விரலில் வைக்கப்படுகிறது ஒருவருக்கு இடது கை ஆள்காட்டி விரல் இல்லையென்றால் என்ன செய்வது? அந்த மாதிரி நபரின் இடது கையில் ஏதாவது ஒரு விரலில் மை வைக்கப்பட்டு வருகிறது. இடது கையில் எந்த விரல்களும் இல்லை என்றால் வலது கை ஆள்காட்டி விரலில் மை வைக்கப்படும். இரு கைகளும் இல்லை என்றால் காலில் மை வைக்கப்படும்.

வாக்கு பதிவின்போது எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை  என்பதை தெரிவிக்க பயன்படுத்தும் முறை தான்" நோட்டா (NOTA) ". இதுவரை நடைபெற்ற தேர்தலில் அதிகப்படியான "நோட்டா" பதிவானது 2014 ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில்தான். புதுச்சேரி எம். பி தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் 3.01 சதவீதம் "நோட்டாவுக்கு" விழுந்தது. குறைவான "நோட்டா" பதிவானது அதே லோக்சபா தேர்தலில்தான் நாகாலாந்தில் பதிவானது தான் மொத்தம் 0.26 சதவீதம்.

2009 லோக்சபா தேர்தலில் நாகாலாந்தில் 89.99 சதவீத வாக்குகள் பதிவானது. இதுதான் லோக்சபா தேர்தல் வரலாற்றில் பதிவான அதிக பட்ச வாக்குப்பதிவு.

மாநிலங்களில் உள்ள லோக்சபா சீட்களின் எண்ணிக்கை அந்தந்த மாநிலங்களின் மக்கள் தொகையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. இது 1971 ம் ஆண்டு எடுக்கப்பட்ட சென்செக்ஸ்ஐ  அடிப்படையாகக் கொண்டது. அடுத்து 2026 ல் எடுக்கப்படும் சென்செக்ஸ் கணக்கெடுப்பின் பிறகு இது மாறும்.

இதையும் படியுங்கள்:
இந்தியாவில் மறைந்து தோன்றும் கடற்கரை எங்குள்ளது தெரியுமா?
தேர்தல்...

2019 ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலின்போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஆனந்த நாக் தொகுதியில் 3 கட்டங்களாக தேர்தல் நடந்தது. ஒரே ஒரு தொகுதிக்காக 3 கட்டங்களாக தேர்தல் நடந்தது அதுவே முதல் முறை. 2019 ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக 38 நாட்கள் நடத்தப்பட்டது. ஆனால் 1980 ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தல் 4 நாட்களில் நடந்து முடிந்தது.

இந்தியாவிலேயே அதிக முறை தேர்தலில் நின்று தோல்வியை கண்டவர் உத்திரப்பிரதேசத்தில் பாரோலியில் வாழ்ந்த ஜவுளி வியாபாரி காகா ஜேகேந்தர் சிங். இவர் 30 வருடங்களில் 300 முறை தேர்தலில் நின்று தோற்று இருக்கிறார். இவரை அடுத்து 200 முறைக்கும் மேலாக  தேர்தலில் நின்று தோற்றவர் பீகார் மாநிலம் பாகல்பூர் நாகர் மால் பஜோரின் 2019 ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் இவர் டெல்லியில் போட்டியிட்டபோது இவரின் வயது 94.

இந்திய தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக 217 திபெத்தியர்கள் இந்திய லோக்சபா தேர்தலில் வாக்களித்துள்ளனர் தெரியுமா?. 2014 ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் இமாச்சலப் பிரதேசம் காக்ரா பகுதியில் வாழ்ந்துவந்த, இந்தியாவில் பிறந்த 217 திபெத்திய இளைஞர்களை வாக்களிக்க தேர்தல் ஆணையம் அனுமதியளித்து.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com