சிறுகதை: கபால மோட்சம்!

Old People and a Man | Tamil short story
Old People and a Man| Tamil short storyAI Image
Updated on
Kalki Strip
Kalki Strip

போலீஸ் நிலையத்தின் மஞ்சள் விளக்கு அவன் முகத்தில் நேரடியாக விழுந்தது. கையில் நடுக்கம் இல்லை. கண்களில் கண்ணீர் இல்லை. குரலில் தயக்கம் இல்லை.

“நான் தான் செய்தேன்,” என்றான்.

மேஜையின் மறுபுறம் உட்கார்ந்திருந்த சப்-இன்ஸ்பெக்டர் நிமிர்ந்து பார்த்தார்.

“என்ன செய்தாய்?”

“இரண்டு பேரைக் கொன்றேன். அறுபதுக்கு மேலில்லை… எழுபதுக்கு மேலானவர்கள்.”

அறையில் அமைதி விழுந்தது. கேள்விகள் எழுவதற்கு முன் அவன் தொடர்ந்தான்.

“தப்பிக்க வரல சார். நிம்மதியா இருக்க வர்றேன்.”

***

அன்று மாலை - நகரத்தின் வெளிப்புறம். விளக்குகள் சரியாக எரியாத தெரு.

ஒரு தனித்த வீடு.

அவன் ஒரு திருடன். ஆனால் பெரிய கதை எதுவும் இல்லை. சாதாரணன். வயிற்றுக்காக கற்றுக்கொண்ட கைவேலை.

ஜன்னலின் கம்பியை மெதுவாக தள்ளினான். உள்ளே அமைதி. டிவி ஓசை இல்லை. மனித சுவாசம் கூட கேட்கவில்லை. அலமாரி திறந்தான். நகை பெட்டியைத் தொட்டான்.

“பசிக்குதா?”

அவன் உடல் முழுக்க மின்சாரம் பாய்ந்தது. திரும்பிப் பார்த்தான்.

வெள்ளை சேலை. குலுங்கும் கைகள். ஆனால் கண்களில் பயம் இல்லை.

“சாப்பிட்டா நல்லா இருக்கும்,” அந்த மூதாட்டி சொன்னாள்.

அவன் ஓடவில்லை. கத்தவில்லை. நம்ப முடியாமல் நின்றான்.

அடுப்பில் சாதம். சாம்பார். ஒரு பொரியல்.

“முதல்ல சாப்பிடு. அப்புறம் பேசலாம்.”

அவன் உட்கார்ந்தான். பசிக்காக இல்லை. அந்த வார்த்தையின் காரணமாக.

***

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com