ஜோக்ஸ்: என்னது நாக்கை கடிச்சுக்கிட்டாறா?

Political jokes...
cartoon: pillai
வாசுதேவன்

எழுதுவதின் மேல் இருக்கும் ஆர்வம் காரணமாக, பல ஆண்டுகளாக என் பெயரிலும் ( வாசுதேவன் ), புனை பெயரிலும் ( மஞ்சுதேவன் ) (Pen name. Manjudevan) எழுதி வருகிறேன். பல்வேறு பத்திரிகைகளில் எனது படைப்புக்கள் வந்துள்ளன. பணி நிமித்தம் கர்நாடகா, தமிழ் நாடு, மேற்கு வங்காளம், குஜராத், மகாராஷ்டிரா பகுதிகளில் வேலை செய்யும் பொழுது, பல்வேறு மக்களை சந்திக்கவும், பழகவும் கிடைத்த வாய்ப்புக்கள், பெற்ற அனுபவங்கள் எழுத உதவுகின்றன

Updated on: 

"தலைவர் மேடையில் பேசும்பொழுது 'ஹா!' என்று கத்தினாரே ஏன்?"

"நாக்கைக் கடித்துக் கொண்டு விட்டாராம்..!"

*******************
"போருக்குப்போன மன்னர் எதிரி மன்னரிடம் எப்படி சிக்கினராம்..!"

"அவசரத்தில் எதிரி நாட்டு பதுங்கு குழியில் பதுங்கி இருக்காரு..!

*******************
"தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது தப்பாகிவிட்டதா... ஏன் என்னாச்சு?"

"அவரை யார் பார்க்க வந்தாலும், உடம்புக்கு என்ன செய்கிறது என்று விசாரிக்கிறார். கழுத்தில் ஸ்டெதாஸ்கோபுடன்..!"

*******************
" நம்ம தலைவர் பணம், பதவி இரண்டையும் துச்சமாக எண்ணுவாரா ஆச்சர்யமா இருக்கே..!"

"இரண்டும் அவருக்கு கிட்டாதுன்னு, அவருக்கு தெரியுமாம் ..!"

*******************

"பாடுபட்டு வாங்கிய பட்டுப்புடவை..!"

என்னாச்சு?

"பட்டு போய்விட்டதாம்..!

logo
Kalki Online
kalkionline.com