நல்ல தொடக்கம்!

தேசிய கீதம்!
தேசிய கீதம்!

லகத்தில் வேடிக்கையான உண்மை ஒன்று உண்டு. எதையுமே ஆரம்பம் செய்வது கொஞ்சம் சிரமம். ஆரம்பித்து விட்டால் பத்து பேர் சேர்ந்துகொண்டு பிரமாதப்படுத்தத் தயாராக இருப்பார்கள். Starting trouble நம் தேசிய வியாதி. ஏன் மனித குலப் பொது அம்சம்.

ஒரு விழா முடிந்து 'தேசிய கீதம்' என்று அறிவித்தால் மேடையில் இருப்பவர் மக்களைப் பார்ப்பார். மக்கள் மேடையை முறைப்பார்கள். இவரைப் பார் அவரைப் பார் என்று சுவரைப் பார்த்து முழிப்பார்கள். யாராவது 'ஜன' என்று சத்தம் கொடுத்து ஆரம்பம் செய்தால், 'கண மண' சத்தம் காதைக் கிழிக்கும்.

எப்படித் தொடங்குவது என்ற இந்தத் தடுமாற்றத்தை ஒழிக்க சட்டென்று தொடங்க, ஒரு நல்ல பழக்கத்தை நமது பெரியோர்கள் ஏற்பாடு செய்தார்கள். பிள்ளையாரை வணங்கி ஆரம்பம் செய் என்று பழக்கிவிட்டார்கள். பல கீர்த்தனைகள் தெரிந்த பாகவதர் கூட எதைப் பாடுவது என்று சங்கடப்படாமல் ‘வாதாபி கணபதி’ என்று ஆரம்பித்து மற்றவர்களைத்தான் சங்கடப்படுத்துவார்!

இரண்டு மனிதர்கள் சந்தித்தால் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று தடுமாற வேண்டாதபடி “சௌக்கியமா?” என்ற கேள்வியைக் கண்டுபிடித்தாரே அந்த மனுஷர் வாயில் அரைக் கிலோ சர்க்கரை போட வேண்டும். அடாடா! அவருக்குச் சர்க்கரை வியாதி இல்லாத சவுக்யம் இருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
உங்கள் மூளையை சரியாக புரோகிராம் செய்யுங்கள்! 
தேசிய கீதம்!

இந்த ‘சௌக்கியமா?’  என்ற கேள்வி மாதிரிதான் பிள்ளையார் வணக்கம். கலைகளை,  திறமையை, ஆற்றலை வளர்க்கும் நல்ல தொடக்கம் பிள்ளையார் வணக்கம்.

என்ன பெரிய கொள்கை? 'utility - Beauty என்ற இரண்டில் எது பெரிது?' என்றால் - utility is the best beauty என்றபடி - வாழ்க்கை பிறருக்குப் பயன்படவே என்பது பிள்ளையாரிஸம்!

அழகாய் இருக்க  ஆசைப்படு. அழகை இழந்தாவது அடுத்தவர்க்குப் பயன்படு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com