பஞ்சு மிட்டாய் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? அதை தமிழகத்தில் தடை செய்ததன் பின்னணி என்ன?

நுகர்வோர் பாதுகாப்பு!
பஞ்சு மிட்டாய்
பஞ்சு மிட்டாய்

ஞ்சுமிட்டாய்கள் குழந்தைகளையும் பெரியவர்களையும் கவரும் ஒரு வித இனிப்பு பொருள்.  இதை அழுத்தினால் மிகவும் சிறிய அளிவிலேயே மிட்டாய்போல இருக்கும். இந்த சிறிய அளவுதான் இயந்திரத்தின் மூலம் பஞ்சுபோல் பெரியதாக உருமாறுகிறது.

பஞ்சு மிட்டாய் தயாரிக்கும் கருவியைப் பார்த்திருப்பீர்கள்.  அதன் நடுவில் இருக்கும் பகுதி சுற்றிக் கொண்டே இருக்கும்.  அதில் வாசனை சேர்க்கப்பட்ட சர்க்கரையை உட்செலுத்துவார்கள். அங்கு வெப்பம் 300 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். இது அந்த சர்க்கரையை உருக வைக்கும்.  நடுப்பகுதி சுற்றும்போது உருகிய சர்க்கரை பல திசைகளில் செலுத்தப்படுகிறது. அது நூலாக மாறுகிறது.  அந்த நூல்களை ஒரு குச்சியில் சேகரிக்கும்போது அது பஞ்சு மிட்டாய் ஆகிறது.

பஞ்சு மிட்டாயை நிறைய சாப்பிட்டால் இருமல் வரும் என்பார்கள்.  ஆனால், இப்போது வேறொரு ஆபத்து சேர்ந்திருக்கிறது!

புதுவை கோரிமேடு பகுதியில் சமீபத்தில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களில் ரோடமைன் பி என்ற உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இதை ஆய்வு செய்தபோது அந்த ரசாயனம் புற்றுநோயை உருவாக்கும் என தெரியவந்தது. இதையடுத்து புதுவையில் ரசாயனம் கலந்த பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை மெரினா  கடற்கரையில் விற்பனை செய்யப்படும்போது, வண்ணங்கள் அதிகம் சேர்க்கப்பட்ட, பத்தாயிரம் ​ரூபாய் மதிப்புள்ள, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஞ்சுமிட்டாய் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பஞ்சு மிட்டாய்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதன் மாதிரிகளை கிண்டியில் உள்ள உணவு பகுப்பாய்வு கூடத்திற்குப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அதை ஆய்வு செய்ததில் அந்தப் பஞ்சு மிட்டாய்களிலும் ரொடமைன் பி (Rhodamine-B)  எனப்படும் செயற்கை நிறமூட்டி வேதிப்பொருள் கலந்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 பிரிவின்படி, தரம் குறைவான மற்றும் பாதுகாப்பற்ற உணவாகும்.

இதையும் படியுங்கள்:
கிட்னி கல்லை கரைக்கும் அற்புதக் காய்.. மாதம் ஒருமுறையாவது சாப்பிடுங்க! 
பஞ்சு மிட்டாய்

எனவே, உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 பிரிவின்படி, ரொடமைன் பி எனப்படும் செயற்கை நிறமூட்டியைக்கொண்டு உணவு பொருட்கள் தயாரித்தல், பொட்டலமிடுதல், விற்பனை செய்தல் ஆகியவை தண்டனைக்குரிய குற்றமாகும்.

தவிர, பஞ்சு மிட்டாய்களில் பச்சை, ஊதா, பிங்க் நிறங்களை கொண்டுவர பல்வேறு நிறமிகள் சேர்க்கப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், உணவு பாதுகாப்புத்துறையின் பரிந்துரையின்பேரில் பஞ்சு மிட்டாய் தமிழகத்தில் தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com