Amazon Kindle முதல் ISBN வரை: புத்தக வெளியீட்டின் ரகசியங்கள்...

0 ரூபாய் முதலீட்டில் உங்கள் புத்தகத்தை உலக அளவில் விற்க முடியுமா? பதிப்பகம் இல்லாமலே புத்தகம் வெளியிடுவது எப்படி? முழுமையான டிஜிட்டல் வழிகாட்டி
how to publish a book
how to publish a bookImage credit: AI Image
Updated on
Kalki strip
Kalki strip

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், ஒரு எழுத்தாளராக உங்கள் படைப்பை உலகிற்கு கொண்டு செல்வது மிகவும் எளிதானது. முன்பு பதிப்பகங்களைத் தேடி அலைய வேண்டியிருந்தது, ஆனால் இன்று இணையத்தின் உதவியுடன் உங்கள் வீட்டிலிருந்தபடியே ஒரு புத்தகத்தை உலகத்தரம் வாய்ந்த முறையில் வெளியிட முடியும். அந்த வகையில் இன்றைய டிஜிட்டல் உலகில் புத்தகத்தை வெளியிடுவது எப்படி (how to publish a book) என்பதை குறித்து பார்ப்போமா ?

புத்தக வெளியீட்டின் முதல் மற்றும் மிக முக்கியமான படி, உங்கள் கையெழுத்துப் பிரதியை முழுமையாகத் தயார் செய்வது. உங்கள் கதையோ அல்லது கட்டுரையோ எதுவாக இருந்தாலும், அதைச் சீரான முறையில் தட்டச்சு செய்து கொள்ளுங்கள். இலக்கணப் பிழைகளை நீக்கி, வாக்கிய அமைப்புகளைச் சரிபார்க்க Proofreaders உதவியைப் பெறுவது உங்கள் புத்தகத்தின் தரத்தை உயர்த்தும். கையெழுத்துப் பிரதியை Word அல்லது PDF வடிவில் தயார் நிலையில் வைத்துக்கொள்வது அவசியம்.

புத்தகத்தை வெளியிட இரண்டு முக்கிய வழிகள் உள்ளன: பாரம்பரியப் பதிப்பகம் மற்றும் சுய வெளியீடு.

பாரம்பரிய முறை:

பாரம்பரிய முறையில், பதிப்பகம் உங்கள் புத்தகத்தின் தரத்தைப் பரிசோதித்து, அவர்களே அச்சிடுதல் மற்றும் விநியோகத்தை கவனித்துக்கொள்வார்கள். சுய வெளியீட்டில் நீங்கள் ஒரு எழுத்தாளராக முழு கட்டுப்பாட்டையும் கொண்டிருப்பீர்கள். அமேசான் கிண்டில் போன்ற தளங்கள் மூலம் எவரும் மிக எளிதாகத் தங்கள் புத்தகத்தைச் சுயமாக வெளியிட முடியும்.

புத்தகத்தை வணிக ரீதியாக வெளியிட ISBN (International Standard Book Number) அவசியம். இது உங்கள் புத்தகத்திற்குத் தனித்துவமான அடையாளத்தை அளிக்கிறது. சுய வெளியீட்டில், நீங்கள் இதைப் பெற வேண்டும். அதேபோல், உங்கள் படைப்பைத் திருட்டில் இருந்து பாதுகாக்க காப்புரிமை சட்டத்தைப் புரிந்துகொள்வது அவசியம். இந்தியாவில் ISBN தற்போது இலவசமாகச் செய்ய முடியும். இதை ஆன்லைன் மூலம் நீங்கள் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
ஓடிடி முதல் வீடியோ கேம்ஸ் வரை: அசுர வேகத்தில் வளரும் இந்த துறையில் லட்சங்களில் சம்பாதிக்கலாம்!
how to publish a book

புத்தகம் அச்சு வடிவில் மட்டுமல்லாமல், மின்னூல் வடிவில் வெளியிடுவது இன்றைய காலத்தின் கட்டாயம். உங்கள் புத்தகத்தை EPUB அல்லது MOBI போன்ற மின்னூல் வடிவங்களுக்கு மாற்ற வேண்டும். மேலும், வாசகர்களைக் கவரும் வகையில் ஒரு தொழில்முறை அட்டைப்படத்தை வடிவமைப்பது மிக முக்கியம். முதல் பார்வையில் வாசகர்களை ஈர்க்கும் அட்டைப்படம் உங்கள் புத்தகத்தின் விற்பனையை அதிகரிக்க உதவும்.

புத்தகம் வெளியானவுடன், அதைச் சரியாக சந்தைப்படுத்த வேண்டும். அமேசான், கூகுள் பிளே புக்ஸ் மற்றும் ஃப்ளிப்கார்ட் போன்ற இணையதளங்கள் உங்கள் புத்தகத்தை உலகெங்கிலும் உள்ள வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும். சமூக ஊடகங்களான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் மூலம் உங்கள் புத்தகத்தைப் பற்றிய விளம்பரங்களை மேற்கொள்வது புதிய வாசகர்களைச் சென்றடைய உதவும்.

என்ன, எழுத்தாளர்களே! உங்கள் படைப்புக்களை உலகிற்கு கொண்டு செல்ல தயாரா?

logo
Kalki Online
kalkionline.com