ஓடிடி முதல் வீடியோ கேம்ஸ் வரை: அசுர வேகத்தில் வளரும் இந்த துறையில் லட்சங்களில் சம்பாதிக்கலாம்!

Animation and Multimedia courses
Animation and Multimedia courses
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

டிஜிட்டல் யுகத்தின் அசுர வளர்ச்சியால் அனிமேஷன் மற்றும் மல்டிமீடியா துறைகளில் வேலைவாய்ப்புகள் பன்மடங்கு பெருகியுள்ளது. +2வுக்குப் பிறகு அனிமேஷன், விஷுவல் எபெக்ட்ஸ், கேம் டிசைன் போன்ற படிப்புகளைத் தேர்ந்தெடுப்பது திரைப்படங்கள், விளம்பரங்கள் மற்றும் ஓடிடி தளங்களில் மிகச்சிறந்த எதிர்காலத்தை அமைத்துத் தரும்.

1) +2வுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கக்கூடிய முக்கிய படிப்புகள்: 

இளங்கலை பட்டப்படிப்பில் 3 முதல் 4 ஆண்டுகள் கொண்ட முழுநேரப் பட்டப்படிப்பு. அனிமேஷன், கிராபிக்ஸ், பிஎஃப்எக்ஸ் மற்றும் கேம் டிசைன் ஆகியவற்றை ஆழமாக கற்றுத்தரும்.

டிப்ளமோ அண்ட் சான்றிதழ் படிப்புகள் 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரையிலான குறுகிய கால செய்முறைப் படிப்புகள். வேலைக்குச் செல்ல உடனடியாகத் தயார்படுத்துபவை.

Animation & Multimedia, 

Visual Communication, 

Animation & Graphic Design, 

Gaming &  Animation போன்றவற்றை தேர்வு செய்யலாம். 

2) டிப்ளமோ & சான்றிதழ் படிப்புகள்:

Advanced Diploma in 3D Animation & VFX

Diploma in Graphic & Web Design

UI/UX Design Professional Certificate

3) இந்தத்துறையில் நீங்கள் கற்றுக்கொள்ளும் முக்கிய திறன்கள்:

* 2D & 3D அனிமேஷன்: 

இதில் பாரம்பரிய வரைதல், கேரக்டர் டிசைன் மற்றும் அடோப் அனிமேட் (Adobe Animate) பயன்பாடுகள் கற்றுத்தரப்படும். 3D அனிமேஷனில் மாடலிங், டெக்ஸ்சரிங் (Texturing), லைட்டிங், ரிக்கிங் (Rigging) மற்றும் ரெண்டரிங் (Rendering) போன்றவையும் கற்றுத் தரப்படும். கதாபாத்திரங்களை வடிவமைத்தல் மற்றும் அசைவூட்டுதல் போன்றவற்றை கற்றுக்கொள்ளலாம்.

*விஷுவல் எஃபெக்ட்ஸ் (VFX): 

அனிமேஷன் மற்றும் மல்டிமீடியாவில் விஷுவல் எஃபெக்ட்ஸ் என்பது கற்பனையான காட்சிகளை நிஜம் போல திரையில் உருவாக்குவதாகும். இது ஆபத்தான, விலையுயர்ந்த அல்லது நிஜத்தில் சாத்தியமில்லாத காட்சிகளை கணினி வரைகலை (CGI) மற்றும் மென்பொருட்கள் மூலம் தத்ரூபமாக உருவாக்க உதவுகிறது. அதாவது திரைப்படங்களில் பார்க்கப்படும் பிரம்மாண்ட கிராபிக்ஸ் காட்சிகளை உருவாக்குதல். 

இதையும் படியுங்கள்:
டிஜிட்டல் உலகில் ஜாக்கிரதை! ஆன்லைன் பயிற்சி வகுப்புகளும்... ஒளிந்திருக்கும் மோசடிகளும்!
Animation and Multimedia courses

*கேம் டிசைன் & டெவலப்மென்ட்: 

அனிமேஷன் மற்றும் மல்டிமீடியா துறையில் கேம் டிசைன் மற்றும் டெவலப்மென்ட் என்பது கலை, தொழில்நுட்பம் மற்றும் கதைசொல்லல் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த கலவையாகும். இது ஒரு கேம் கருத்தியலில் இருந்து, இயங்குதளத்தில் (Platform) விளையாடக்கூடிய இறுதிப் பொருளாக மாறுவது வரையிலான முழு செயல்முறையையும் குறிக்கிறது. அதாவது வீடியோ கேம்களுக்கான சூழல் மற்றும் புரோகிராமிங் அமைப்புகளை உருவாக்குதல். 

*UI/UX வடிவமைப்பு: 

UI/UX (User Interface & User Experience experience) வடிவமைப்பு என்பது அர்த்தமுள்ள டிஜிட்டல் அனுபவங்களை உருவாக்குவதற்காக இணைந்து செயல்படும் இரண்டு துறைகளின் கலவையாகும். மொபைல் செயலிகள் மற்றும் இணையதளங்களை பயனர்களுக்கு ஏற்றவாறு வடிவமைத்தல். அதாவது இணையதளங்கள் மற்றும் மொபைல் செயலிகளைப் பயன்படுத்த எளிதாகவும், பார்க்க அழகாகவும் மாற்றும் ஒரு டிஜிட்டல் வடிவமைப்பு முறையாகும். இது பயனர்களின் தேவைகளை மையமாகக் கொண்டு இயங்குகிறது.

4) வேலைவாய்ப்புகள் (Career Opportunities): 

அனிமேஷன் மற்றும் மல்டிமீடியா துறை திரைப்படங்கள், தொலைக்காட்சி, விளம்பரம், கேமிங் மற்றும் கல்வித் துறைகளில் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்பத்திறன் கொண்டவர்களுக்கு இத்துறையில் உலகளாவிய அளவில் மிகச்சிறந்த வேலை வாய்ப்புகள் மற்றும் அதிக வருமானம் ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.

இதையும் படியுங்கள்:
இடைத்தரகர் இல்லாத டிஜிட்டல் புரட்சி! பிளாக்செயின் தொழில்நுட்பம் என்றால் என்ன?
Animation and Multimedia courses

படிப்பை முடித்தவுடன் அனிமேட்டர் (Animator), கேரக்டர் டிசைனர் (Character Designer), விஎஃப்எக்ஸ் ஆர்ட்டிஸ்ட் (VFX Artist), கேம் டெவலப்பர் (Game Developer), கிராபிக் டிசைனர் (Graphic Designer) மற்றும் வீடியோ எடிட்டர் (Video Editor) போன்ற பல்வேறு பொறுப்புகளில் உலகளாவிய நிறுவனங்களில் பணிபுரியலாம்.

logo
Kalki Online
kalkionline.com