விமானத்தில் சேரும் மனித கழிவுகள் (Aircraft waste) எப்படி சுத்தம் செய்யப்படுகிறது அல்லது எவ்வாறு வெளியேற்றப்படுகிறது என்பது அனைவருக்கும் ஏற்படக்கூடிய சந்தேகமாகும். விமானத்தில் உள்ள டாய்லெட்டில் சேரக்கூடிய கழிவுகளும் சிறுநீரும் சேர்ந்து விமானத்தின் பின்புறம் உள்ள ஒரு நீல நிறத் தொட்டியில் குழாய் மூலம் உறிஞ்சப்படுகிறது.
இந்த நீல நிறத தொட்டி ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மூலம் செய்யப்பட்டுள்ளது. எல்லோரும் நினைப்பது போல் வானத்தில் விமானம் பறந்து கொண்டிருக்கும்போது கழிவுகள் கீழே கொட்டப்படுவது இல்லை. அவ்வாறு கொட்டினால் விமான சட்ட திட்டத்தின்படி அந்த விமானத்துக்கு அபராதம் விதிக்கப்படும்.
விமானத்தின் பின்புறமுள்ள இந்த நீல நிறதொட்டிக்கு 'Blue Sanitary Tank' என்று பெயர். இந்த டேங்க் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மூலம் உருவாக்கப்பட்டது. டாய்லெட்டில் சேரும் கழிவுகள் வேக்குவோம்கிளீனர் மூலம் ஆட்டோமேட்டிக்காக இந்த ப்ளூ தொட்டியில் சேருகிறது. பொதுவாக விமானத்தில் வேக்யூம் டாய்லெட் தான் பயன்படுத்தப்படுகிறது. இதனால் தண்ணீர் குறைவாக தேவைப்படும். டாய்லெட் 'நான்-ஸ்டிக் மெட்டீரியல்' (Non-Stick Material) மூலம் உருவாக்கப்பட்டது.
பின்னர் விமானம் தரை இறங்கியதும் இந்த நீல நிற தொட்டிக்கு கீழே ஒரு ஹனி ட்ரக் நிறுத்தப்படும். இந்த ஹனி டிரக்கில் இரண்டு டேங்க்குகள் உள்ளன. ஒன்றில் மனித கழிவுகளும் மற்றொன்றில் தண்ணீரும் சேரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இவை இயந்திரங்கள் மூலமாக நீல நிற தொட்டியில் இருந்து உறிஞ்சப்பட்டு ஹனி ட்ரக் டேங்கில் சேருகிறது. பத்து நிமிடத்தில் இந்த சுத்தப்படுத்தும் வேலை முடிந்து வடும்.
பின்னர் இந்த ஹனி டிரக் சம்பந்தப்பட்ட கார்ப்பரேஷன் டிரைனேஜ்க்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு கொட்டப்படுகிறது. கார்ப்பரேஷன் டிரைனேஜில் இந்த கழிவுகள் சேர்ந்து விடும்.
இந்த முறையில்தான் விமானத்தில் உள்ள கழிவுகள் சுத்தம் செய்யப்படுகிறது. விமானத்தில் உள்ள கழிவு சம்பந்தப்பட்ட பாகங்கள் சேதமடைந்திருந்தால் கழிவுகள் கசிய வாய்ப்பு உள்ளது. அது மிகவும் அபூர்வம்.
எக்காரணம் கொண்டும் பறந்து கொண்டிருக்கும்போது கழிவுகளை வெளியேறக் கூடாது. அவ்வாறு வெளியேற்றினால் சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் அபராதம் கட்ட வேண்டி வரும்.